எஸ்கேப் ப்ளான்

 ஸ்டாலோன் மற்றும் ஆர்னால்ட் என்கிற ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் படம் எஸ்கேப் ப்ளான். இரண்டு அதிரடி மெகா ஸ்டார்கள் அதுவும் ஒரு ஜோரான அதிரடிப் படம் (எக்ஸ்பெண்டபிள்ஸ் 2) தந்துவிட்டு மீண்டும் இணைந்து ஒரு படத்தை தரும் பொழுது பொதுவாக ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது படம் நல்லா இருந்தா படத்தை பிச்சுகிட்டு ஓடவைக்கும். இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓட வைக்கும். இதில் எஸ்கேப் ப்ளான் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.கடும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்புவது என்பதே படத்தின் ஒன்லைன். இதற்க்கு முன்னால் வந்த ஜெயில்பேர்ட், ஷாஷங் ரிடம்ஷன் போன்ற அற்புதமான முத்திரைபதித்த படங்களின் பாணியில் ஒரு புதுப்படம்.
 

படத்தின் ஆரம்பத்தில் மிக எளிதாக ஒரு சிறையில் இருந்து தப்பும் ப்ரஸ்லீன் (ஸ்டாலோன் ) தப்பிய இரண்டு நிமிடங்களில் மீண்டும் பிடிபடுகிறார். சிறையில் உள்ள ஓட்டைகளை கண்டறியவே அரசால் அமர்த்தப் பட்டிருப்பதாக பின்னர் விளக்குகிறார். (அலோவ் படத்தின் கதைய சொன்னா யாருங்க சிரிக்கிறது)

இப்படி தொடங்கும் படம் ஒரு ஜெயிலினை பரிசோதித்தால் ஐந்து மில்லியன் டாலர்கள் என்று கொக்கி போட்டு தப்பவே முடியாத ஒரு சிறையில் தள்ளிவிடுகிறது ப்ரஸ்லீனை. அங்கே ஆர்னால்ட் இவருக்கு உதவுகிறார்.

பல அட ஷாட்கள் படத்தில் உண்டு, மூக்கு கண்ணாடியையும் ஒரு ஊசியையும் வைத்துக் கொண்டு இருக்கிற இடத்தை அனாயாசமாக கண்டறியும் ப்ரஸ்லீன் வாவ். டாய்லட் தண்ணீர் இறங்குவதை வைத்து இடத்தை தீர்மானிப்பது எல்லாம் அருமை. ஆனால் ஏனோ என்மனதில் ஓட்ட மாட்டேன் என்கிறது.

ஷாசங் ரிடம்ஷனில் ஒரு கிழவர் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் சுதந்திரமாக வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்வது பார்வையாளனை பாடாய்ப்படுத்தி  ஒரு புதிய அனுபவத்தையும் விதைத்து ஓராயிரம் கேள்விகளை எழுப்பும். சாஷங் ரிடம்ஷனை ஒரு வெற்றிப்படம்மாக்கிய காட்சி அது.

அது போன்ற எந்த ஒரு நெகிழ்வான இலக்கியதரம் கொண்ட காட்சியும் இந்தப் படத்தில் இல்லை.  ஒரு வெற்றிகரமான நாவலுக்கும் அவரசமான திரைக்கதைக்கும் பிறந்த பரிதாமான குறைபிரசவம் மாதிரி இருக்கிறது.

சந்திப்போம்
மது

Thaaraa Bharathi, Tharaa Bharathi, Tara Bharathi, tara barati
கவிஞர் தாராபாரதி 
வெறும் கை என்பது மூடத்தனம் 
விரல்கள் பத்தும் மூலதனம் 

Comments

  1. Replies
    1. உடன் வந்து கருத்துரை இட்டதற்கு நன்றிகள் பல...

      Delete

Post a Comment

வருக வருக