விதை வீசி வினையறுப்போம்

பசுமைச்சித்தர்
தீன தயாளன்
பயணங்கள் தான் உண்மையான கல்விமுறை என்பார் எஸ்.ரா. அது உண்மைதான் என்பது போல ஒரு நிகழ்வு. ஒரு பயிற்சிக்காக ஈரோடு செல்லவேண்டியிருந்தது.  நிகில் நிறுவன பயிற்சிகளுக்கு செல்லும் பொழுது சக பயிற்சியாளர்களுடன் உரையாடுவதால் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே பயன்பெறத்தக்கவையே. கரூர் துவங்கி ஈரோடுவரை செல்லும் வழியில் ராமநாதபுரத்தின் ஒரு கி ஜேசி  திரு.தீனதயாளன் அவர்களை  திரு அஸ்வத் கேள்விகளால் துளைத்தெடுத்தார். நான் தீனாவின் பதில்களை பொறுமையாக கேட்டுக் கொண்டுவந்தேன்.

தீனா "விதை வீசி வினையறுப்போம்" என்பதை விளக்கிய பொழுது உண்மையில் அசந்துபோனேன். வினை (துன்பம்,பாவம்) தீர நமது முன்னோர் வழக்கு இது. ஒரு விருட்சத்தின் விதையை வீசி, அது வளரும் பொழுது அதன் நிழலில் இளைப்பாரும் மனிதர்களும் விலங்கினங்களும் வாழ்த்துவார்கள். (அந்தக் காலத்தில் மரத்தை வெட்டி போராட்டம் எல்லாம் செய்ய மாட்டார்கள் அல்லவா ?) இது விதைத்தவருக்கு ஒரு புண்ணியமாக போய்ச்சேரும் என்று சொல்லிவந்திருக்கிறார்கள்.

உண்மையில் இயற்கையோடு எத்துனை இசைவாய் வாழ்ந்திருக்கிறது தமிழினம். இந்தப் பதமே(தலைப்பு) எனக்கு இந்த பயணத்தில்தான் தெரியும். நன்றி தீனா. மேலும் நவகிரக மரங்கள், ராசிக்கொரு மரம் என இவரது பேச்சு மறந்து போன பழைய ப்ரோக்மாட்டிக் ஆன்மீகத்தை எனக்கு அறிமுகம் செய்தது.

மேலும் தீனாவின் ஜி.எப்.சி கிரீன் பிரண்ட்ஸ் சர்கிள் (சி.எப்.சிக்கு ரைமிங்கா) குறித்தும் அறிந்தேன். எப்படி ஒரு நர்சரியை நடத்த வேண்டும், மேட்டுப்பாத்தி என்றால் என்ன, அமிர்த கரைசல் என பசுமை விவசாயத்தை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் தீனா.

தீனாவை வைத்து ஒரு நிகழ்வை புதுகையில் நடத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். மாடித் தோட்டம் அமைதல், நர்சரி கன்றுகள் வளர்ப்பு, பசுமை விவசாயம் குறித்தும் பயிற்சி தர தீன தயார். நான்தான் தயாராக வேண்டியிருக்கிறது.

முடிகிற இடங்களில் விதைகளை வீசுங்கள்.

பாப்போம்
மது.

இந்தப் பதிவில் கொஞ்சம் பணம்


விக்கிபீடியர் ரவிசங்கரின் ஒரு பயனுள்ள பகிர்வு

வலையில் பணம்

இது சுமார் நான்கு கட்டுரைகளாக தொடர்கிறது பொறுமையாக படிங்க, பணம் பண்ணுங்க.


 

Comments

  1. திரு.தீனதயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. புயல்கூட கொஞ்சம் மெல்ல வரும்

      நன்றி

      Delete
  2. "//அந்தக் காலத்தில் மரத்தை வெட்டி போராட்டம் எல்லாம் செய்ய மாட்டார்கள் அல்லவா ?//" - இன்றைக்கு ஒரு கட்சி அதை செய்தே மிகப்பெரிய கட்சியாக உருவாகியிருக்கிறதை என்னவென்று சொல்ல???

    ReplyDelete
    Replies
    1. கல்வி விழிப்புணர்வே தீர்வு

      Delete
  3. விதை வீசி வினை அறுப்போம்! நல்ல அருமையான விளக்கம்! பயனுள்ள பதிவு! தீனா அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்லதொரு தகவல் பகிர்விற்கு நன்றி மது. புதுகையில் பயிற்சி நன்றாக நடக்க வாழ்த்துகள்..தயவுசெய்து இங்கும் பகிர்ந்துகொள்ளுங்கள், என்னைபோல புதுகை வரமுடியாதவர்களுக்காக.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக
      வருகைக்கு நன்றி

      Delete
  5. வணக்கம் சகோ!
    விதை வீசி வினை யறுப்போம் நல்ல விடயம் தான்.
    தாங்கள் பயிற்சி எடுக்கும் போது எமக்கும் நீங்கள் பயிற்சி அளியுங்கள். அப்போ நாமும் பயன் படுவோம் அல்லவா?
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக
      வருகைக்கு நன்றி

      Delete
  6. தீனதயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    முடிந்தவரை விதை வீசுவோம்

    ReplyDelete
  7. அன்பு சகோவிற்கு வணக்கம்
    அருமையான நபரை அறிமுகப்படுத்தியமைக்கு முதலில் நன்றி. நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்திருக்கிறது. பயணங்கள் மூலம் கற்க முடியும் என்பதை உங்கள் பதிவும் தான் உணர்த்துகிறது சகோ. முடியும் போது புதுக்கோட்டையில் நண்பரை வைத்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவசியம் கலந்து கொள்வேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..

      அவர் முழுமையாக போடவேண்டும் என்றால் ஒரு மூன்று பதிவுகளாவது போடவேண்டிவரும் ...

      சுருக்கமாக பதிவிடலாம் என்று முயன்றேன்...

      Delete
  8. "விதை வீசி வினையறுப்போம் "அருமை

    ReplyDelete
  9. அருமை தீனா & கஸ்துரி

    ReplyDelete
    Replies
    1. வருக ...வணக்கம்...
      பிரீபெர்ட் எப்போது படைப்புகளை வெளியிடப் போகிறது...

      Delete
  10. அருமை தீனா & கஸ்தூரி

    ReplyDelete

Post a Comment

வருக வருக