Skip to main content
டி.வி.எஸ் சோமுவும் தங்க மீன்களும்..
பொதுவாக
தமிழ்த் திரைப்படங்களில், நாயகன், நாயகி, வில்லன் ஆகியோர் மட்டும் வாழும்
ஊரில்தான் "கதை" நடக்கும். மற்றபடி சிட்டி கமிசனர், சீஃப் மினிஸ்டர்..
யாராக இருந்தாலும் செட்பிராப்பர்ட்டிதான்!
ஆனால் ராம் படங்களில்,
மனிதர்கள் வாழும் ஊரில் நாயகன், நாயகி வசிப்பார்கள். "தங்க மீன்களிலும்"
அப்படித்தான். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நியாயம் செய்திருக்கிறார்
ராம்.
திரைப்படம் என்பது கண்டுபிடிப்பதற்கு முன்பே, திரைக்கதையைக்
கண்டுபிடித்த சில மேதாவிகள், தங்கமீன்களின் தி.க. பற்றி கடுமையாக
விமர்சித்திருந்தார்கள். "இலக்கில்லாமல் பயணிக்கிறது கதை" என்றார்கள்.
"பள்ளிக்கூட பிரச்சினையைச் சொல்கிறார, உலகமயமாக்கலா, பாசப் போராட்டமா...
எதைச் சொல்ல வருகிறார் ராம்?" என்றார்கள்.
பாட்டி வடை சுட்ட கதை மாதிரி நேர்க்கோட்டில் செல்வதல்ல.. படைப்பு என்பது,
படைப்பாசிரியனைவிட அதிகமாக யோசிக்கவைக்க வேண்டும் நுகர்வோரை! கற்றது
தமிழி்ல் செய்தது போலவே த.மீன்களிலும் அதைத் திறம்படச் செய்திருக்கிறார்
ராம்.
லாஜிக் பற்றியும் சிலர் சிலாகித்தார்கள். ராமின் முந்தைய
படமான கற்றது தமிழில் வந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது: "சினிமாவுல
தாண்டா லாஜிக். வாழ்க்கையில இல்லே!"
ஆமாம்... ராம் தருவது சினிமாக்களை அல்ல.. வாழ்க்கையை!
ராம் கதாபாத்திரம், சற்று மனநிலை பாதிக்கப்பட்டது போலவே தோன்றுகிறது.
ஒட்டுமொத்த சமுதாயமும் பயித்தியம் படித்து அலையும்போது, இயல்பான மனிதன்,
மனநோயாளிபோல் தோன்றுவது வியப்பென்ன?
தங்க மீன்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் போது, பிள்ளைகள் மீது கூடுதலான அன்பும், சமுதாயம் மீது கூடுதலான கோபமும் வருகிறது.
மீண்டும் வென்றிருக்கிறார் ராம்!
திரு டி வி எஸ் சோமு, மூத்த பத்திரிக்கையாளர்..
Comments
Post a Comment
வருக வருக