தூங்கலாம் வாங்க பாஸ்...

 எலிகளின் மூளையில் நடந்த ஒரு ஆய்வு புதிய தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளது. தூக்கத்தின் பொழுது நாள்முழுதும் சேர்ந்த நச்சு பொருட்களை மூளை வெளியேற்றுகிறது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.




தூங்கும் பொழுது மூளை செல்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. இது மூளையில் சேர்ந்துவிட்ட நச்சுபொருளை வெளியேற்ற உதவுகிறது. இக்கண்டுபிடிப்பு உடல்நலனுக்கும், தூக்கத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்திருக்கிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட  ரோச்சஸ்டர் பல்கலையின் மைக்கன் நெடர்கார்ட்  தூக்கம் மூளைசெல்களின் அமைப்பையே மாற்றிவிடுகிறது என்று சொல்கிறார். தூக்கம் அவசியமா என்கிற கேள்விக்கு  ஒரு நல்ல விடை. சமீபத்தில்தான் நல்ல தூக்கம் நினைவாற்றலுக்கு ஒரு முக்கியமான காரணி என்பதயும் அறிந்திருக்கிறோம்.

சயன்ஸ் இதழில் வந்திருக்கும் கட்டுரையில் எப்படி தூங்கும் பொழுது மூளையின் கிளிம்பாடிக் அமைப்பு  திறந்து திரவங்களை வெகு வேகமாக மூளையின் வழியே அனுமதிக்கிறது என்பதயும் விளக்கியுள்ளது.  மைக்கன் நெடர்கார்ட் இந்த கிளிம்பாடிக் அமைப்பு செரிப்ப்ரோஸ்பைனல் திரவத்தின் சுழற்சியை கட்டுப்படுத்துவதையும்  கண்டறிந்துள்ளது.

ஒரு மையை சி எஸ் எப்புடன்  (செரிப்ப்ரோஸ்பைனல் திரவம்) கலந்து எலிகளுக்கு செலுத்திய பொழுது திரவம் எலிகள் மயங்கியிருந்த பொழுதும், தூங்கும் பொழுதும் விரைவாக பாய்வதை கண்டறிந்துள்ளனர்.

விழிப்பின் பொழுது மெல்ல பாயும் சி எஸ் எப் எப்படி தூக்கத்தின் பொழுது வேகமாக பாயமுடியும் என்ற கேள்விக்கு விடைகான எலிகளின் மூளை செல்களுக்குள் நேரிடையாக எலக்ரோடுகள் வைக்கப்பட்டு அவற்றின் இடைவெளி துல்லியமாக அளக்கப்பட்டது. ஆய்வின் முடிவு ஆச்சர்யம் தந்தது. மூளை செல்களின் இடைவெளி விழிப்பின் பொழுதும் தூக்கதின் பொழுதும் பெருமளவு மறுபடுவதைக் கண்டறிய முடிந்தது.

மூளையின்  கிளியா என்கிற செல் திரவங்கள் மூளயில் சுழல்வதை கட்டுப்படுத்துகிறது. மூளை செல் அளவினை கூட்டியோ குறைத்தோ இதனை அது செய்கிறது. நோராட்டிராலின் என்கிற தூண்டல் ஹார்மோன் செல்லின் அளவை கூட்ட குறைக்க செய்கிறது.

தூங்கிய எலிகள் மேலும் அல்சைமர் விளைவிக்கும் நச்சையும் விரைவாக வெளியற்றிவிட்டன.

மூளைநோய்கள் பலவற்றிக்கான அணுகுமுறையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது இந்தக் கண்டுபிடிப்பு.

நல்லா தூங்குங்க நச்சை நீக்குங்க. நலமோடு வாழுங்க..

சரி சரி போய் தூங்குங்க பாஸ்.

 அன்பன்
மது.


****************
*************
********
மறக்க முடியாத பெரும்கவி  

ஒரு கிராமத்து வகுப்பறையில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. கிராம தனவான் ஒருவர் அங்கு வந்து ஒரு பையனை கூப்பிட்டார். ஆசிரியர் மெதுவாக அய்யா அவன் பரீட்சை எழுதறான். எழுதீட்டு வரட்டும் அப்படி என்ன அவசரம்? என்று கேட்டார். 

தனவான் சொன்னார் நீர் வேறு என் அவசரம் புரியாம. உடனே சவரம் செய்யனும். அவன அனுப்புங்க வாத்தியாரே என்றார். இவன் என்ன படிச்சு என்ன கிழிக்க போறான் என்று கூற. அந்த நல்ல ஆசிரியர் அவன் வரமாட்டான் என்று உறுதியாக சொன்னது மட்டுமில்லாது. அந்த மாணவனின்  கல்வியை தத்தெடுத்து அவனை உயர்கல்வி வரை படிக்க செய்து குலத் தொழிலில் இருந்து விடுவித்தார். அவர் ஒரு கவிஞரும் கூட... 

அவர்

கவிஞர் தாரா பாரதி..
thaara bharathi, tamil poet

Tharaa Bharathi



Comments

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா.. வருகை எமக்கு பேரு உவகை...

      Delete
  2. புதிய தகவலுக்கு மிக்க நன்றி..
    தாரா பாரதி அவர்களை வணங்குகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி... வருகைக்கு நன்றி... தங்கள் தரும் கருத்தே எமக்கு ஊக்கம்

      Delete
  3. மூளையைப் பற்றிய தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. தூக்கப் பிரியர்களுகுஊக்கப் பதிவு .
    தாராபாரதி எனக்குப் பிடித்த கவிஞர்."வெறுங்கை என்பது மூடத் தனம் விரல்கள் பததும் மூலதனம் " என்று சொன்னவர் அல்லவா? அவரைப் பற்றிய செய்தி புதிது. சமீபத்தில் அவரதுநூல்கள்; நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளது

    ReplyDelete

Post a Comment

வருக வருக