நாளைய மனிதர்களின் நேற்றுநுகர்வு கலாசாரம் முற்றிப் போன இந்த யுகத்தில் ஒரு சீனப் பெற்றோர் தங்கள் பெண் குழந்தையை விற்று ஐ போன் வாங்கியிருப்பதாக வரும் செய்திகள் சாதரணமாக கடந்து போகக் கூடியதா?

ஒருபுறம் உணவின்றி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் மறுபுறம் உலகின் அதிக விலையில் கட்டப்பட்ட ஒரு வீடு என எதிர் எதிர் முனைகள் இரண்டும் இருக்கும் ஒரு தேசத்தில் ஆசிரியராக இருப்பது அலாதியானது தோழர்களே. 


ஒருவேளை உணவின்றி பல லெட்சம் பேர் இருக்கும் இந்த தேசத்தில்தான் ஒரு காலனி ஐயாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஓர் பேனா ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காமராஜின் கல்விக் கனவு நனவான இந்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் தங்கள் விடியலுக்கான நட்சத்திரம் இன்னும் வெள்ளித் திரைக்குள்ளே இருந்துதான் வரவேண்டும் என்று தவமிருக்கும் ஒரு சமூகத்தில் ஆசிரியம் எவ்வளவு அவசியம். 

வெறும் தழும்புகளையே தடவிகொண்டிருந்த எனக்குள் நம்பிக்கையை விதைத்த என்னுடைய மாணவர்கள் சிலருடன் எனக்கேற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர விருப்பம். 

வேனில்மைந்தன் (பெயர் மாற்றம்)

ஒரு முறை வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் பொழுது மாணவன் ஒருவனின் அப்பா பெயர் விடுபட்டிருக்க அவனை அழைத்தேன்.

வேனில் அப்பா பெயர் என்ன?
அப்பா இல்ல சார்.
இல்லடா அப்பா பெயர சொன்னீன்னா பதியலாம்.
அம்மா மட்டும் தான் அப்பா பெயர் வேண்டாம் சார்.
அதற்கு மேல் அவனை கேட்பது வன்முறை என்பதால் அம்மாவின் பெயரை எழுதினேன். அதையே பார்த்துக்கொண்டிருந்து சொன்னான் அப்பா எங்கள விட்டுட்டு இன்னோர் கல்யாணம் பண்ணிட்டார் சார். எனக்கு எல்லாமே அம்மாதான். நான் படிச்சு அம்மாவை நல்ல வச்சுக்குவேன் சார்.

அழுகை இல்லை வசிகர சிரிப்புடன் சொன்ன அவன் குரலில் தெறித்தது உறுதி. அவன் பள்ளியில் இருந்த வரை அவன் தான் முதல் ரான்க்...

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என்று புலம்பல்களையே கேட்டு பழகிய எனக்கு ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் நம்பிக்கை முற்றிலும் புதிதாக தெரிந்தது.

இன்னும் வரும் வேனில் ...

அன்பன்
மது

Comments

 1. அந்தப் பையனின் வலி தன்னம்பிக்கையாய் மாறினது சந்தோசம்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. காலையில் முதல் கருத்து...

   வருகைக்கு நன்றி... அய்யா.

   Delete
 2. சிறிய மாணவன்தான் ஆனால் அவன் சிந்தனை ஆலமரத்தைவிடப் பெரியது! வலியது!

  அருமை!.. தொடருங்கள்!..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 3. நாம் மாணவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அந்த பிஞ்சுக் குழந்தைகளின் செயல்பாடு தான் செயற்கையற்ற செயல்பாடாக இருக்கும். நல்ல பதிவு நண்பரே. நன்றிகள்..

  ReplyDelete
 4. மாணவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது சகோததரே.. அந்த சிறுவனின் மன உறுதி அவனை உயரத்திற்கு இட்டுச் செல்லும், நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோததரே..

  ReplyDelete

Post a Comment

வருக வருக