வசந்த பாலனின் வருத்தம்...

 
சமீபகாலமாக வருகிற அறிவீனமான மட்டரகமான காமெடிப்படங்களை பார்க்கையில் ஒரு வித மனசோர்வு ஏற்படுகிறது.

சினிமா எத்தனை அழகான திரை மொழி கொண்டது.
எத்தனை பெரும் மேதைகள் உபயோகப்படுத்திய மொழி.....

சினிமாக்கான 100 ஆண்டு கொண்டாடும்
இந்த வேளையில்
தமிழ்சினிமாவெங்கும்
மடத்தனமான
நம்மை கடும் மனச்சோர்வுக்கு தள்ளுகிற
காமெடிப்படங்கள்
(நல்ல காமெடிப்படங்களுக்கு நான் எதிரி அல்ல)
பார்த்தீனியம் போன்று
விச விதையை பரப்புகிற காமெடிப்படங்கள்
தமிழ்சினிமாவின்
அத்தனை வளர்ச்சியையும்
முதிர்ச்சியையும்
படுபாதாளத்தில்
மலக்குழியில் தள்ளுகிற முயற்சியாக எனக்கு படுகிறது.
அந்த படங்களை பார்ப்பது
பீயை பார்த்தது போல அருவருப்பாக
துர்நாற்றம் வீசுவதாக உள்ளது.
பீ யை பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் கூட
ரசனையோடு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும்.
இந்த சினிமா
வியாபாரத்தோடு
வசூலோடு
சம்மந்தப்பட்டது தான்....
ஆனால் மதுக்கடை வைத்திருப்பவர்களுக்கும்
கஞ்சா பொட்டலம் விற்பவர்களுக்கும்
நமக்கும் வித்தியாசம் இருக்கிறது,
நமக்கும் சினிமா என்கிற கலையை
அதன் அழகுணர்ச்சியோடு
சமுதாயத்திற்கு நல்ல கதை சொல்கிற அழகுடன்
பயன்படுத்தப்படவேண்டும் என்கிற பொறுப்பு இருக்கிறது.

கோயில் கோபுரத்தின் ஆயிரத்து முப்பதாவது சிலையும்
கலை நயத்தோடு
சிற்ப கலையின் உச்சமாக செதுக்கப்பட்டிருக்கும்,

5 கிராம் தங்கத்தில் செய்யப்படுகிற
தோடு கூட
கலை நயத்தோடு இருக்கும்.
10 ருபாய்க்கு மணபொம்மைகள் செய்பவன் கூட
தன் கலைஉணர்ச்சியை
அதன் மீதுஎழுதிச்செல்பவனாக இருக்கிறான்.

இப்போது அடித்துக்கொண்டிருக்கிற
இந்த மோசமான அலை ஓய்ந்து
நல்ல ஆரோக்கியமான சினிமா பூக்களாக பூக்கிற காலத்திற்காக
உங்களை போல நானும் காத்திருக்கிறேன்
 
From : https://www.facebook.com/vasanta.balan?hc_location=stream

Comments