ஒரு கண் பிரிண்ட் பண்ணுப்பா

 அறிவியல் முன்னேற்றம் தரும் அற்புதங்கள்தாம் எத்துனை.. இவ்வாண்டின் ஒரு பேரற்புதமாக மனிதக் கண்ணை இன்க்ஜெட் பிரிண்டரைக் கொண்டு அச்சிடும் ஆய்வொன்று வெற்றிப் பாதையில் பயணித்திருக்கிறது.

முதல் முதலாக கண்களின் செல்களை பிசோஎலக்ட்ரிக் இங்க்ஜெட் பிரிண்டர் மூலம் அச்சிடலாம் என்பதை நிறுவியிருக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வு முழு வெற்றியடைந்தால் விழியிழந்தோர் என்பவர்களே உலகில் இருக்க வாய்ப்பில்லை.

தற்போதைக்கு எலியின் விழித்திரையின் காங்க்லியன் மற்றும் கிளையல் செல்லையும் வெற்றிகரமாக அச்சிட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அச்சிடப்பட்ட செல்கள் ஆரோக்கியமாகவும் செயல்படக்கூடிய நிலையிலும் இருப்பதை உறுதி செய்திருக்கிறது ஆய்வுக்குழு.

இவ்வாய்வின் சக ஆய்வாளர்கள் பேரா. கெய்த் மார்டின் மற்றும் மருத்துவர் பார்பரா லார்பர், (ஜான் வான் கீஸ்ட் முளை சீரமைப்பு மையம், கேம்ப்ரிட்ஜ் பல்கலை, லண்டன்) விழித்திரையின் செல்களின் அமைப்பு மிகுந்த சிக்கலான நுண்ணிய அடுக்கு. இந்த  ஆய்வு வெற்றிகரமாக முதல் கட்டத்தை கடந்திருக்கிறது இன்னும் நிறைய ஆய்வுகள் பாக்கியிருக்கிறது என்கிறார்கள். 
பேரா.மார்டின் ஒளித்திறன் கொண்ட ஒளிவாங்கிசெல்களை அச்சிடும் பல்துளை அச்சிடும் நுட்பத்தையும், வழிமுறைகளையும் உருவாக்கி மேம்படுத்தவேண்டும் என்கிறார்.

ஆய்வு வெல்லட்டும் ...

வாழ்த்துக்களுடன்
மது






Comments

  1. அசத்துகின்றன ஆய்வுகள்...

    நல்ல பகிர்வு சகோ!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...

      Delete
  2. சிறப்பான ஆய்வு... தகவலுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சூப்பர்.நல்லதையே நோக்கும் கண்களையே படைக்கட்டும்மா.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி...

      Delete
  4. வாழ்த்துக்கள் ஆய்வு வெல்ல/

    ReplyDelete
  5. வணக்கம் சகோ..
    அற்புதமான கண்டுபிடிப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி. ஆய்விற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள் தொடரட்டும் ஆய்வுப்பணி..

    ReplyDelete
    Replies
    1. இனிய பாண்டியன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete

Post a Comment

வருக வருக