ஐந்தாண்டு கால வேனில்,.. (நாளைய மனிதர்களின் நேற்று 2)வேனில் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் பொதுவாக அனைத்து ஆசிரியருக்கும் அவன் ஒரு செல்லப் பிள்ளை. பள்ளியின் அனைத்துப் பணிகளையும் ஒரு புன்னகையோடு செய்ய எப்போதும் தயாராக இருப்பான்.

இப்படி ஒரு பிள்ளையை விட்டுவிட்டு போயிருக்கான் பாருங்க என்று அவன் தந்தையை நாங்கள் பேசுவது வழக்கம். பொதுவாக ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களின் நடத்தையில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் வரும். வேனிலும் இதற்கு விதி விலக்கல்ல.


ஒருமுறை இவனை ஒரு ஆசிரியர் விசாரித்துக் கொண்டிருந்தார். பிரச்னை இதுதான் ஒரு மாணவனின்  (அறிவுத் தெய்வம் அவன்) குறிப்பேட்டை திருத்தியவர் அதிர்ந்து போயிருக்கிறார். போடா நார வாயா என்று அதில் எழுதியிருக்க என்னடா இப்படி எழுதியிருக்கிறாய் என்று வினவ

வேனில் நோட்டில் இருந்தது சார், என்று அவன் பம்ம, வேனிலின் ரப்நோட்டில் அப்படியே எழுதியிருந்தது! ஏன்டா என்றால் பம்மிக்கொண்டு சொன்னான் சார் தினம் தினம் என் குறிப்பேட்டை கேட்டு ஒரே தகராறு அதனால அவன எழுதினேன் சார். சத்தியமா ஆசிரியரை எழுதலை சார். எனக்கு புரிந்தது. எனவே அதையே நம்பினேன்.

ஒருமுறை கும்பிடப் போனதெய்வம் பாட்டிற்கு விழாவில் நளினமாக ஆடினான். ஆச்சர்யம் என்ன என்றால் அவனுடைய செல்லப் பெயர் குண்டன். ஆனால் மேடையில் கலக்கினான். ஒரு ஆச்சர்யம் அது.

பள்ளியில் இருந்த வரை எந்த ஒரு தவறையும் செய்யாது நல்ல பெயரோடு பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேறினான். இன்றைக்கும் அவனது பேர் பள்ளியின் முதல் மாணவர் பலகையில் மின்னுகிறது. அவனது குடும்ப சூழலை கருதி பள்ளியின் ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாயை கொடுத்து ப்ளஸ் ஒன் போடா என்று அனுப்பி வைத்தனர். எல்லோருக்குமே வேனிலை பிரிவது சங்கடமாகவே இருந்தது.

பத்தாம் வகுப்பு விடுமுறையில் ஒரு தனியார் நூலகத்தில் பணிக்கு சேர்ந்திருந்தான். அது ஒரு ஆய்வு நூலகம். நூல்களை அங்கேயே வாசிக்கலாம். வீட்டிற்கு எடுத்து வர முடியாது. எனக்கு அறிமுகமான அந்த நூலகர் ஒரு நூலை நான் கேட்டபொழுதுதர மறுத்தார். மெதுவாக வேனில் சொன்னான் சார் எந்த புத்தகம் வேண்டும், உங்களுக்கு தரமாட்டார் ஆனால் எனக்கு தருவார். சொல்லுங்க நான் வாங்கி தரேன் என்றான்! (அவனை அவருக்கு அறிமுகம் செய்ததே நான்தான்!) வேனிலின் நம்பகத்தன்மை அப்படி.

 வேனில் ப்ளஸ் டூவில் அவன் தகுதிக்கு மிக குறைந்த மதிப்பெண்களை பெற்று தேறினான். ஏண்டா என்ற போது அசால்டா விட்டுட்டேன் சார் என்றான்.


அப்புறம் ஒரு நல்ல பாலிடெக்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். நான் கடந்த ஆண்டு மாணவர்களை சித்தன்னா வாசல் அழைத்து சென்ற போது உதவிக்கு அழைத்த நம்பிக்கைக்குரிய முன்னாள் மாணவர்களில் வேனிலும் ஒருவன்.

உணவருந்தும் பொழுது வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருப்பதாகவும் அரசின் உதவிக்கு காத்திருப்பதாகவும் சொன்னான். சில மாதங்கள் கழித்து வீட்டினை கட்டிமுடித்து பத்திரிக்கையோடு வந்தான். ஆசிரியர்கள் அனைவரும் போய் வந்தோம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

ஆறாம் வகுப்பில் அவன் சொன்னதை இன்று வேலைக்கு போகமலே சாதித்து விட்டான்.


வேனில் நல்லபடியாக பாலியை முடித்து ஒரு நல்ல பணியில் அமர வாழ்த்துங்கள் நீங்களும்.

நன்றி

அன்பன்
மது

Comments

 1. வேனில் வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 2. மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறைக் கொள்ளும் தங்களின் மனம் கண்டு நெகிழ்ச்சியாய் உள்ளது சகோதரரே. வேனில் கல்வியோடு எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ எனது வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள் தங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. இந்த அக்கறை ரொம்ப கம்மி என்பதே உண்மை...
   நீங்கள் சோமு சார் குறித்து கேள்விப் பட்டிருக்கிரீர்களா

   Delete

Post a Comment

வருக வருக