பார்க்க முடிந்த பாறை ஓவியங்கள் - பகுதி இரண்டு

வணக்கம் நண்பர்களே,

நான்கு மாவட்ட நாட்டுநலப்பணி மாணவர்கள் பங்கேற்கும் ஒரு நலப் பயிற்சி  மௌன்ட் சயன் பொறியியற் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.  புதுகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். ந.அருள்முருகன் அவர்களின் சீரிய நெறியாள்கையில் மாணவர்களுக்கு பல்திறப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் ரொம்பவும் வித்யாசமான ஒரு அதிகாரி. ஆயிரம் மிரட்டல்களில் ஆகவேண்டிய பணியைக் கூட ஒரு சிறு புன்னகையில் வென்றெடுக்கும் வல்லமை அவரது இயல்பு.

ஞாயிற்று கிழமைகளில் அக்கடாவென்று ஓய்வெடுக்கும் சராசரிகளின் மத்தியில் தனது ஒய்வு நேரத்தை தொன்னமைச் சின்னங்களை தேடி ஆய்வுசெய்யும் பணியை பொழுதுபோக்காக கொண்டவர்.  இவரது தேடலில் புதுகைக்கு கிடைத்த அங்கீகாரம் பிரமாண்டமானது.

சில மாதங்களுக்கு முன்னர் திருமயம் கோட்டையில் இவர் கண்டறிந்த ஓவியங்களும் அதன் தாக்கங்களும் இன்னும் குறையாது இருக்க இந்த கூட்டத்தில் இவர் வெளியிட்டது, தனது பொங்கல் ஆய்வுப் பயணக் கண்டுபிடிப்பான சித்தன்ன வாசல் பாறை ஓவியங்களை!


பொங்கல் அன்று இவர் சித்தன்னவாசல் குகைகளை ஆய்ந்து புதிய ஓவியங்களை கண்டறிந்திருக்கிறார்! நான் நல்லா பொங்கல் சாப்பிட்டுவிட்டு ஓய்வை அனுபவித்து சில பதிவுகளை போட்டுக்கொண்டிருந்தேன்! ஆனால் அய்யாவோ வரலாற்றின் கவனமற்றுப்போன சாளரம் ஒன்றை திறந்திருக்கிறார்!

ஓவியங்களை விளக்கும் முதன்மைக் கல்வி அலுவலர், உற்றுநோக்கும் திரு.ஞானாலையா கிருஷ்ணமூர்த்தி, மௌன்ட் சயான் பொறியியல் கல்லூரி இயக்குனர்கள் திரு. ஜெயபாரதன் செல்லையா, திருமதி. பிளாரன்ஸ் ஜெயபாரதன்

மாணவர்களிடையே  வராலாற்று அறிவையும் விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கில், தான் கண்டறிந்த பாறை ஓவியங்களையும் அவை எம்முறையில் வரயப்பட்டவை என்று அய்யா விளக்கிய பொழுது எனக்கு பெரும்கற்கால நாட்களில் தமிழன் எத்துனை திறம் வாய்ந்தவனாக இருந்திருக்கிறான் என்று வியப்பும் பெருமிதமும் எழுந்தது.

புதுகையின் காடும் மலையும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வருகைக்கும் ஆய்விற்கும் ஆவலோடு காத்திருகின்றன என்றே தோன்றுகிறது.

உங்கள் கிராமத்தில் நீங்கள் வழக்கமான பணிகளுக்காக செல்லும் இடங்களில்கூட ஒரு ஓவியமோ, கல்வெட்டோ, சிற்பமோ இருக்கலாம். இனி அவற்றைப் கண்டால் முறையாக செய்தித் துறைக்கு தெரிவியுங்கள் என்று  என். எஸ்.எஸ். தன்னார்வ தொண்டர்களுக்கு அறிவுரை கூறி தனது உரையை முடித்தார். நிச்சயம் சில புதிய கண்டுபிடிப்புகளாவது மாணவர்களால் நமக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இன்றைய நாளின் இறுதியில் எனக்கு தோன்றியது இதுதான்.
இன்றைய நாள் புதுகை வரலாற்றின் முக்கியமான நாளாக மாறிவிட்டிருக்கிறது.


அன்பன்
மது

இந்தப் பதிவின் தளங்கள் 


அ.மார்க்ஸ்

அ.முத்துலிங்கம்

அ.ராமசாமி

அகிலன்

அசதா

Comments

 1. vara mudiyamal ponatharku varuththa padukinren.nandri

  ReplyDelete
  Replies
  1. வருந்த தேவை இல்லை, படங்கள் விரைவில் விக்கியில் வரலாம் என்று நம்புகிறேன்...

   Delete
 2. புதிய கண்டு பிடிப்புக்கள் தொடரட்டும் தமிழன் என்ற பெருமை உயரட்டும்..
  அருமையாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர் ரூபன்...

   Delete
 3. முதன்மைக் கல்வி அலுவலர் மெமேலும் புதிய வரலாற்றுப் புதையல்களை வெளிக் கொணரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. கைவசம் இன்னும் நிறய இருப்பதாகவே தோன்றுகிறது, அவை குறித்த ஆழ்ந்த ஆய்வுகளின் பின்னரே அவை வெளியிடப் படும் என்று அய்யா வைத்திருக்கலாம் தோன்றுகிறது...

   Delete
 4. திரு. என். எஸ்.எஸ். அவர்கள் சொன்னதை அனைவருமே செய்ய வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா
   நாட்டு நலப்பணி திட்டம் = என்.எஸ்.எஸ்.

   Delete
 5. அருமையான ஒரு பதிவு! வித்தியாசமானதும் கூட!

  //உங்கள் கிராமத்தில் நீங்கள் வழக்கமான பணிகளுக்காக செல்லும் இடங்களில்கூட ஒரு ஓவியமோ, கல்வெட்டோ, சிற்பமோ இருக்கலாம். இனி அவற்றைப் கண்டால் முறையாக செய்தித் துறைக்கு தெரிவியுங்கள் என்று என். எஸ்.எஸ். தன்னார்வ தொண்டர்களுக்கு அறிவுரை//

  உண்மையும் கூட! நல்லதொரு அறிவுரை!!! செய்வோம்!!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 6. அரும்பணி செய்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர்...பகிர்வுக்கு நன்றி மது!

  ReplyDelete
  Replies
  1. அவரது தமிழார்வம் - ஆழமான தமிழ்ப் புலமையும் ஒரு நல்ல முன்மாதிரி ...
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 7. வணக்கம் .
  அடுத்தவர் குறைகளைக்கொண்டாடும் மனிதர்களிடையே .கவனமற்றுப்போன வரலாறுகளை கவனத்தில் கொள்ள வைக்கும் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆய்வுகள் அடுத்த தலைமுறைக்கும் அறிவுப்பெட்டகத்தின் திறவுகோலாக அமையும் . .விக்கியில் வந்தால் அனைவரும் பயன்பெறலாம்(கொஞ்சம் எங்களுக்கும் உதவுங்களேன் ) மலர் தரு எங்களுக்கும் நிழல் தருவாக ..நன்றி

  ReplyDelete
 8. வணக்கம் சகோ
  நலம் தானே! முதன்மைக்கல்வி ஐயா அவர்களின் கண்டுபிடிப்பைப் பகிர்ந்தமை கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி. ஐயா அவர்களைப் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. கடைநிலை ஊழியர்களிடம் கூட கடுகடு முகம் காட்டாதவர். அவரது கண்டுபிடிப்பு புதுகை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. மாணவர்களிடமும் இத்திறன் வளர்க்க ஆற்றிய உரையும் வெகுவாக நம்மைக் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோ..
  --------
  பதிவோடு பகிர்ந்த தளங்களுக்கும் பயணிக்கிறேன். நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..
   பணிச்சுமை அதிகமோ?

   Delete
 9. சித்தன்னவாசலுக்கு நானும் போயிருந்தேன். நான் இறங்கத் தயங்கிய கல்குகைகளுக்குள் அய்யா சர்வசாதாரணமாக இறங்கி “இங்கேயும் மங்கலான ஓவியங்கள் இருக்கின்றன“ என்று அவர் திரும்பி வந்து சொன்னது வரை நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன். எனினும் திருமயம் பாறை ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் நான் செய்த உதவிகளைப்போல இந்த வெளியீட்டுக்கு என்னால் இயலாத சூழல்.. (ஆ.கோவில் அருகில் பெருமருதூரில் எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணன் மறைவு.... ) எனினும் மது, உங்கள் தளத்தின் வழியாக இந்த நிகழ்வுகளை அறிந்து மகிழ்ந்துகொள்கிறேன்... வேறென்ன செய்ய...

  ReplyDelete
  Replies
  1. உங்களை சந்திக்காதது பெரும் குறை, இதை நான் பதிவிடவும் இல்லை பேசினால் ரொம்ப பரபரப்பாக இருந்தீர்கள்.

   மூத்த அண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

   Delete
 10. கல்விப்பணி சிறக்க உழைப்பதோடு கவனமற்றுக் கிடக்கும் மண்ணின் மறைந்து கொண்டுள்ள வரலாற்றுச் சின்னங்களை அகழ்ந்து அறியத்தரும் முனைவர் நா.அருள்முருகன் அய்யாவின் ஈடற்ற செயலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

  ReplyDelete

Post a Comment

வருக வருக