முகநூல் மகாமித்யங்கள்

 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஓர்குட் கொடிகட்டி பரந்த காலத்தில் என்னதான் என்று பார்ப்போமே என ஒரு கணக்கை துவங்கினேன்.

ஆச்சர்யப்படும் அளவிற்கு நண்பர்கள் திரண்டு என்னை மிரள வைத்தார்கள். பெரிய டுமாங்கி மாதிரி கணிபொறி நெட்வொர்கிங் கம்யூநிட்டியில் வேறு சேர்ந்தேன்.  ஞானி சங்கரன் வேறு ஓர்குட்டில் இருந்தார். நண்பர்களின் நலம் விசாரிப்பு மாணவர்களின் அப்போதய படிப்பையும் நிலையையும் அறிதல் என கொஞ்சம் ஜாலியாக இருந்தது.இதனிடையே திடீரென மிக எளிமையான ஒரு கணக்கு துவங்கும் படிவத்துடன் ஒரு சமூக வலைத்தளம் ஒன்று அறிமுகமானது. மிக குறைந்த தரவுகளுடன் என்னை இயங்க அனுமதித்தது ஒரு ஆச்சர்யம். சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி என்பதன் இனைய வடிவம் என்பது பலமுறை ஸ்டார்ட்டர் தகராறு செய்து எரிந்த டியுப் லைட் போல பின்னர் தான் தெரிந்தது.

முகநூல் அனுபவங்கள் தான் எத்துனை எத்துனை. ஒருமுறை நீங்கள் இமைக்கும் பொழுதும் ஏகப்பட்ட செக்கிங் செய்யும் ஓர்குட்டை நான் மறந்தது இயல்புதானே.

முதலில் நண்பர்களும் பின்னர் மாணவர்களும் மெல்ல மெல்ல எனது நட்பு வட்டத்தில் இனைய நான் இணையத்தில் செலவிடும் நேரமும் நாட்டமும் அதிகரித்தது.

இணையத்தை திறந்தால் time.com, hungersite.com, yahoo.com என்று இருந்த நான் இணையத்தின் மற்ற பலன் தரும் பக்கங்களை மறந்து விட்டேன். இணையத்தில் வந்தால் அது எப் பி என்று ஆனது.

முதலில் நண்பர்களும் மாணவர்களும் கடல் கடந்த தேசத்தில் இருந்து தரும் செய்திகள் படங்கள் என சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சீக்கு பிடிச்சவன் கை சும்மா இருக்குமா, சில பிரபலங்களை நான் தொடர தினம் ஒரு சாரவெடி, அதிரடி, அதகளம் அப்புறம் சிலரின் சட்டையை கிழித்கொள்ளாத சண்டைகள் என எனது சுவர் நாறியது!

இந்தக் களேபரத்தில் சில நாள்கள் நடூல சில பக்கத்தை காணோம் என்று பழைய நண்பர்கள், மாணவர்கள் மறைந்து போனார்கள். இது சண்டைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உறைக்கவேயில்லை. விழித்துப் பார்த்து யோசிக்காம சிலரை அன்பிரன்ட் செய்து வலிய பழைய நண்பர்களின் சுவற்றுக்கு சென்று லைக் தட்ட நிம்மதி திரும்பியது.

மூஞ்சி புத்தகம் அசந்தா ஆளைக் காலி பண்ணும் என்ற அவதானிப்பிற்கு நான் வந்திருப்பேன் வண்ணதாசன் என்று ஒருவர் வந்திருக்காவிட்டால் நானும் எஜக்ட் ஆகியிருப்பேன்.

வண்ணதாசன் தனது எழுத்தால், ஆளுமை மிக்க மொழியால் எப் பி யின் நீள அகலங்களை மாற்றிபோட்டார்.  யார் சொன்னது இணையம் வெறும் கம்பிகளாலும் வைபி சிக்னலாலும் ஆனது என்று. அதெல்லாம் அப்போ. வண்ணதாசன் போன்ற படைப்பாளிகள் வெறும் கம்பி இணைப்பிற்குள்ளும் வெளிறிய கணினித் திரைக்குள்ளும் ஆன்மாவை ரொப்பி ஒரு பரவச வாசித்தல் அனுபவமாக மாற்றிவிட்டனர்.

நான் அவரைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் அந்த வண்ணதாசன் எப்படி எப் பியில் இருப்பார் என்ற எண்ணத்தில் அவருடைய உள்டப்பியில் நீங்க நல்ல எழுதறீங்க என்று சொல்லிவிட்டு அதை பெருமையாய் ராசி பண்ணீர்செல்வன் அண்ணனிடம் சொன்ன பொழுது சிரித்துக்கொண்டே கேட்டார் கல்யாண்ஜி தெரியுமா உனக்கு? ஆமா பெரிய ஆள் அவருக்கென்ன? அவர் தான் வண்ணதாசன் என்று சொல்லி என்னை அதிர வைத்தார். (உன்  இலக்கிய அறிவைக் கண்டு நான்  வியக்கேன் என்று யாரும் சொல்ல வேண்டாம்.)

அப்புறம் நந்தன் ஸ்ரீதரன், என்கிற அருமையான கவிஞர் வந்தார். இன்னும் கவிஞர் மகுடேஸ்வரன், அருண் தமிழ்மாறன், மண்ணை செல்வக்குமார், என அத்துணை நல்ல கவிஞர்களும் உள்ளே வர எப் பி நான் விலகமுடியா வலையாகிப்போனது.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த கவிஞர் தங்கம் மூர்த்தி ஒரு நாளுக்கு முன்னூறு புதிய நண்பர்கள் என ஆரம்பித்து சுமார் ஆயிரத்தி ஐநூறு நண்பர்களோடு இருப்பதையும் பார்த்தேன்.

இந்த அனுபவங்களின் வாயிலாக சில விதிகளையும் உருவாக்க முடிந்தது.

என் சில முகநூல் விதிகள்.

அலார்ம் செட் பண்ணிக்கொண்டு உட்காருங்கள். ஒரு மணிநேரமோ ஒன்றை மணி நேரமோ. அலார்ம் அடித்தவுடன் சமரசமின்றி முடித்துக்கொண்டு வெளியேருங்கள்.

உங்கள் சுய கருத்துக்களை பதிவிடுமுன் ஒன்றுக்கு பத்துமுறை யோசித்து பதிவிடுங்கள்.

சாதீய சாத்தான்கள், பேக் ஐடி சைக்கோக்கள், அரசியல் போன்றவற்றில் இருந்து நாசூக்காக விலகுங்கள். சிலர் எழுதுவதை படித்தால் பத்திக்கொண்டு வரும். கடந்து போக பழகுங்கள். நீங்கள் அவர்களின் தரத்துக்கு இறங்கி பதிவிட வேண்டாம். மீறி செயல்படுவது அவசியம் என்றால் உங்களின் மன அமைதியும், இரத்த அழுத்தமும் ஏகத்துக்கு எகிறும்.

லைக் தட்டும் முன் யோசியுங்கள். நீங்கள் லைக்குவதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பும் முகநூல். சரியான விசயங்களை லைக்குங்கள்.

 கவனமாய் இருந்தால் அருமையான தளம் எப். பி.


நன்றி நண்பர்களே

மீண்டும் சந்திப்போம்

அன்பன்
மது


Comments

 1. விடாது கருப்பு - எப்.பி...!

  ReplyDelete
 2. வணக்கம் அண்ணா,
  பேஸ்புக் பற்றிய தனது அனுபவத்தையும் எச்சரிக்கையோடு கையாண்டால் இனிமை என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களது எழுத்து நடையை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. எப்.பி ல சந்திப்போம் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. சந்திக்கலாம் பாண்டியன் அப்புறம் வைரமுத்துவுக்கு பின் வேறு ஏதும் எழுதவில்லையா... ஏன் ...

   Delete
 3. அனுபவம் பேசுது போல...? இத நா சுருக்கமாச் சொல்லவா?
  உங்கள் சொந்த வலைப்பக்கத்தை மேம்படுத்தவும், நல்ல வலைப்பக்கங்களை வாசிக்கவும் அதிக நேரம் செலவிடுங்கள். முகநூலில் உங்கள் வலைப்பக்கப் படைப்புகளை ஏற்ற மட்டுமே சென்று வந்துவிடுங்கள்.சரியா? நா இப்படித்தான் செய்றேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு விதி தயார் ஆனால் இது பதிவர்களுக்கு மட்டுமே..

   Delete
 4. இனிய வணக்கம் சகோதரர்!

  என் வலைத்தளத்தில் உங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்! மிக்க நன்றி!..

  இங்கு உங்கள் பதிவும் நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைச் சிறப்பு!..
  மனதிற்கும் கடிவாளம் அவசியம்.!.

  அருமை! வாழ்த்துக்கள்!

  இங்கு உங்கள் தளத்தில் நான் ஃபோலோவராக இணைய முடியவில்லை. காரணம் கூகிள் + ல் கணக்கு வைத்திருக்கவில்லை. அடுத்து உங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளவும் இங்கு மெயில் தொடர்பும் இல்லாமை கண்டு கவலையடைகிறேன்.. ஆவன செய்யுங்கள்!

  மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. வருக சகோதரி,
   மின்னஞ்சல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது..
   யாரும் இதை பயன்படுத்துவார்கள் என்று எண்ணவில்லை ...
   எனவே சேர்க்கவில்லை
   சகோதரி இட்ட கட்டளை சேர்த்தாகி விட்டது..
   வருகை மிக்க மகிழ்வு

   Delete
  2. மிக்க நன்றி சகோ! மெயில் தொடர்பில் பதிவைப் பெற சேர்த்துவிட்டேன்...

   ஹாஆ.. இதென்ன கட்டளையோ... இல்லை சகோ அன்பு வேண்டுகோள்.. அவ்வளவே! நன்றி!..

   Delete
  3. நன்றி சகோதரி..

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. என் பக்க வருகைக்கு நன்றிகள்.
  உங்கள் ஆக்கம் சிறப்பு. முக்கியமாக நீங்கள் சொன்ன விதிகள் கட்டாயம்
  கடைப்பிடிக்கப்படவேண்டியதொன்று. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...

   Delete
 7. அழகாக முக நூல் விதிகளை வகுத்துள்ளீர்கள்... நல்ல பதிவு. நானும் ஆரம்ப காலத்தில் ஆர்குட் கணக்கு வைத்திருந்தேன், இப்போ எங்க போச்சுன்னே தெரியல...

  நன்றி அண்ணா, என் தளம் வந்து களப்பிரர் பற்றிய பதிவில் கருத்திட்டு, ஆசிவகம் புத்தகத்தை படிக்க பரிந்துரைத்தமைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வந்து கருத்து வழங்கி, அடுத்து எழுத ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  அன்புடன் வெற்றிவேல்...

  ReplyDelete
  Replies
  1. வெற்றி வந்தது எனக்கு பெருவெற்றி...

   தமிழ் செம்மொழி தகுதி பெற்றதற்கு களப்பிறர் கால இலக்கியங்கள் முதமையான காரணம்.. உங்கள் ஆய்வு மிக அவசியம் ... நன்றி..

   Delete

Post a Comment

வருக வருக