வெல்கம் டு தி பஞ்ச்



காவல் துறையை அரசியல் லாபத்திற்காக தலைவர்கள் பயன்படுத்தும் பொழுது என்ன நிகழும் என்று சொல்லும் படம் .தன்னை முடமாக்கிய  தாதாவை பழிதீர்க்க காத்திருக்கும் போலிஸ் அதிகாரியின் மூலம் விரியும் கதை. படத்தில் எனக்கு பிடித்தது பாலிஷ் போட்டு கழுவிய லென்சில் எடுத்தமாதிரி வந்திருக்கும் ஒளிப்பதிவு ..வாவ்.

ஊரடங்கிய ஒரு நேரத்தில் சத்தமில்லாது கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் தப்பிக்க முயல்கையில் சரியாக களத்திற்கு வரும் கதாநாயகன்.  சீறும் பைக்குகள், துரத்தும் கார், ஆளில்லா சாலைகளில் ஆர்ப்பாட்டம். பிரேம் எங்கும் பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்கள் அவற்றில் ஒளிரும் விளக்குகள்  நீளமும் பச்சையும் கலந்த பில்ட்டர் என அருமையான ஒளிப்பதிவு.

கையில் ஒரு துப்பாக்கிகூட இல்லாமல் பறக்கும் பைக்குகளை ஓடியே துரத்தும் ஜேம்ஸ்  மேக்காவ் ஒரு கலக்கல் ஹீரோ. இவர்  எக்ஸ் மென் பஸ்ட் கிளாஸ் படத்தில் சார்லஸ் சேவியராக ஒரு பக்குவப்பட்ட முதிர்ந்த அவுட்புட் கொடுத்திருந்தார். ஜேம்ஸ்  மெக்காவ் படம் என்பதால் பார்த்தது இந்தப் படம். ஆனால் இது ஜேம்ஸின்  படமல்ல. வில்லன் மார்க் ஸ்ட்ராங் படம். மனிதன் சும்மா பட்டய கிளப்பியிருக்கிறார் படத்தின் ஓபனிங் காட்சியிலேயே மிக அசால்டாக ஜேம்ஸுட ன்  மோதி ரொம்ப மேன்லியாக திரும்பி பார்த்து ஜேம்ஸின் முட்டியை சுடுவது இவரது வில்லன் கதாபாத்திரம் எவ்வளவு கூல் என்று சொல்லிவிடுகிறது  .
 
மூன்று வருடம் கழித்து வில்லனின் மகன் சுடப்பட மகனை பார்க்க வருகிறார் வில்லன். கதாநாயகன் முட்டி வீங்கி மணிக்கு ஒருமுறை சலத்தை ஊசி வைத்து உறிஞ்சிக் கொண்டிருக்கிறார். என்ன நடக்குமோ அது நடக்கிறது.

கொலைவெறியுடன் காயம் பட்ட வில்லனின் மகனின் அறைக்கு முன் ரகசியமாக அமர்ந்திருக்கிறார் ஹீரோ. வில்லன் எதிர்ப்பார்த்த படியே வருகிறான். ஆனால் விவரமாக ஒரு அம்மாஞ்சியை மகன் அறைக்குள் அனுப்ப உணர்ச்சிவசப்பட்ட ஹீரோ உள்ளே பாய்ந்து ஒரு அமுக்கு. டை போச்சே கதைதான்.

ஒரு சுவாரஸ்மான திருப்பத்தில் ஹீரோவின் உயிரை காக்கிறார் வில்லன்! தன்னிடம் மாட்டிய ஹீரோவை மிரட்டி மகனை பார்க்கிறார்.

அவன் காயத்தில் இறந்திருக்க அதிர்கிறார் வில்லன். இந்த இடதில்  வெகு நுட்பமான உணர்வுகள் திரையில் விளையாடுகிறது.  படத்தின் அருமையான காட்சிகளில்  ஒன்ற இது. துப்பாக்கி முனையில் ஹீரோவை மார்ச்சுவரிக்குள் அழைத்துவரும் வில்லன் மகன் இறந்த விசயம் தெரியவந்து அழுகிறான் அதை குரூரமாய் ரசிக்கிறான் ஹீரோ! வில்லனின் முழு கவனமும் மகன் மேல் இருக்கையில் மெல்ல  நகர்ந்து ஒரு கத்திரியை  எடுக்கலாம் என்று முயலும் போது மிகச் சரியாக துப்பாக்கி அவன் தலைக்கு வருகிறது! அப்படியே ஹீரோவை துப்பாக்கி முனையில் நிற்கவைத்துக் கொண்டே அழும் வில்லன் வெளியில் போ என்று ஹீரோவை விரட்டுகிறான். சரியாக ஹீரோ கதவின் அருகே போகும் போது  மீண்டும் துப்பாக்கி! ஹீரோவை வைத்து தானே வெளியில் வர வேண்டும். ஜேம்ஸவிட மார்க் ஸ்ட்ராங் இந்தப் படத்தில் ஸ்கோர் செய்த இடங்கள் அதிகம்.
 

கொஞ்சம் கூட போலிஸ் வேலைக்கு அதுவும் துப்பறிகிற வேலைக்கு லாயக்கில்லாத பொண்ணு ஒன்னு இதில் ஹீரோயின். சத்தமில்லாமல் ஒரு அடியாளை தொடர்ந்து ஒரு கண்டைனர் யார்டுக்கு வரும் இவர் கொஞ்சம் ஓவரா பண்ணி  போய் சேருகிறார். அடியாளை தொடரும் இவர் காரை அவன் திரும்பி வரும் வழியில் நடுரோட்டில் பார்க் பண்ணிவிட்டு அவனை ரகசியமாக  பின்தொடர்கிறார்?!! அப்பறம் பஞ்ச் 911 என்கிற க்ளுவை வைத்து ஒரு கண்டைனரை ஓபன் பண்ணி அதிலேயே சாகிறார். அடியாள் ஹீரோயினை கொல்லும் விதத்திலேயே தெரிகிறது அவன் மிக கொடுரமாய்தான் சாகவேண்டும் என்பது. மிக சரியாக ஹீரோ அதை கிளைமாக்சில் செய்கிறார். .ஒரு ஷாட்கன் ஷாட் அடியாளின் மண்டை சிதறி கண்டைனரில் அப்பிக்கொள்கிறது. 


ரொம்ப ரசித்த படம். ஒருமுறை பார்க்கலாம் . ஹாலிஉட் சீக்கு இந்தப் படத்திற்கும்  வரலாம். அடுத்த பாகம் ஹாங்காக் யார்ட் என்ற பெயரில் வரலாம் என தெரிகிறது.

படக்குழு

இயக்கம்
:
ஈரான் கிரீவ் 
ஹீரோ
:
ஜேம்ஸ் மேக்காவ் 
வில்லன்
:
மார்க் ஸ்டராங் 
இசை
:
ஹாரி எஸ்காட்  
எடிட்டிங்
:
கிரிஸ் கில் 
காமிரா
:
எட் வைல்ட்

அன்பன்
மது 

Comments