ஆப்லிவன் ஒரு அறிவியல் புனைவு திரைப்படம்

டாம் க்ருஸின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும், என்பதால் அவரது படங்களை விரும்பி பார்ப்பது வழக்கம். அவரது ஆகச்சிறந்த படங்களை பார்த்து அவரை ரசிக்க ஆரம்பிக்கவில்லை மிசன் இம்பாசிபிள் முதல் பாகம்தான் எனக்கு ரொம்ப பிடித்த படம். வேர் இஸ் யுவர் டீம். மை டீம் இஸ் டெட் என்கிற  வசனத்தை அவர் சொல்கிற பொழுது அதில் தெறித்த வேகம் கலந்த ஆற்றாமை எனக்கு பிடித்திருந்தது.


மிசன் இம்பாசிபிள் இரண்டு மூன்று நான்கு என்று வந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது முதல் பாகம். லாஸ்ட் சாமுராய் வரும் வரை எனது பட்டியலில் எம்.ஐ ஒன்தான்  டாமின் டாப் படம்.

எனவே டாமின் ஆப்ளிவன் வெளியானபோழுது அதை தேடிப் பார்த்தேன். கதை எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைவு. அறுபதாண்டுகளுக்கு முன்னர் பூமி வேற்றுக் கிரகவாசிகளால்  தாக்கப்பட்டு பெரும் இயற்கை பேரழிவுகளாலும் சீரழிக்கப் படுகிறது. ஒருவழியாய் மனிதர்கள் வேற்றுக் கிரகவாசிகளிடமிருந்து பூமியை மீட்கிறார்கள். ஆனால் பூமியின் பெரும் பகுதி கதிரியியக்கம் கொண்டதாக இருப்பதால் அவர்கள் பூமிக்கு சற்று மேலே மிதக்கும் தலைகீழ் பிரமிட்களை உருவாக்கி வாழ்கிறார்கள்.

மீதம் இருக்கும் வேற்றுக் கிரகவாசிகளை வேட்டையாடும் பொறுப்பு பறக்கும் பந்துகளுக்கு அளிக்கப் படுகிறது. பிரச்னை என்ன வென்றால் இந்தப் பந்துகளை பூமியில் இருக்கும் வேற்றுக் கிரகவாசிகள் தாக்குகிறார்கள்.  இவற்றை மீட்பதற்கும் சரிசெய்து பறக்க விடுவதற்கும் பூமியில் சில மனிதர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

அப்படி சரிசெய்யும் பணி டாம்க்ரூசிற்கு... இப்படி ஒரு மீட்பில் ஈடுபட்டிருக்கும் பொழுது டாம் சந்திக்கும் அனுபவங்களும், அதிர்சிகளும் எதிர்பாரா திருப்பங்களும் படமாய் விரிந்திருக்கின்றது. ஒரு நல்ல அறிவியல் புனைவு, கொஞ்சம் மாட் மாக்ஸ், கொஞ்சம் சிக்ஸ்த் டே, கொஞ்சம் டோட்டல் ரீகால் என ஆங்கங்கே சாயல்கள் இருந்தாலும் படம் ஓகே.

டாமின் விமானம் அருமையான கற்பனை. இஷ்டத்துக்கு திரும்புகிறது, எடை தூக்குகிறது தானாக வீடு திரும்புகிறது! பூமியில் தொடங்கி அந்தரத்தில் மிதக்கும் வீடும் அதன் முன்னால் இருக்கும் கண்ணாடி நீச்சல் தொட்டியும் கற்பனையின் உச்சம். படத்தின் காமிரா, கிராபிக்ஸ் மற்றும் இன்ன பிற விசயங்கள் என்னை கவர்ந்ததைவிட ரகளையான இசை எனக்கு பிடித்திருந்தது.

ஒருமுறை பார்க்கலாம்.

அன்பன்
மது.

இந்தப் பதிவின் கவிதை

மீள்பதிவு

 

Comments

 1. சுவாரஸ்யமான விமர்சனம்.. காணொளிக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா

   Delete
 2. வணக்கம் சகோ. அற்புதமான தேர்ந்த விமர்சகராக படிப்பவர்களை ஈர்க்கும் வகையிம் விமர்சனம் செய்ய எங்கு கற்றுக் கொண்டீர்கள் சகோ. (உண்மை வெறும் புகழ்ச்சியில்லை). சிறந்த படம் பார்க்க தூண்டுகிறது.
  ---
  தலைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் சகோ. பகிர்வுக்கு அன்பான நன்றிகள். பொங்கல் எப்படி போயிட்டு இருக்கு சகோ!

  ReplyDelete
 3. படம் பார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனம்..அதிலும் டோம் க்ரூஸ் படம் வேறு..நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாகப் பார்த்துவிட வேண்டியதுதான்.
  கவிதை மனத்தைக் கலக்குகிறது..உங்கள் காணொளி அருமையாய் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete

Post a Comment

வருக வருக