காமராஜ் குழந்தைகளுக்கான ஒரு கட்டுரை...

கல்வி கண் திறந்த படிக்காத மேதை , கறுப்புத் தங்கம், கர்மவீரர் காமராஜர் மேடுக்குடியில் பிறந்தவர் அல்லர். ஒரு தேங்காய் வியாபாரிக்கு மகனாய் பிறந்து ஆறு வயதில் தன தந்தையை இழந்தவர்.

சமுதாய நலனுக்காகச் சகலத்தையும் துறந்துவிடும் ஓர் சந்நியாசியின் கைகளில்கூட சொந்தமாக ஒரு திருவோடிருக்கும், ஆனல் அந்த ஓடு கூட இல்லாத அரசியல் துறவி காமராஜ் என்று கண்ணதாசனால் புகழப் பட்டவர்.

கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். கண்ணியமான அரசியல் வாழ்வுக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாய் இருப்பவர். தமிழகம் முழுதும்  பல அணைகள் கட்டி ஏறுபிடிக்கும் உழவரின் வாழ்வு சீர் செய்ய வந்த ஏற்றமிகு தமிழன். தமிழர் தன் நல்வாழ்விற்க்காய் இல்வாழ்வை துறந்த மகான்.

கல்வி கூடங்களே கண் திறக்கும் ஆலயங்கள் என்றுணர்ந்து நம் மாநிலம் எங்கும்  பள்ளிகள் நிறுவியவர். அவ்வாறு நிறுவிய பள்ளிகளுக்கு மாணவர்களை தொடர்ந்து வரவழைக்க மதிய உணவு திட்டம் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கினார்.

இக்கட்டான சூழலில் எல்லாம் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுத்து கிங் மேக்கர் என்ற பட்டம் பெற்றவர். ஓர்முறை பெரியாரிடம் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி வேண்டிய பெற்றோரிடம் ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு பெயர் சூட்டினார். நல்ல பெயரை சூட்டுங்கள் என பெற்றோர் கேட்டுக்கொள்ள மேலும் ஐந்து ரூபாயை பெற்றுக்கொண்டு அவர் சூட்டிய அருமையான பெயர் என்ன தெரியுமா? காமராஜ்.


காமராஜருக்கு அரசியல் குருவாக இருந்த சத்திய மூர்த்தியேகூட டெல்லியின் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் "காமராஜ் என் சக அரசியல்வாதி மட்டுமல்லர் அவர் எனது ஆலோசகர்" என பெருமை போங்க கூறினார். இறக்கும் வரை எளிமையாகவே வாழ்ந்தவர், தன் உறவினர், ஏன் தன் தாயாரேகூட தனது பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாத என்று தூய உள்ளம் கொண்டவர்.

இன்றளவும் காமராஜரைப்போல் புத்திகூர்மை, தெளிவு, எளிமை, நேர்மை, மக்கள் நலம் என்று எதிலுமே குறை சொல்லமுடியாத தலைவர் இல்லை என்ற உண்மையில் இருந்தே காமராஜரின் பிரமாண்டம் புரியும்.

******************************************************************
ஒரு குழந்தை பேச்சுப் போட்டிக்காக தயார் செய்து தருமாறு வேண்டியது. அதற்காக நான் என் மனைவியை வேண்டி பெற்ற கட்டுரை. உங்கள் குழந்தைகளுக்கு ஆகலாம் என்ற எண்ணத்தில். இங்கே.


அன்பன்
மது.

நியாயமாக இது வந்திருக்க வேண்டிய ப்ளாக் :
 http://makizhnirai.blogspot.in/2013/10/blog-post_1.html

Comments

  1. சுருக்கமாக இருப்பதால் பேசி விடுவார்கள்...

    ReplyDelete
  2. அருமையான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சகோததரே! அப்படின்னு சொல்லுவேனு பார்த்தீங்களா! என் சகோதரிக்கே வாழ்த்துக்கள். தட்டச்சு செய்து பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள். நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் கட்டுரை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக