ப்ரோசன்

Frozen movie, spoiler
டிஸ்னி குழுமத்தின் ஒரு அனிமேட்டட் கார்டூன் படம் த்ரீடியில் வெளிவந்து இதுவரை சுமார் 22.6 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள படம்.   முழுதும் பாடல்களாக இனிய இசையாலும், காட்சிகளாலும் நிரம்பிய படம்.படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஜோரான கோரஸ் பாட்டுடன் ஐஸை அறுக்கும் ரம்பங்கள் திரையை நிறைக்கின்றன. என்ன ஒரு துணிச்சல்... 3dயில் பார்த்தவர்கள் முகத்திற்கு நேராக ரம்பங்கள் இறங்குவதை அனுபவித்திருக்கலாம்.

ஆரண்டேல் பேரரசின் அரசனுக்கு இரண்டு இளவரசிகள். மூத்தவள் எல்சா இளையவள் ஆனா(Ana). மூத்தவளுக்கு ஒரு விசேஷ சக்தி இருக்கிறது. அவளுடைய உணர்வுகளை கொண்டு சுற்றுப்புறத்தில் உறைபனியை உருவாக்குகிறாள்.
Frozen movie, spoiler


இப்படி ஒரு நாள் அரண்மனையில் இரண்டு குழந்தைகளும் விளையாடும் பொழுது ஒரு எல்சா ஒரு விபத்தாக தனது சக்தியை ஆனாவின் தலையில் செலுத்த அவளை அரசின் எல்லையில் உள்ள பாறை மனிதர்களை கொண்டு மீட்கிறார் அரசர்.

இதனைத் தொடர்ந்து மூத்தவள் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு வாழ்கிறாள். பட்டத்து இளவரசியான அவள் எப்படி முடிசூடிக்கொண்டாள், அதன் திருப்பங்களும் அதிர்சிகளும் படமாக விரிகிறது.

என்னை கவர்ந்த சில விஷயங்கள்

இளையவள் ஆனா(Ana) மிகத் தனிமையாக வாழ்கிறாள். தந்தையும் தாயும் கப்பல் விபத்தில், குற்றஉணர்வில்வாடும் அக்கா தனியாக குழந்தை மிகத் தனியாக அரண்மனையில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்.
Frozen movie, spoiler


எனக்கு கோபமூட்டிய சில காட்சிகளும் உண்டு, அறையில் இருக்கிற அத்துனை படங்களிலும் ஜோடிகள், ஓவொரு படத்தின் அருகிலும் தாவி அதில் உள்ள பெண்ணுருவை தன்னுருவில் பார்க்கும் பெண். ஏண்டா பொண்ணுன்னா காதல், குடும்பம் தாண்டி யோசிக்க மாட்டாங்கள என்று எண்ணவைத்தது.

ஆனால் காணமல் போன அக்காவை தேடி செல்கிற பொழுது ஆன(Ana) செய்கிற சாகசங்கள், எடுக்கும் திடீர் முடிவுகள் பெண்கள் வாய்ப்பளிக்கப் பட்டால் சாதனைகளை செய்வார்கள் என்பது போல அமைந்திருப்பது ஜோர்.

பனிமலைக்கு செல்லும் எல்சா தனது முழுசக்தியையும் கொண்டு எழுப்பும் அரண்மனை வாவ் வாவ் ...வில்லிங் சஸ்பென்சன்  ஆப்   டிஸ்பிலீப் என்றாலும் மிக அருமையான காட்சி.

ஆனவிற்கு உதவும் பனி யாவாரி கிறிஸ்டாப் படத்தை ஜோராக நகர்த்தி செல்ல உதவினால் அவரது மழை மான் அதைவிட ஜோர்.
Frozen movie, spoiler

சில காட்சிகள் மனதை விட்டு அகலாது, கோடைகாலத்திற்கு ஏங்கும் பனி மனிதன் பாடலை கேட்டுவிட்டு கிறிஸ்டாப் நான் சொல்லவா (வெயில் வந்தா உருகிப்போய்டுவடா பக்கி) என்று கேட்கிறபொழுது சொன்னே கொன்னுடுவேன் என்று சொல்லும் ஆனா (Ana). எதார்த்தை சொல்லும் ஆண்மை கனவை தொடரட்டும் என்கிற தாய்மை... வாவ். நல்ல பொருள் பொதிந்த குறியீடு இது.

அதே பனிமனிதன் ஆனவை (Ana) காக்க நெருப்பை பற்றவைத்து உருகத் துவங்கும் பொழுது பதறும் ஆனாவிடம் சொல்கிறான் "சம் பீப்பிள் ஆர் வொர்த் மெல்டிங் பார்" வாவ்..

யாருமே எதிபாராத கிளைமாக்ஸ். ரொம்ப அருமை.

குழந்தைகளோடு ஒரு முறை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே..

அன்பன்
மது

Comments

 1. நல்ல விமர்சனம்... நன்றி...

  ReplyDelete
 2. சகோதரருக்கு வணக்கம்
  மிக அற்புதமான திரை விமர்சனம். பகிர்ந்த விதம் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை மிகுவிக்கிறது. குழந்தைகளோடு ஒருமுறை பார்க்கலாம் ம்ம்ம் என்னைத் தானே சொல்றீங்க வாங்க இன்னொரு முறை பார்க்கலாம்.. பாஸ் என்ன பாக்குறீங்க கல்யாணம் ஆகுற வரை நான் தான் குழந்தை ..

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ... உண்மைதான்
   பாண்டியன் நான் சமயத்தில் இப்படி கணிப்பொறியை காதலிக்கும் பதிவரை புரிந்துகொள்ளும் (சகித்துக்கொள்ளும்?) ஒரு துணை வரவேண்டும் என்று கவலையோடு யோசிப்பது உண்டு..எனக்கு வந்த சகிப்பாளினி மாதிரி...

   Delete

Post a Comment

வருக வருக