பார்க்காத புத்தக கண்காட்சியும், சில உறுத்தல்களும்உடல் நிலை சரியில்லாத எனது அம்மாவை பார்க்க வந்ததால் என்னால் முயற்சித்தும் சென்னை புத்தக கண்காட்சியை காண முடியவில்லை. சரி ஒரு நேரம் கிளம்பலாம் என்ற பொழுது பிரியத்திற்குரிய கவிஞர் காலதச்சன் நீங்க போற நேரம் வெறும் ஸ்டால் மட்டுமே இருக்கும் என புத்தக கண்காட்சிக்கு போகும் முயற்சி புஸ்.அவர் சொன்ன ஒரு தகவல் என்னை ரொம்பவே தடுமாற்றம் அடையவைத்தது. ஒரு நண்பரின் ஆயிரம் புத்தகங்களை கண்காட்சியில் வைத்திருகிறார்கள். ஆனால் பெருவாரியான புத்தகங்ககளை விற்காது மீள எடுத்து வந்ததாக கூறினார்.

புத்தகங்கள் ரொம்ப கனமானவை என்று காலதச்சர் சொல்ல அதைதூக்கிவரும் பொழுது கவிங்கனுக்கு இருக்கும் மனஅழுத்தம் அதைவிட கனமாக இருந்திருக்கும்தானே?

நமது படைப்பாளர்கள் இன்னும் மார்கெட் செய்ய தெரியாமல்தான் இருக்கிறார்கள். மேம்பட்ட பிராண்ட் மார்கெட்டிங் அளவு இல்லாவிட்டாலும் படைப்பாளியும் மார்கெட் செய்வதை அறிந்திருக்கவேண்டும்.

எல்லோருக்கும் கமலஹாசனோ, வண்ணதாசனோ வந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் சமூக வலைத்தளங்களை புதுப் படைப்பாளிகள் கடுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

இம்மாதிரி கண்காட்சி நிகழ்வுகளில் மீண்டும் மீண்டும் தனது படைப்பை காட்டி ஒரு டிரண்டை உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.

இது தப்பாச்சே என்று நினைபவர்களுக்கு உங்கள் படைப்பை நீங்களே முன்னிறுத்த தயங்கினால் வாசகன் எப்படி அதைச் செய்வான்?

என்னைப் பொறுத்தவரை என்னைக் குறுக்கிடும் எந்த முயற்சியையும் கொண்டாடி முன்னிருதியிருகிறேன். புதிய தலைமுறை வந்தபுதிதில் அதை ஒரு வாசிப்பு இயக்கமாக மாணவர்களோடு கொண்டாடினேன்.

இப்போது இன்பினி, தமிழ் இதழ்,  எனது பொறியில் மாணவர் ஒருவருக்கு சந்தா செழுத்தியிருக்கிறேன்.  மஹாபாத்ரையாய யார் என்று கூட தெரியாது இருபினும் வாழ்வை செழுமையூட்டும் ஒரு இதழ் என்கிறவகையில் இன்பினி என் கண்ணுக்கு மிக நல்ல ஒரு இதழாகபடுகிறது.

எந்த ஒரு நல்ல செழுமையான புதிய முயற்சியும் வாசகர்களால் கொண்டாடப் பட்டே வந்திருக்கின்றன. எழுத்துக்காரர்கள் சரியான இடத்தில் பார்வையில் வைக்க வேண்டியதே அவசியம்.

முக நூலும் ட்விட்டரும் பெரும் வீச்சினை கொண்டுள்ள ஒரு சமூகத்தில் பெருவாரி புத்தகங்களை விற்காமல் திரும்ப எடுத்துவரும் நிகழ்வு இன்னொருமுறை இன்னொரு படைப்பாளனுக்கு நிகழ்ந்தால் அதற்கு வாசகன் மட்டுமா காரணம்?

யோசிங்க எழுத்துக்காரர்களே,எழுத்து எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, அதுவும் தரமான எழுத்து கவனமற்றுப் போதல் என்பது ஒரு சமூக இழப்பு.  குறைந்த பட்சம் முகநூல் மார்கெட்டையாவது பிடியுங்கள்.

ஏதோ சொல்லனும்னு தோணிச்சு, சொன்னேன்.

அன்பன்
மது

கனன்று வீசும் பிரியம்

திரு. நந்தன் ஸ்ரீதரனின் வலைப்பூ, மனிதர் எழுதுவதைப் பார்த்தால் எனக்கு சற்று ஆயாசமாக இருக்கும். ஒருமுறை நேரில் சந்தித்து எப்படி இப்படி என்று கவிமூலம் குறித்து ஒரு நீண்ட உரையாடலை சாத்தியப்படுத்த காத்திருக்கிறேன்.

வார்த்தைகள் சிலருக்கு மட்டுமே ஓடிவந்து சேவகம் செய்கின்றன எனது வாசிப்பனுபவத்தில் நந்தனுக்குத்தான் இந்த வரம் கிடைத்ததாக தோன்றுகிறது.

நீங்களும் படிங்க

http://asistantdiraktar.blogspot.in/

Comments

 1. வருங்காலத்தில் இந்தச் சிரமங்களே இருக்காது என்று நினைக்கிறேன்... நேரம் கிடைப்பின் எனது சமீபத்திய பதிவை வாசிக்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இ புக் குறித்த பதிவுதானே நன்றாக இருந்தது படித்துவிட்டேன்

   Delete
 2. "//நமது படைப்பாளர்கள் இன்னும் மார்கெட் செய்ய தெரியாமல்தான் இருக்கிறார்கள். மேம்பட்ட பிராண்ட் மார்கெட்டிங் அளவு இல்லாவிட்டாலும் படைப்பாளியும் மார்கெட் செய்வதை அறிந்திருக்கவேண்டும்.//' - உண்மை. என்னை மாதிரி இருப்பவர்களுக்கு, எழுத்தத்தான் தெரியுமே தவிர, அதை எப்படி மார்க்கெட் பண்ணுவது என்று சரியாக தெரியாது. நான் இன்னும் அதை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 3. சரிதான்..புத்தகம் இருக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காகவேனும் விளம்பரம் செய்யவேண்டுமே..

  ReplyDelete
  Replies
  1. ஆம், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 4. வணக்கம் மது !
  உங்கள் ஆதங்கம் புறிகிறது. எத்தனை நல்லெண்ணம் உங்களுக்கு. நான் இன்னும் பார்க்கவில்லை போய் பார்கிறேன்.
  ரொம்ப சுறுப்பாக இயங்கி வருகிறீர்கள். ஆனால் எனக்கு தான் நேரம் கிடைபதில்லை . முழுவதும் வாசிக்க முயற்சி செய்கிறேன். மனிதுக் கொள்ளுங்கள்.
  மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு பெரிசாவ எழுதீட்டேன்

   நன்றி

   Delete
  2. இல்லை இல்லை இவை யாவும் வாசித்து விட்டேன். நான் சொல்வது ஏனைய உங்கள் பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது அல்லவா அத்துடன் உங்கள் நண்பரின் வலைப்பூவை பற்றியுமே கூறினேன். அதை தான் முயற்சி செய்கிறேன் என்றேன்.

   Delete
 5. திண்டுக்கல் தனபால் ஐயா சொல்வதுதான் சரியான தீர்வு

  ReplyDelete
  Replies
  1. அவர் எப்போ தப்பா சொன்னார்

   மிஸ்டர் ரைட்

   Delete
 6. நீங்கள் சொல்வது உண்மைதான்.தாமதமாக நான் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து இந்த நினைவு வந்ததுண்டு.நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே ..

   Delete

Post a Comment

வருக வருக