ஒரு பேருந்து, எனது பழைய நண்பன் ...

த.சு.லு.சா வில் படித்த பொழுது நிறைய நண்பர்கள். இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று யோசிப்பது உண்டு. வாழ்வின் அற்புதங்களில் ஒன்றாக எப்போவாவது எதிர்பாரா இடங்களில் இருந்து வந்து நிற்பார்கள் சிலர். அவர்கள் எழுப்பும் மன அலைகளின் இரைச்சல் ஒரு மூன்று நாட்களுக்காவது ஒலிக்கும்.

அப்படி ஒரு நண்பனை சில நாட்கள் முன்பு பார்த்தேன்.  புதிய நூற்றாண்டு புத்தக இல்லம் (NCBH) ஒரு பேருந்தில் நூல்களை அடுக்கி கொண்டு மாவட்டம் மாவட்டமாகவிற்கும். எனது கல்லூரி காலத்தில் எனது சேமிப்புகளை இந்த சிநேகிதனுக்காய் செலவிட்டிருக்கிறேன்.முன்பு புதிய பேருந்து நிலையத்திற்குள்ளேயே நிற்கும் இந்தப் பேருந்து தனது வரிசைகள் தோறும் அற்புதமான புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு காத்திருக்கும் எப்போதும் பேருந்தில் உள்ளே ஒரு பத்துபேராவது இருப்பார்கள். மின்விசிறி என்று அது ஒரு அலாதியான அனுபவத்தை தரும்.
ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai
 இது நான் தவறாது பங்கெடுக்கும் ஒரு வருடாந்திர நிகழ்வு. எனது நூலக அலமாரியின் பல தட்டுகளை நிரப்பியவன் இவன். சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது மிர், ராதுகா இன்னும் எத்துனை எத்துனை பதிப்பகங்கள். அய்நூறு பக்கங்களை வெறும் ஐந்து ரூபாய்க்கு வழங்கிய கொடைவள்ளல் இவன்.

ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai
அதெல்லாம் அப்போ. இப்போது இவன் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. மாவட்ட கருவூலம், நீதி மன்றம் முன்னாள் சோகையாய் சில குழல் விளக்குகளுடன் நின்று கொண்டிருந்தான்.
ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai

அவன் எப்படி இருந்தால் என்ன. பார்த்தவுடன் ஒரு பழைய சிநேகிதனை சந்தித்த மகிழ்வு மனதில் அலையடிக்க சில புகைப் படங்களை எடுத்தேன். பழைய மலிவு விலைப் பதிப்புகள் ஏதும் இல்லை. தனது கவசங்களை ஒவ்வொன்றாக இழந்த ஒரு போராளியை போல் பரிதாபமாக தெரிந்தான்.

ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai
பேருந்தின் பொறுப்பாளர்களை விசாரித்த பொழுது புதுக்கோட்டை ஒன்றும் அப்படியான வாசகர் அதிகம் உள்ள ஊரல்ல. நாகப்பட்டினதில் நன்கு விற்பனையாகும் என்று சொன்னார்கள். கொஞ்சம் மனசு வலித்தது.

ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai
கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளாய் உன்னை சந்தித்து வருகிறேன் நண்பனே. அடுத்த ஆண்டும் உன்னை சந்திக்க ஆவலாய் உள்ளேன். வருவாய் என்கிற நம்பிக்கையில்


உன் நண்பன்
மது
ncbh bus, ncbh, new century book house, book exhibiton, malartharu, pudukkottai

Comments

  1. வணக்கம்
    உணர்வு பூர்வமான நட்பு.புத்தக நண்பர்களிடம் மட்டுமே பூக்கும் பூ.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் சகோததரே. ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல நண்பன் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். நிரம்ப படிக்கும் நல்ல பண்பைப் பெற்றவர் நீங்கள். நாங்கள் படித்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து பதிவின் ரகசியம் இது தானோ! பதிவை அன்றே படித்து விட்டேன். நேரமின்மையால் தாமதமான கருத்துரை. மன்னிக்கவும். பகிர்வுக்கு நன்றிங்க சகோததரே.

    ReplyDelete

Post a Comment

வருக வருக