Skip to main content

அன்பே சிவம்.
ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.அதிக தூரம்
பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும்
பையில் எடுத்து கொண்டான்.
காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று
அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர்
புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த
களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க
ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை
பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை
நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை
வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை
பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு
வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும்
மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட
ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி
ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக
ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க
ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி
சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும்
பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன்
மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று
கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை
மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம்
அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக
இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன்
சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக
சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.
அறிமுகம்
இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,ஆறுதலான வார்த்தை,சின்ன உதவி செய்து
பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான்
இருக்கிறார்.
//கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்//. உண்மையான வரி. யார் யார் சிவம்? நீ நான் சிவம். அன்பே சிவம் என்று அழகாக கவிஞன் கூறியதை ஞாபகப்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமன்னிக்கவும் ஒரே கருத்தூட்டம் 3 முறை பதிவானதால் நீக்கி விட்டேன்.
Delete