ஒரு டப்பா நிறைய கேக்கை நீட்டும் நண்பனை வாழ்த்தி ஒரு கேக்கை எடுத்து
சாப்பிட்டு விட்டு பேச்சுவாக்கில் அடுத்த கேக்கிற்கு கை நீள்கிறதா? நல்லா தெரியும்
இது எக்ஸ்ட்ரா காலரி என்று இருந்தாலும்..
கொஞ்சம் டென்சன் ஒரு தம்மை போடு,,, கொஞ்சநேரம் கழித்து இன்னொரு தம்...
வாழ்வின் எத்தனையோ தருணங்களில் நாம் அனைவரும் செய்வதுதான் இது...
சுயக்கட்டுப்பாட்டை தூண்டி மேம்பப்டுத்த முடியும் என்று ஒரு புதிய
கண்டுபிடிப்பு நிறுவியிருக்கிறது. யு.டி.ஹெல்த் நிறுவனத்தை சார்ந்த நிதின் டாண்டன்
ஒரு நரம்பியல் அறுவை நிபுணர். இவர் மூளைக்குள் நேரடியாக சில மின் அதிர்வுகளை
செலுத்தி இதனை கண்டறிந்திருகிறார்.
தன்னார்வலர்கள் சிலரை சில நடத்தைகளில் ஈடுபடச் செய்து அவர்களின்
நடத்தை மாற்றத்தை மூளையின் ப்ரீபிராண்டல் லோப் பகுதியில் மின் அதிர்வுகளை செலுத்தி
மேம்பட்ட சுய கட்டுப்பாட்டை உறுதி செய்திருக்கிறார்கள்.
மூளையில் நேரடியாக எலக்ரோடுகளை பொருத்திக்கொள்ள சம்மதித்த அந்த
தன்னார்வலர்கள் இல்லையென்றால் இந்த ஆய்வு சாத்தியப்பட்டிருக்காது. இது ஒரு இரட்டை
குருட்டு ஆய்வு வேறு. எங்க மின்சாரம் பாய்ச்சினால் எங்கே தூண்டல் நிகழும், அது
என்ன விளைவுகளை தரும் என்று எந்த அறிதலும் இல்லாது நடத்தப் பட்ட ஒரு ஆய்வு.
நிதின் டாண்டன் எம்.டி. |
நல்ல மேட்டர் என்ன என்றால் இனி எ.டி.ஹச்.டி, தௌரெட் சின்றோம், அப்சசிவ்
கம்பல்சன் டிசார்டர் போன்ற நரம்பியல் பிரச்சனைகளை சரி செய்யலாம் என்பதே. என்னொவொரு பெரும்
ஆறுதல். டான்டன் ஒரு இந்திய வம்சாவளி என்பது அவரின் படத்தை பார்த்தாலே தெரிகிறது..
உண்மையில் மனித குலத்திற்கு ஒரு நற்செய்தி ...
நல்லது நண்பர்களே
சந்திப்போம்
அன்பன்
மது..
பெருமைப்பட வேண்டிய தகவல்... நன்றி... நிதின் டாண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
அண்ணா நன்றி,
Deleteநலமா...
அப்புறம் இது எப்டி இருக்கு
http://thamizhkalanjiyam.blogspot.in/
சுய கட்டுப்பாடினைத் தூண்டிவிடவேண்டிய நிலைக்கு எம் உணர்வுகள் அடங்கமால் உள்ளது என்பது வருத்தமான செய்திதான் ஆயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு நல்ல விடயமே!
ReplyDeleteமூளை இயக்கம் சரிவரக் கட்டுப்பாடினைப் பெறாத நோயாளிகளுக்கு இதன் பயன் கிடைத்தால் பெரீய வரப்பிரசாதமே!
நல்ல பகிர்வு சகோதரரே! வாழ்த்துக்கள்!
வருக க்வ்லிங் க்வீன்,
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நத்தார் வாழ்த்துக்கள்
அப்புறம் இது எப்டி இருக்கு
http://thamizhkalanjiyam.blogspot.in/
ஹையோ.. க்விலிங் க்வீனா யாரு நானா... ஓவரா இல்ல...:)))
Deleteதமிழ்க்கழஞ்சியம் மிக மிக அருமை! பார்த்தேன். ரசித்தேன்!
அங்கே ஃபோலோவராக என்னால் முடியவில்லை சகோ...:(
காரணம் நான் கூகிள் + ல் கனக்கு வைக்கவில்லை...
வேறு வழியே இல்லையா....