இன்றும் ஒரு இனிய நாளே

நண்பா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரியில் விக்கிபிடியாவில் எழுதுவது எப்படி என்கிற ஒரு பணிமனை நடைபெறுகிறது. கேட்டவுடன் அனுமதி தந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. ஏ .வி.எம். எஸ்.கார்த்திக் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குழந்தைகளுடன் கலந்து கொண்ட அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. விக்கியின் முதல் பக்கத்தில் பணிமனையின் விவரம் வந்தது ரொம்ப மகிழ்வாக இருந்தது.

கருத்தாளர் திரு பிரின்ஸ் என்ராசு பெரியார், ரொம்ப என்கேஜிங்காக பணிமனையை நடத்தி செல்கிறார். திரைத்துறையை சேர்ந்த ஒரு திராவிட சிந்தனையாளர். ஒரு நல்ல நண்பர் இன்று எனக்கு கிடைத்திருக்கிறார்.

நண்பாஅறக்கட்டளைக்கும், செந்தூரன் கல்லூரியும் ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வினை ஒன்றாக கடந்திருக்கின்றன.வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் மாணவர்களுக்கும்.

ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு என்னுடன் கலந்து கொண்ட முத்து நிலவன் அண்ணா,சகோதரி கீதா,சகோதரி.சுவாதி மற்றும் இளைஞர் பாவலர் பொன் கருப்பையா ஆகியோருக்கும் நன்றி.

மீதம் பணிமனைமுடியட்டும்.சொல்கிறேன்.

அன்பு
மது

பணிமனை நலமே முடிந்தது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் தலைவர் திரு.வைரவன், முதன்மை செயல் அதிகாரி திரு. ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், செயலர் மற்றும் முதல்வர். திரு நவீன் சேட் ஆகியோருடன் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை இனிதே முடித்துவைத்தனர்.

எனது முதல் விக்கி பங்களிப்பு
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

Comments

 1. மேலும் அறிய தொடர்கிறேன்....

  ReplyDelete
 2. இந்த விரைவுதான் உங்கள் பலம்... என் பலவீனம்...ஹி ஹி

  ReplyDelete
 3. சகோதரருக்கு வணக்கம்,
  நண்பாஅறக்கட்டளையும் , செந்தூரன் கல்லூரியும் ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வினை நிகழ்த்திருப்பதற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இணைப்பிற்கும், இனிய செய்தியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 4. பயிற்சிக்கு என்னையும் அழைத்திருக்கலாமே சகோ. மறந்து விட்டீர்கள். பார்த்தீர்களா! இருக்கட்டும். (விளையாட்டுக்கு தான்). வேறொரு பயிற்சிக்கு மறவாமல் தகவல் தெரிவிக்கவும். நன்றி சகோ.

  ReplyDelete
 5. நிச்சயமாக ஒரு ஞாயிறு அல்லது ஒரு விடுப்பு நாளில் பயிற்சி மீண்டும் நடக்கும் சகோ. இனி அய்யா முத்து நிலவன் பார்த்துக்கொள்வார் ,,,
  எப்.பியில் அனைவரையுமே அழைத்திருந்தேன்... மன்னிக்கவும் நீங்கள் எப்.பியில் இல்லை எண்டு நினைக்கேன்.

  ReplyDelete
 6. அருமையான பணி! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இன்ப அதிர்ச்சி என்பார்களே அது இதுதான் .... எப்.பி கிங் ஒருவர் இங்கே?
   பதிவிற்கு நன்றி...

   Delete
 7. அருமையான நிகழ்வு! அறிந்ததும் மகிழ்வாயுள்ளது!

  பகிர்வினுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி... வாழ்த்துக்கள் மகிழ்வுடன் ஏற்கப்பட்டன..

   Delete

Post a Comment

வருக வருக