நாளைய நம்பிக்கை ...


ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி.

இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார்.

இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார்.

இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ஓடுவதால், 1 சதவிகிதம் கூட புகை மாசுவை ஏற்படுத்தாது.

குறைந்த அளவில் ஓசை மட்டும் வெளிப்படும், பேருந்தின் மேல் பகுதியில் சிலிண்டர்கள் இடம்பெற்றிருக்கும்.

இதில் இருந்து குழாய்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்தி பேருந்தின் பின்பகுதியில் உள்ள நவீன கருவிகள் மூலம் ஹைட்ரஜன் வாயு உருவாகி இயங்கும்.

8 சிலிண்டர்களில் உள்ள தலா 30 கிலோ ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி 220 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனகே இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பேருந்தை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy:-  பசுமைப் புரட்சி Green Revolution  

Comments

  1. ஆகா.. இது எவ்வளவு பெரிய விஷயம்?!!!
    இதை எந்த மீடியாவும் பெரிசா போடலயே! உங்க கண்ணுல மட்டும் எப்படிப் பட்டுச்சு! செம்படவனுக்கு தூண்டில்ல கண்ணு னு சும்மாவா சொன்னாங்க? இதே மாதிரி மதுரைப் பேராசிரியர் ஒருவர் அழிக்க முடியாத பாலிதீன்களைக் கொண்டு தார்ரோடு மாதிரி போடலாம்னு கண்டுபிடிச்சுச் சொன்னார் அதுவும் இன்னும் நடைமுறைக்கு வரல... ம்... இன்னும் எத்தனை ஜி.டி.நாயுடுகளைத்தான் இந்த நாடு இழக்கப்போகுதோ..

    ReplyDelete
  2. எங்க பிடிச்சீங்க இந்த மேட்டரை .சூப்பர்

    ReplyDelete

Post a Comment

வருக வருக