நீங்கள் எந்த கட்டத்தில் ?


உன்னையே நீயறிவாய் என்கிற பிரபலமான சாக்ரடீசின் பன்ச் எல்லோரும் அறிந்ததே. தன்னை நன்கு அறிந்தவர்களே தலைவர்கள் ஆகிறார்கள். இதை உணர்ந்தே துறவியரும் உங்களுக்கான ஆகச்சிறந்த உதவி உங்களின் மனதில்தான் உள்ளது என்கிறார்கள். வீணே வெளியில் எதிர்பார்ப்பது எவ்வளவு மடமை.


ஆம்.  தன்னையறிதலே வெற்றிக்கு முதல் படி.  கொஞ்சம்  எளிமையாக  பார்ப்போம். மனிதர்கள் நான்கு கட்டங்களில் இருக்கிறார்கள்.

முதல் கட்ட மனிதர்கள் 

இவர்கள் தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்கள்.  இவர்களின் திறமைகள் இவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியும். தனக்கு கிடைக்கிற வாய்ப்புகளை தங்களின் திறமைகளை வெளிப்படுத்த மிக நன்கு பயன்படுத்துவார்கள்.

அன்வர் நல்ல குரல்வளம் உள்ளவன் என்று அவனது வகுப்பு தோழர்கள், அண்டைவீட்டார் என்று பலர் சொல்கிற பொழுது அன்வரின் திறன் அவனுக்குமட்டுமல்ல அனைவருக்கும் தெரிந்தது என்பதை உணரலாம்.
தங்கள் திறன்களை கொண்டு வாழ்வின் புகழேணியில் ஏறிக்கொண்டே இருப்பார்கள்.

தனது குடியிருப்பில் ஒரு சுதந்திரதின விழாவில் பாட தெரிந்தவர்கள் பாட வரலாம் என்றபோது தயங்காது அன்வர் மைக் பிடித்து முதல் முதலில் பாடிய தாயின் மணிக்கொடி பாரீர்தான் அவனது விசிடிங் கார்ட்.
வாய்ப்புகளை தாவிப் பற்றி பயன்படுத்துபவர்கள்தான் வாழ்வின்  வெற்றியாளர்கள்.

இவர்கள்தான் முதல் கட்ட மனிதர்கள்

இரண்டாம் கட்ட மனிதர்கள்

மிளிரும் திறன் இவர்களின் தனித்த அடயாளம். ஆனால் பாவம் இவர்கள் தங்கள் திறமைகளை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

ரீனுஸ் மிக அழகாக ஓவியம்வரைவாள். ஆனால் அவள் தனது திறமைகளை கொண்டு என்ன செய்வது என்று அறியாதவள். அவளது அண்ணன் கொஞ்சம் விவரம் அவள் வரைந்த  ஓவியங்களை சத்தமில்லாமல் இணயத்தில் விற்று அவனது ஆசை பல்சர் பைக்கை வாங்கிவிட்டான்! அவனது மொத்த செலவே ரினூஸுக்கு வாங்கி தந்த சில வண்ணக் கலவைகள்தான்!

தங்கள் திறமைகளை அறியாதோரின் நிலை இதுதான்! அடுத்தவர் உயர தாழும் தோள்கள் இவர்களுடையது.  சில நேரம் இவர்கள் "ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்" என்று பாடுவார்கள்.


மூன்றாம் கட்ட மனிதர்கள் 

தங்களிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த தயங்குபவர்கள் இவர்கள்.
ரபீக் எழுதிய ஒரு ஜாவா நிரலை வெகுவாக பாராட்டி பேசினார் பேராசிரியர். வகுப்பில் இதை கவனித்த  சுகந்தன் இந்த நிரலை இன்னும் சிறப்பாக எழுதலாமே என்று நினைத்தான். ஆனால் மணி ஒலித்ததும் அமைதியாக வகுப்பை விட்டுவெளியேறிவிட்டான்.

தனது திறமைகளை உணர்ந்தும் அதை வெளிபடுத்தாதோர் மூன்றாம் கட்ட மனிதர்கள்.

நான்காம்கட்ட மனிதர்கள்

தன்னிடம் இருக்கும் திறமைகளை கொஞ்சம் அறிந்திருக்காதோர். இவர்களின் திறனை இவர்களை சுற்றி உள்ளோரும் அறிந்திருக்க மாட்டார்கள்.


"நா யாரு எனேக்கேதும் தெரியலையே " என்ற பாடல்தான் ...

இப்போ சொல்லுங்க நீங்க எந்த கட்டத்தில் இருக்கீங்க?
எந்தக் கட்டத்தில் இருந்தால் நலம்?அன்புடன்
மது


நன்றி
வல்லமை காணீர்
நிகில் நிறுவனத்தின் தன்னையறிதல் பயிற்சியின் ஒரு துளியின் தழுவல்
ஜே.சி.ஐ. தனி நபர் மேம்பாடு பயிற்சிகள்
Comments

 1. நீங்க மூனாம் கட்டம் நான் நாலாம் கட்டம்.
  ஆனா, முதல்கட்டத்தை நோக்கி முட்டுவோம். விடமாட்டோம்ல?
  எப்படிங்கய்யா இதெல்லாம்? பேஷ்பேஷ் ரொம்ப நன்னாருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா நல்ல கலாய்க்கிறீங்க ...

   Delete
 2. அன்பு சகோவிற்கு...
  வணக்கம். சாக்ரடீஸின் தத்துவத்தை இவ்வளவு எளிதாக வடித்த விதம் அருமை.முத்துநிலவன் அய்யா அவர்கள் நான்காம் கட்டமாமே! முதல் கட்டத்தில் இருந்து கொண்டு நான்காம் கட்டத்தில் இருப்பவர்களைத் தூக்கி விடுபவர் தான் அய்யா அவர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். உண்மை தானே சகோதரரே!
  ஆமா நான் கட்டத்துக்குள்ளயே வரலையே இன்னும் இரண்டு கட்டம் சேர்த்து என்னையும் சேர்த்துங்க சகோ.. அழகான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிலவன் அய்யா குறித்த உங்கள் பார்வை நூறு சதவிகிதம் சரி...
   மனிதர் கலாய்க்கிறார்
   இது ஜோகாரி ஜன்னலின் நீர்த்துப்போன வடிவம் ... (ஜோகாரி ஒரு உளவியல் பகுப்பாய்வு சுய ஆய்வு தொடர்பானது)

   Delete
 3. Brilliant Sir.. That is the only word i can say....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ...அங்கு

   Delete
 4. மிகவும் அருமை .ஆனா நான் முதல் கட்டம் வர முயற்சிப்பவள் முத்து நிலவன் அய்யாவின் ஊக்கத்தால்.

  ReplyDelete
  Replies
  1. பல பள்ளிகளில் பகிர்ந்தது ... இங்கே பதிந்தால் கிடைக்கும் ஊக்கம் அலாதிதான் நன்றி சகோதரி...

   Delete
  2. ஆமா நீங்கள் ஏற்கனவே முதல் கட்டத்தில் முன்வரிசையில் இருப்பவர் அல்லவா என்ன ஒரு தன்னடக்கம்டா சாமி..

   Delete
 5. என்னைப் போன்ற ஐந்தாம் கட்டத்துக்காரர்களைப்
  ஏன் எழுதாமல் விட்டுவீட்டீர்கள்
  திறமையேதுமில்லாமல்
  அது குறித்து எந்த அக்கறையுமில்லாமல்....
  ஒருவேளை பெரும்பான்மையோரை
  எதுக்கு அறிமுகப் படுத்தவேண்டும் என்றா ?
  சுவையான சுவாரஸ்யமான பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பொதுவாய் முதல் கட்ட மனிதர்கள் இப்படிதான் பேசுவார்கள் என்பது என்னுடைய அவதானிப்பு

   தங்கள் வருகைக்கு நன்றி...

   Delete
 6. அருமையான பதிவு. நான் எந்த கட்டம் என்று பொதுவா வேற சொல்லணுமா? :)
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வுடன் ஒரு நன்றி... தோழி இது பள்ளிகளில் மாணவர்க்கு நிகில் நிறுவனத்தாரால் நடத்தப்படும் ஒரு பயிற்சியின் என் பாணி தழுவல் ... மேலும் விவரங்களுக்கு ...
   http://www.malartharu.org/2013/02/blog-post_7031.html

   Delete
 7. நானும் இந்தக் கட்டம் ஒண்ணுலுமே இல்லைங்க...

  தெரியலை.. ஒண்ணுமே எனக்கும்..:)
  ஏதோ பாதை போகிற போக்கில நானும் போறேன்....

  அப்பாடா ஒருவளியா உங்க படைப்புகளை உடனுக்குடன் பார்த்திட ஃபோலோவர் இனைப்பு உண்டாக்கியாச்சு..

  இனிக் கொஞ்சம் முன்னை பின்னை ஆனாலும் வந்துடுவேன் இங்கும் தவறாமல்...:)

  அருமையான பதிவும் பகிர்வும்! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்.. // ஒருவளியா// எழுத்துத் தவறு...

   ஒரு வழியாக...:)

   Delete
  2. ஆங்கில எழுத்துக்களை தமிழ் ஒலி வடிவில் தட்டச்சு செய்யும் பொழுது இவ்வாறு ஏற்படுவது இயல்பே...

   Delete
 8. Anonymous20/11/13

  வணக்கம்

  தங்களின் வலைப்பக்கம் வருவது முதல் முறை என்று நினைக்கிறேன்... சாக்ரடீசி பற்றியும் அவர் மனிதர்களை பிரிக்கு முறைமை பற்றி விளக்கிய விதம் நன்று
  இனி தொடர்கிறேன்.....அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிதைப் போட்டியின் மூலம் தரமான கவிதைகளை வலையுலகதிற்கு அறிமுகம் செய்த தங்கள் வருகை எனக்கு பெரும் உவகை ... நன்றி நண்பரே..

   Delete
 9. வணக்கம் தோழி...!
  உங்கள் வலை தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி...!
  படையப்பாவில் வாழ்கையை கட்டம் கட்டமா பாடி வச்சாங்க.
  இப்போ நீங்க திறமைகளை கட்டம் போட்டு வைத்து....என் நட்டு கழண்டு விடும் போல் இருக்கிறதே. இப்படி புலம்ப வைத்துவிட்டீர்களே. இது எதிலும் நான் இருப்பதாக தெரியவில்லையே.10, 15 ஆக பிரிக்க வேண்டியிருக்குமோ?
  சரி எது எப்படி இருப்பினும் எதுவும் தெரியாமல் மனம் போன போக்கில் எழுதியது தான் பொருத்தமாக இருக்குமோ பாருங்கள். http://kaviyakavi.blogspot.ca/2013/10/blog-post_23.html
  திறமை களை நமோ பிறரோ உணர்ந்து கொள்ளவும் ஆண்டவன் அனுகிரகம் நிச்சயம் தேவை என்றே நான் உணர்கிறேன் இல்லையேல், குடத்துள் விளக்காகி வீணாய் போகும். அருமை அருமை...! தொடர்ந்து வருகிறேன் தொடருங்கள்.
  வாழ்க வளமுடன் .....!

  ReplyDelete
 10. ஜோ ஹாரி விண்டோ எனும் கருதோவியத்தை மிகவும்
  அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள்.

  இதை நான் இன்னொரு கோணத்தில் இந்த வருட துவக்கத்தில்
  என் வலையில் இட்டு இருந்தேன்.

  இதில் காணும் துணுக்கு நிகழ்வுகள் கவரும் வண்ணம் உள்ளன.
  கங்கிராட்ஸ்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வருக வருக தங்கள் வருகை மகிழ்வு..

   தங்களின் தளம் கண்டேன் அருமையான தாலாட்டு தொகுப்பு...
   அருமையான பதிவு...

   Delete
  2. http://subbuthatha.blogspot.in/2013/04/1-1-15.html
   எனது வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
   நீங்கள் கேட்டவாறு , இந்த தகவல் அனுப்புகிறேன்.

   இது அந்த ஜோ ஹாரி விண்டோ வில் ஒரு அணுகு முறை.
   இந்தப்பதிவு முதல் ஒரு நாலைந்து பதிவுகள் எழுதியதாக நினைவு.
   ஒன்றை மட்டும் காண முடிந்தது.

   இங்கு வருகை தரும் சிலர் அந்த என் பதிவுகளுக்கும் வந்து கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

   ஒரு தடவை எனது ப்ளாகரில் இருக்கும் கமெண்டுகள் எல்லாமே கூகிள் ப்ளஸ் இல் இணைத்தபோது காணாமல் போயிற்று. அவற்றினை ரிட்ரீவ் செய்ய இயலவில்லை.

   நேரம் கிடைப்பின் மற்ற பதிவுகளையும் அனுப்புகிறேன்.

   ஜோ ஹாரி விண்டோ பல் வேறு நாட்டவரால் பல் வேறு விதமாக அணுகப்பட்டு இருக்கிறது.

   நீங்கள் சொன்ன விதமும் எனக்கு பிடித்தே இருக்கிறது.

   வாழ்க வளமுடன்.

   சுப்பு தாத்தா.

   சுப்பு தாத்தா.

   Delete

Post a Comment

வருக வருக