Skip to main content
அப்துல் மாலிக்-நம்பிக்கை நட்சத்திரங்கள்
கேரளா
மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர்
தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று
பாடம் நடத்துகிறார்.
பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.
இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து
அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.
ஜாஹாங்கீர் என்ற
ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’
மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.
இன்று ஒரு சில
ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு
எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு
மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல்
மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது
வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது
அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த
மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை
மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால்
மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
Comments
Post a Comment
வருக வருக