விக்கிபீடியா பயிற்சிகளை ஒருங்கிணைக்க ...

தினமலர் செய்தி

எனக்கு வேலை கிடைச்சிருக்கு சார் என்று ஒரு மாணவர் சொன்னார்.  நம்மிடம் பயின்ற மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது நமேக்கே கிடைத்த மாதிரி ஒரு மகிழ்வைத்தரும். பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது பணி நெட்வொர்க் சார்ந்தது என்றார். யாரும் கேட்க தயங்கும் ஒரு கேள்வியை கேட்டேன். உனக்கு நெட்வொர்க் பற்றி என்ன  தெரியும்?


சிரித்துக்கொண்டே சொன்னார் விக்கிபீடியா இருக்கையில் என்ன கவலை? என்னை பேராச்சரியத்தில் ஆழ்த்திய பதில் அது. மேலும் சொன்னார் கூகிள், விக்கி இரண்டு தளங்களையும் ஒரு நாள்மட்டும் திடீரென  மூடினால் அந்நாளின் உலகின் மென்பொருள் தயாரிப்பு குறியீடு(software productivity) ஜூரோ சதவிகிதத்தை விட்டு இம்மி கூட நகராது. உண்மையான வார்த்தைகள்.

விக்கிபீடியா பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் துளி கூட பொய் இல்லை. கடந்த மாதம் நண்பா அறக்கட்டளை என்னை தொடர்பு கொண்டு தமிழ் விக்கிபீடியா பயிற்சியை புதுகையில்தர  ஆர்வலர்கள் தயார் அரங்கம் மட்டும் வேண்டும் என்று கேட்க நான் ஜே.சி.ஐ புதுக்கோட்டை  சென்ட்ரலின் வருங்கால தலைவர் திரு ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக் அவர்களிடம் தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். விக்கியா உடன் செய்யலாமே என்றார். அவர் புதுகை செந்தூரன் பொறியில் கல்லுரியின் முதன்மை செயல் அலுவலராகவும் இருப்பதால் அனுமதி சுலபமாக கிடைத்துவிட்டது. நிகழ்வும் நன்கு நடந்தேறியது. மேலும் தகவல்களுக்கு.

உங்கள் ஊரில் இந்த பயிற்சியை ஒருங்கிணைக்க

1. ஒரு கல்லூரி, அல்லது பள்ளி, இணையஇணைப்பில் இருக்கும் கணிப்பொறிகள்.

2.ஆர்வமும் பங்கேற்ப்பை தர விழையும் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் (இவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி கணிப்பொறிகள்)

3. பயிற்சி எடுக்க ஒரு பயிற்சியாளர், நாங்கள் பிரின்ஸ் என்ரசு பெரியார் அவர்களை அணுகினோம். இவரது செல் நம்பர் : 9444210999

4. ஒரு அழைப்பிதழை வடிமைத்தல்.

5.மேலும் விவரங்களுக்கு புதுகையில் விக்கி பயிற்சியை ஒருங்கிணைத்த நண்பா அறக்கட்டளையின் மேலாளர் திரு.கார்த்திக் அவர்களின் செல் : 8056670404

விக்கி பயிற்சி எனக்கு ஒரு விரைவை தந்தது. நான் என் பங்களிப்புகளை ஆரம்பித்திருக்கிறேன். நிறைய பேர் வந்தால் நன்றாக இருக்கும்.

நீங்களும் ஒரு பயிற்சியை ஒருங்கினையுங்கள், தமிழுக்கு சேவை செய்யுங்கள்.
தினமலர் செய்தி


வாழ்த்துக்களுடன்
அன்பன்
மது


Comments

  1. வணக்கம் சகோதரரே.
    உண்மையில் தங்களை நினைத்து பெருமை கொள்கிறது மனசு. தமிழ் மீதான ஆர்வம், புதியன விரும்பல், சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. தங்களோடு தோள் கொடுக்க இந்த இளைவனும் உண்டு என்பதை மறவ வேண்டாம். பயிற்சியை ஒருங்கிணைக்க எனது பங்கும் இருக்க வேண்டுமென ஆசை. தங்கள் தமிழ்ப்பணிக்கும், பகிர்வுக்கு எனது அன்பு நன்றிகளும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
    Replies
    1. நல்லா ஜோக்கடிகிறீங்க பாண்டியன் ஆர்வத்தில் செய்யும் விசயங்களை பகிர்கிறேன்.. அவ்வளவே ...

      மீண்டும் அய்யா முத்து நிலவன் மாதிரியோ அருமையான திட்டமிடலோ சுறுசுறுப்போ என்னிடம் கிடயாது...மேலும் இப்போ நடைநமது பார்த்த பின் எவ்வளவு படிக்க வேண்டி இருக்கிறது என்கிற ஆயாசம் வேறு ...

      Delete

Post a Comment

வருக வருக