காலம் தோறும் பிராமணியம் பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று
காலம் தோறும் பிராமணியம்
பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று
சுல்தான்கள் காலம் – முகலாயர் காலம்
ஆசிரியர் அருணன்

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் அதற்கான ஆயத்தப் பணிகளுக்காக அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
இந்தியாவிற்கு முகமதியர் வருகை குறித்து எவ்வளவு வெறுப்புணர்ச்சியை அறியாத பிள்ளைப் பருவத்தில் மாணவர் மனதில் நஞ்சாய் விதைக்கிறது என்பதை என்னும் பொழுது திகீர் என்று இருக்கிறது. 

ஒருமுறை பிபிசியில் பாக்கிஸ்தான் வகுப்பறை ஒன்றை காட்டினார்கள். அங்கே மேப்பில் பாகிஸ்தானை காட்டி இது உனது நாடு என்றும் இந்தியாவை காட்டி இது உனது எதிரியின் நாடு எனவும் பிஞ்சு மனங்களை நஞ்சாக்கி கொண்டிருந்தனர். அதையே நாம் கொஞ்சம் நாகரிகமாக செய்கிறோம். 

இதுகாறும் நான் நினைத்திருந்தவாறு முகலாயர் வருகை அத்துணை வெறுப்புக்கு உரியதல்ல என்பதை தெள்ளென உணர்த்தியது இந்தநூல். நம் பாடநூல்கள் உண்மையை பகர இன்னும் எத்துனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?

பல ஆச்சர்யமான உணர்வுகளை என்னுள் எழுப்பியது. குறிப்பாக வெகுகாலத்திற்கு தங்கள் மீது ஜிசியா வரியை விழாதவாறு பார்த்துகொண்டது பிராமணியம். பிராமணம் உருவாக்கிய மதத்தை பின்பற்றுவர்கள் வரி செலுத்த மதத்தை உருவாக்கிய பார்பனர்கள் வரிவிலக்கை அனுபவித்தனர் என்பதே ஒரு நகைமுரண். (இப்போ ஹுண்டாய் நிகழ்வை வைத்து பார்த்தல் ஜிசியாவரி ஆலோசனையே அவா தான் கொடுத்திருப்பா என்று தோன்றுகிறது)
திடீரென ஒருநாள் பிராமணர்கள் மீது விதிக்கப் பட்ட ஜிசியா வரியை எதிர்த்து சாகப் போறோம் என்று சுல்தானை அவா மிரட்டியது ஒரு காமெடி. அவா யாரவது இறந்தால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என சொன்னார்கள் இருநூற்றுக்கு மேல் அவர்கள் இறந்தும் சுல்தான் வரிவிதிப்பை தளர்த்தவில்லை. 

இவ்வாறு அரசவைகளில் செல்வாகிழந்த பிராமணியம் மெல்ல நகர்ந்து கிராமங்களில் நிலை கொண்டதையும் பார்க்கிறோம். இன்று வரை கிராமங்களை ஏன் திருத்த முடியவில்லை என்ற கேள்விக்கு விடை இப்போது கிடைத்ததா? 

தைமூர் சொந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் டில்லி சுல்தான் அவனை எதிர்த்து போரிட்டு தோற்றதும், காஸ்மீர் இந்து மன்னர் இஸ்லாமிற்கு மாறி பசு மாமிசம் சாப்பிட்டதும் வரலாற்று அதிர்வுகள். இன்னும் நாம்கண்டு கொள்ளாத எத்துனை அதிர்வுகள் வரலாறு நமக்கு காட்ட இருக்கிறதோ தெரியவில்லை. 

வரலாற்றில் கொண்டாடப்படும் மாமன்னன் கிருஷ்ண தேவ ராயன் தவமிருந்து பெற்ற மகனை விஷம் கொடுத்து கொன்றது பிராமணியம். சதிகாரர்கள் அனைவரும் பிராமணர்கள் என்பதால் சிறையில் அடைக்கப் பட்டனர். பிராமணர்கள் கொலை செய்யப்பட்டால் அரசன் பாவியாகி பண்ணி மூஞ்சியுடன் நரகத்தில் உழல்வான் என்று பல பிம்பங்களை அவா ஏற்படுத்தி வைத்திருந்ததுதான் காரணம். கீனா தேனா ரானாவுக்கே இந்த நிலை என்றால் சுப்பனையும் குப்பனையும் நினைத்து பாருங்கள்.

இஸ்லாமியர் வருகைக்குப் பின்னர் தான் ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட பூர்வ குடிகள் இஸ்லாத்தை தழுவி வர்டிகள் மொபிலிடியை அனுபவித்தனர். ஒரு சில நாட்களுக்காவது பறையர் குல குஸ்ருகான் அரசனதும் இந்தக் காலத்தில் நடந்தது. தகவல் எப்படி ஆழமாக இருக்கிறது பார்த்தீர்களா?

பெண்டிர் நிலை
குலமானத்தைகாக்க பெண்களை பலியிடும் வழக்கத்தை பிராமணியம் கொண்டிருந்தது. எப்படியல்லாம் அவா குலத்துப் பெண்களே இழி நிலையில் வைக்கப் பட்டனர் என்பதை பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.

இஸ்லாமிய ஆளுகையில் பிராமணத்தின் வாள்கள் வீரியம் இழந்த பகுதிகளில் வெடித்துக் கிளம்பிய மெய்யான பக்தி இயக்கம் இந்த தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு.

வர்ணக் கட்டுகளை தகர்த்து மெய்யான இறைவனை தேடி பாடி பரவசமடைந்த ஒரு இயக்கம் உருவான பின்புலத்தில் இஸ்லாமும் அதன் இறைத்தத்துவங்களும் எப்படி அடிநாதமாய் இருந்தன என்பது எனக்கு ஒரு சந்தோஷ அதிர்வாகவே இருந்தது. 

நாமதேவர், திருலோச்சன், சதனா, பேணி, ராமானந்தர், தன்னா, பீபா, செயின், கபீர், ரவிதாஸ், குருநானக் பிரமாண்டமான ஒப்புயர்வற்ற  ஞானியரய் அவர்களின் பாடல்களோடு அறிமுகப் படுத்தியிருக்கிறது இந்நூல். சாதியத்தை மறுத்து அதனுடன் சமரிட்ட ஒரு மெய்யான பக்தி இயக்கம் தோன்ற தளம் தந்தது முஸ்லீம்களின் ஆட்சி!

இன்னும் எனக்கு பிடித்த விசயங்களை எழுதினால் ஒரு நூறு 

பதிவுகளாவது இட வேண்டி வரும்.

கட்டாயம் வரும்.

ஆயாசத்துடன்
மது

காலம் தோறும் பிரமணியம்

பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று
சுல்தான்கள் காலம் – முகலாயர் காலம்
ஆசிரியர் அருணன்
பதிப்பகம் : வசந்தம் வெளியீட்டகம்
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை
சிம்மக்கல், மதுரை 625
மின்னஞ்சல் : vasanthamtamil@yahoo.co.in
Phone : 2625555, 2641997Comments