நமது உணவுப் பழக்கங்களும் தஞ்சை விவசாய தற்கொலைளும்நமது தட்டில் இருக்கும் உணவு தஞ்சை விவசாயிகளின் தற்கொலையோடு நேரடி தொடர்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை கைவிட்டு அரிசி சோற்றின் மீது நம் சமூகம் தன கவனத்தை திருபியதன் ஒரு பக்க விளைவுதான் தஞ்சை விவசாய தற்கொலைகள். 

1965க்கு  முன் அன்றாட வாழ்வில் கம்மங்கூழும், கேப்பைக் கழியும் நீக்கமற நிறைந்திருந்தன, காலையில் வடிகஞ்சி, பின்னர் வயல் வேலை அப்புறம் கம்மங்கூழ் என்று ஓடியது தினசரி வாழ்வு.

பின்னர் தட்டில் அரிசி என்பது ஒரு கௌரவம் என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்தது. இப்படியாக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவிற்கு தமிழன் கொஞ்சம் கொஞ்சமாக சொன்னான் குட்பை.
இது வாய்வு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் சர்க்கரை என, பல வியாதிகளுக்கு வெல்கம் சொன்னது. பெருகிவந்த சந்தை வாய்ப்புகளுக்காக விவசாயிகளும் அரிசி விவசாயதிற்குள் முழுமையாகவர பின்னாடியே பிரச்சனைகளும்.

நாம்  சிறு தானியங்களை நோக்கி நம் கவனத்தை திருப்பினால் அதற்கான சந்தை ஒன்று தானே உருவாகும். சிறுதானியங்கள் தண்ணீர் அதிகம் கேட்டகாத மானாவாரி பயிர்கள் என்பது ஒரு கூடுதல் பலம். தண்ணீருக்காக தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் விவசயிகளின் நிலையும் மாறும். தூங்குவது போல் நடிக்கும் கர்நாடகாவை தொங்கவேண்டம் என்பது இன்னொரு பலம். 

இந்த கருத்தை விவசாய நலன் விரும்பும் அமைப்புகளும் நம்மாழ்வார் போன்ற வேளாண் விற்பன்னர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதை விரைவு படுத்த ரேசன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகிக்கப்பட்டாலே ஒரு பெரும் புரட்சி வரும். 

தக்க சமயத்தில் ஒரு அலுவலர் முயன்றால் முதல்வர் செய்யக்கூடிய வாய்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. ஆரோக்கியமான அடுத்த தலைமுறை வளர்வதையும் இது உறுதி செய்யும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  

நாம் கொஞ்சம் மாறினால் போதும். சிறுதானியங்களை கொஞ்சமாக உணவில் சேர்ப்பது எங்கோ ஒரு விவசாயியின் உயிரைக் காக்கும். கொஞ்சம் சிந்திப்போம்.

அன்பன்
மது
விவசாயம், கல்வி
$$$$$$$$$$ரிலாக்ஸ்$$$$$$$$$$$

இந்த வார காணொளி


Comments

 1. நாம் கொஞ்சம் மாறினால் போதும்.

  ReplyDelete
 2. வணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html

  ReplyDelete
 3. Anonymous24/1/14

  வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்... சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Post a Comment

வருக வருக