பார்க்க முடியாத பாறை ஓவியங்கள் ...


தமிழ் ஸ்பீக்கில் வந்த படம்
புதுகை முதன்மைக் கல்வி அலுவலர் திருமயம் மலைப்பகுதியில் ஒரு பாறை ஓவியத்தை கண்டறிந்திருப்பதாக முத்து நிலவன் அண்ணா சொன்னார். புதுகையின் தொல்வரலாறு குறித்த ஆர்வம் எனக்கு உண்டு எனவே அவற்றை பார்க்க காத்திருந்தேன்.


படங்களை வெளியிடும் நிகழ்வு 23/11/2013ல் அறிவியல் கண்காட்சியில் நிகழும் என்று திரு.ராசி அவர்களின் முகநூல் நிலைதகவல் சொன்னது. சரி பார்த்து விடுவோம் என்று இருந்தால். ஆத்துக்காரிக்கு பணிநாள்  வீட்டில் குழந்தைகளை பார்த்துகொள்கிற பொறுப்பு எனக்கு வாய்த்தது.

 மூத்தவள் நிறை பள்ளிக்கு போக இளையவள் மகி வீட்டில் என்னுடன். நிறை வந்தவுடன் அறிவியல் கண்காட்சியையும் பார்த்தமாதிரி இருக்கும், பாறை ஓவியங்களையும் பார்த்தமாதிரி இருக்கும் என்று முடிவு செய்தேன். ஆகா அங்கேதான் விதி ஒரு வில்லன் சிரிப்பு சிரித்திருக்க வேண்டும்.


நிறை வருவதற்குள் மகி தூங்க வாரே வாவ்! என்ன செய்வது. இடையில் நிலவன் அண்ணா வேறு போன் செய்து கடிந்துகொண்டார்.  அதற்குள் இணையத்தில் தமிழ் ஸ்பீக்கில் செய்தி வர முழுதாக படித் தேன். வெறும் ஓவியம் என்று அறிமுகம் செய்யாது அது ஒரு உண்டாட்டு ஆட்டம் என்றும் அதன் தொன்மை குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர் பதிவிட்டிருந்தது சிறப்பு. தேடுவோருக்கே கிடைக்கும் என்பது எழுதப்படாத விதி.  அந்தப் பாறை கோட்டைக்கு வெளியே ஒரு இடத்தில் கவனமற்று இருந்த ஒன்று. ஒருவேளை ஓவியங்கள் தப்பி பிழைத்திருக்க இது ஒரு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். மிகுந்த பாராட்டுக்கு உரிய கண்டுபிடிப்பு.

ஒருவழியாய் நான்குமணிக்கு கிளம்பி அரங்கத்திற்கு போனால் நிறைவு விழா நடந்துகொண்டிருந்தது! ஒருவர் கூகிள் மற்றும் இன்டெல் நிறுவனப்  போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். சத்தமில்லாமல் திரும்பிவிட்டேன்.

புதுக்கோட்டை பழைய கற்காலத்தில் இருந்துமனிதன் வசிக்க ஆரம்பித்த பகுதி. பல வரலாற்று மிச்சங்கள் இன்றும் உண்டு. ஜே.ஜே கல்லூரி எதிரில்  பெருகற்கால குடியிருப்பு ஒன்று உண்டு. இப்படி பல இடங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. பாடத்திலும் இவை பற்றிய குறிப்பு உண்டு.  நிறய ஆய்வுகள் நமக்கு தேவை. விழிப்புணர்வும். அந்தவகையில் முதன்மைக் கல்வி அலுவலர் ஒரு முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார். இவரது வலைப்பூ நடைநமது.

சரி நிழல் படங்களை பார்க்க முடியவில்லை அடுத்த வாரம் பாறைக்கு போகிறேன் நிஜப் படங்களை பார்க்க. நீங்க வரீங்களா?

அன்பன்
மது

Comments

 1. அடடா... அருமையாக இருக்குமென நினைக்கின்றேன்.

  அவசியம் சென்று பார்த்து நிழற்படப் பதிவினைத் தாருங்கள் சகோ!

  நல்ல செய்தி! பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்|!

  ReplyDelete
  Replies
  1. http://bit.ly/19TAfD6 சகோதரி விக்கி இணைப்பு

   Delete
 2. நிஜப் படங்களை காண தொடர்கிறேன்... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. http://bit.ly/19TAfD6 நிஜம் ஒன்று தற்போது விரைவில் அனைத்தும்..
   வருகைக்கு நன்றி

   Delete
 3. அருமையானதொரு கண்டுபிடிப்பு..பகிர்விற்கு நன்றி! நீங்கள் சென்று இடும் படங்களைப் பார்க்கவும் ஆர்வமாய் உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆர்வம் பற்றிக்கொள்கிறது ..
   நன்றி சகோதரி..

   Delete
 4. அன்பு சகோவிற்கு வணக்கங்கள்,,,
  நிஜப்படங்களைக் காண நானும் தொடர்கிறேன். முதன்மைக்கல்வி அலுவலர் அய்யா அவர்களின் தொல்பழங்கால ஓவியக் கண்டுபிடிப்பு தேடுதலுக்கு கிடைத்த பரிசு, அவரது தேடல் மகத்தானது அது தொடர்ந்து பாறைகளில் மற்றும் ஆங்காங்கே ஒழிந்து கிடக்கும் தொன்மைகள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம். பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. ஒரு கல் புத்தனின் கால் பட்டு பெண்ணுரு எடுக்கும்வரை காத்திருந்த மாதிரி புதுகை தனது பழமைகளை அவருக்காத காத்திருந்து திறக்கிறது... இன்னும் பல விசயங்களை அவர் பகிரவில்லை தேடல்களை தொடர்கிறார் , நீங்கள் அடியொற்றி செல்ல ஒரு நல்ல அவர் முன்மாதிரி சகோ. வருகைக்கு மிக்க நன்றி..

   Delete

Post a Comment

வருக வருக