வெகு அரிதாகவே நல்ல திரை முயற்சிகள் நடைபெறுகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் அவை பெருவாரி ரசிகர்களின் கவனம் பெறுகின்றன. பெரும்பாலும் புதிய ஆரோக்கியமான முயற்சிகள் பதிவுலகிலும், பத்திரிக்கை உலகிலும் ஒரு அதிர்வு வளையத்தை ஏற்படுத்துவதுடன் சரி.
ரொம்ப உழைத்து உழைத்து செதுக்கிய கதை மேலும் அருமையான திரைக்கதை. ஷாமின் கடும் உழைப்பை திரையில் பதிவு செய்த படம். எதிர்பாராத திருப்பங்கள் அதிரவைக்கும் குழந்தைக் கடத்தல் அண்டர்வேர்ல்ட் தாதாக்கள். அவர்களின் இயல்பு மாறாத திரைபிரதிபலிப்பு.
பிச்சைக்காரின் காலில் விழுந்து கெஞ்சும் தாய். அவன் குடுக்கும் ஸ்கெட்ச்சை வைத்து ஷாம் தன் மகனை தேடி அலையும் அலைச்சல் படமாகியிருக்கிறது. மிக நல்ல திரைப்படம் என்று விகடன் விருதுகளில் படித்தால் பார்த்த படம். விகடனுக்கு ஒரு நன்றி.
மகனை மீட்க சில நொடிகளே இருக்கும் நேரத்தில் படத்தில் வரும் திருப்பம் யாருமே எதிர்பாராது. ஷாமின் கதாபாத்திரம் எடுக்கும் எதிர்பாரா அதிரடி முடிவு, ஒரு டைரக்டர் டச். இதேபோல் கொலை முயற்சியில் இருந்து தப்பும் ஷாம் குழந்தைகளை தேடிப் போகும் இடங்களை போலீசுக்கும் பத்திரிக்கைக்கும் எழுதி அந்த நெட்வொர்க்கை சிதைப்பதும் டைரக்டர் டச்.
வேதனைக்குள்ளாக்கும் ஒரு கிளைமாக்ஸ். ஏம்ப்பா லேட் என்று கேட்கும் மகனை அணைத்து அழும் ஷாம். மிக தேர்ந்த நடிப்பு. கோடம்பாக்கம் செண்டிமெண்ட்களை ஷாம் இன்னும் உடைக்க வேண்டியிருக்கிறது.
துரைக்கு விகடன் விருது கிடைத்திருக்கிறது. 2014இல் ஷாமிர்க்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
அன்பன்
மது
இந்தப் பதிவின் ஆங்கிலப் பதம்
One's John Henry/ One's John Hancock -ஒருவரின் கையெழுத்து, கையொப்பம்
கையொப்பமிட சொல்ல
Just put your John Henry on this line, and the loan will be sanctioned.
உங்கள் கையெழுத்தை இந்த லைனில் போடுங்கள் உங்களுக்கு லோன் கிடைக்கும்.
Just put your John Hancock at the bottom of this form.
இந்த படிவத்தின் அடியில் கையொப்பம் இடவும்.
இப்படி யாராவது எங்காவது சொன்னால் குழம்ப வேண்டாம். பீட்டர் மொழியில் கையெழுத்து கேட்கிறார் என்று புரிந்துகொள்ளவும்.
|
சாம் அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையவில்லை என்பது தான் சிறிது வருத்தம்...
ReplyDeleteஇன்னொரு விக்ரமாக வருவாரோ என்னோவோ ?
Deleteபொறுத்திருந்து பார்ப்போம்...
வணக்கம் சகோதரர்
ReplyDeleteமிக சிறப்பான படத்தை அலசியுள்ளீர்கள். நடிகர் சாம் அவர்களுக்கு நிச்சயம் திருப்புமுனை இந்த ஆண்டில் அமைய வாழ்த்துவோம். கையொப்பம், கையெழுத்து வேறுபாட்டை விளக்கியமைக்கு நன்றி..
----------
தங்களுக்கும் எனது சகோதரிக்கும் குட்டீஸ்களுக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
Deleteஒவ்வொரு முறையும் வித்தியாசமான பதிவுகள். வாழ்த்துகள் கஸ்தூரி. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்
ReplyDeleteநன்றி அண்ணா ...
Delete