இந்த வாரம் நான் பார்த்த சில வலைப்பூக்கள்


விவரணம்
     மிக அருமையாகவும் விரிவாகவும் தகவல்களை பதிவிடும் திரு.விவரணன் நீலவண்னனின் வலைப்பூ. இந்திய விடுதலை வராலாறைபற்றி அக்கறை உள்ளவர்கள் இவருடைய சாந்தல்கன்ட் போராட்டம் பற்றிய பதிவை  அறிவது அவசியம். அருமையானதளம். இவரை முகநூலில் பின்தொடர்கிறேன்.
http://www.vivaranam.net/
கரந்தை ஜெயக்குமார் 
     தனித்த எழுத்தாற்றல் கொண்ட ஒரு கணித ஆசிரியர். இவர் எவர் மாதிரியும் இல்லாது மிகச்சாதரணமாக எழுதி அசத்துவார். ஒரு முன்னணி பதிவர். இவர் புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் தந்த வழிகாட்டல்களின்பின் தொடர ஆரம்பிதிருக்கிறேன்.
http://karanthaijayakumar.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் 

     அனேகமாக தமிழ் பதிவுலகில் அய்யா பின்னூட்டம் இடாத வலைப்பூக்களே இருக்காது. இவர் பின்னூட்டம் இடுவதையே முழு நேரமும் செய்கிறாரோ என்று தோன்றும். ஆனால் எழுத்து ஆகா. மிக நேர்த்தியாக எழுதக் கூடியவர். வலைப்பூ வித்தகர்.
http://dindiguldhanabalan.blogspot.com/


 இளையநிலா
     ஈழத்து சகோதரி. இவரது கவிதைகள் எளிமை, அருமை. என்னை பாதித்த சில வரிகள் 

சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..

கடைசி இரண்டு வரிகள் ஏற்படுத்தும் பாதிப்பு ,அடுத்த பிறவியில்கூட உயிர்துறக்க வேண்டும் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?  மனிதம் மலரும் என்று  நம்புவோம். க்விலிங்க் இவரது இன்னொரு சிறப்பு.
http://ilayanila16.blogspot.in/

சந்திப்போம்
அன்பன் 
மது 

Comments

 1. வலைத்தள அறிமுகத்திற்கு நன்றிகள் பல... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வலைப்பூஉலகில் உங்களுக்கு அறிமுகம் தேவையா என்ன...
   வருகைக்கு நன்றி.

   Delete
 2. வணக்கம் சகோ!

  மின்மடலில் உங்கள் பதிவு காட்டியது. மிக்க நன்றி!

  இங்கு உங்கள் வலைத்தள அறிமுகப் பதிவு அருமை!
  அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
  முதலாம் வலைத்தளம் இன்றுதான் அறிந்தேன்!
  மிக்க நன்றி சகோ! நல்ல முயற்சி!..

  அட.. இதில் என்னையுமா...:)
  உங்கள் ரசனையும் அற்புதம்!
  நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வரவில் மகிழ்தோம்.... கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

   Delete
 3. நல்ல அறிமுகங்கள் சகோததரே.
  இவர்கள் வலைப்பக்கம் எவ்வளவு செழுமையாக உள்ளது. 1.கருத்திடுவதற்கென்றே தனிக்கூட்டம் திரு.திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களுக்கு
  2.கரந்தை ஜெயக்குமார் அய்யா கணித ஆசிரியர். ஆயினும் கலக்கி எடுக்கிறார் கணினித் தமிழில்
  3.இளமதி சகோதரி க்விலிங்க் குயிலி. படைப்பாற்றலும் ரசிப்புத் தன்மையும் மிக்கவர்.
  4.விவரணம் பல விடயங்கள் ஆய்ந்த பதிவர்.. இளைஞர்..
  பகிர்வுக்கு நன்றீங்க சகோததரே..

  ReplyDelete
  Replies
  1. சகோ உங்களின் விரைவு அருமை...
   விவரணம் தரும் போராட்ட விவரங்களை மாணவர்கட்கு சொல்லப் போகிறேன்... சொல்லீட்டு சொல்றேன்.. நன்றி..

   Delete
 4. அனைவரும் அறிந்தவர்கள்... நல்ல தொகுப்பு...

  ReplyDelete
  Replies
  1. வெகு காலம் இணையத்தில் இருந்தாலும் இப்போது தான் நான் அறிந்தேன்.. உங்களுக்கு அறிந்தவர்களாக இருப்பதில் வியப்பெதும் இல்லை..

   Delete
 5. Anonymous3/11/13

  எனது எழுத்துக்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக