கடவுள் ஏன் கல்லானான்...

இரண்டு நாட்களுக்கு முன்னர் விழி இழந்த மாற்று திறனாளிகள் சென்னையில் அரசாங்க வேலை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 120 பேரும் மாலையில் விடுவிக்கப் பட்ட போதிலும் உண்ணாவிரதம் இருந்த 19 பார்வையற்ற போராளிகளை தனியே வாகனத்தில் ஏற்றி இரவு பத்து மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறக்கி விட்டு 'மெரீனா கண்ணகி சிலை அருகே உங்களை நாங்கள் இறக்கி விட்டு உள்ளோம் இனி நீங்கள் போகலாம்' என்று கூறி காவல்துறை கிளம்பி விட்டது.

பார்வையற்றோரும் தாங்கள் மெரீனா கடற்கரையில் தான் இறங்கி உள்ளோம் என்று நினைத்து தட்டுத் தடுமாறி நடந்த போது அது ஒரு சுடுகாடு என அறிந்து அதிர்ந்து போயினர் . பின்பு அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது தான் அவர்களுக்கு தெரிந்தது அது சென்னை மெரீனா கடற்கரை அல்ல உத்தண்டி சுடுகாடு என்று.

இப்படி மனிதநேயமே இல்லாமல் ஒரு சில காவலர்கள் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.

10 கோடி ரூபாயை சினிமா துறைக்கு வாரி வழங்கிய தமிழக அரசு,இவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தாலும் 30 வருடங்களுக்கு அந்த 10 கோடி ரூபாய் தான் செலவு ஆகி இருக்கும்.

ஆடம்பர விழாக்களுக்கு இவ்வளவு பணம் விரயம் செய்யும் அரசாங்கம்,சொந்த காலில் நிற்க போராடும் இதுமாதிரி மாற்று திறனாளிகளுக்கு செலவு செய்யலாம்.

உண்மையில் கை கால் இருப்பவன் தான் பிச்சை எடுக்கிறான்.இது மாதிரி மாற்று திறனாளிகள் கவுரவமாக உழைத்து சாப்பிட நினைக்கிறார்கள்.இவர்களையும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்.

இனியாவது இது மாதிரி மாற்று திறனாளிகள் மேல் அக்கறை காட்டுங்கள்.இவர்கள் கவுரவமாக வாழ ஏற்பாடு செய்யுங்கள்.
Source : https://www.facebook.com/ilayaraja.raja.9?hc_location=stream

Comments