வீரம், ஜில்லா ஒரு பார்வை

விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.
ஒரு முக நூல் பதிவரின் குசும்பு!


பொங்கலுக்கு வரும் படங்களில் என்ன இருக்கணுமே அதெல்லாம் சீசாவில் போட்டு குலுக்கி ஸ்க்ரீனில் கொட்டினால் கிடைப்பது என்ன? இரண்டு படங்களுமே கரம் மசாலா.

எனது முஸ்லீம் மாணவர்களில் பலர் தல ரசிகர்கள். சார் நல்லா இருக்கு என்று அஜீத் வரும் விளம்பரங்களைக் கூட திரைப்படமாக்கி சிலாகித்து பேசுவார்கள். நாம் தான் கொஞ்சம் டரியலாகிப் போவேம். அவர்களுக்கு கதை, லாஜிக் என்று எதுமே தேவையில்லை. சும்மா அஜீத் வந்து கூலர்சை போட்டுகொண்டு நடந்தாலே போதும்.அவர்களைப் பொறுத்தவரை அது வெற்றிப்படம்!

எந்த ஹீரோவாவது நரைத்த தலையுடன் டூயட் பாடியிருக்கிறாரா? இதுதான் வீரம்? எந்த காம்ப்ரமைஸும் இல்லாத மசாலா என்றால் வீரம் அதில் முன்னால் நிற்கிறது.  படத்தின் ஒரு பலம் சந்தானம் காமெடிதான். ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் தமன்னா இன்னொரு பலமாக இருக்கலாம். 

யு.எஸில் பாக்ஸ் ஆபிசில் முன்னணி என்று தகவல் வருகிறது. மகிழ்ச்சி.

எந்த கிராமத்திற்கு போனாலும் அங்கே விஜய் பற்றி பேசினால் கொஞ்சம் கவனத்தோடு பேசுவது நல்லது. எனக்கு பலநாள் சந்தேகமாகவே இருக்கும் என்னடா விஜய்யை இவங்க வீட்டில ஒருத்தனா நினைக்கிறான்களே என்று. ஆனால் அதுதான் உண்மை.

ஜில்லாவின் பாடல்கள் படத்திற்கு ஒரு பெரும்பலம். மற்றபடி இருவரும் அவரவருக்கு உரிய கிளிஷே காட்சிகளை தைரியமாக செய்திருக்கிறார்கள்.
அஜீத் நடை ராசா என்றால் விஜய் விழி ராசா. 

க்ளோசப் காட்சிகளில் கண்களை மூடி இசை திரையை அதிரடித்தவுடன் இமைகளை ஸ்லோமோசனில் திறந்துகொண்டே இருக்கிறார். 

பொங்கல் அன்று நல்ல படம் தருகிறேன் என்று அதீதப் படங்களை தராதற்காக இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரு நன்றி. இரண்டுமே ஒரு நல்ல பாப்கார்ன் பாமிலி படங்கள்தான். 

பொங்கல் அன்னைக்கு க்ளோபல் வார்மிங்கையோ, சர்வதேச பொருளாதாரத்தையோ பற்றி பார்ப்போமா என்ன ?

அன்பன் 
மது

இந்தப் பதிவில் ஒரு தகவல் 


சிலஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எம். எஸ்.ஏ அளித்த பயிற்சியில் தனது வலைப்பூவை தொடங்கிவிட்டு, மீண்டும் புதுகைக் கணினித் தமிழ்ச்சங்கம் தந்த பயிற்சியில் தனது வலைபூவை திண்டுக்கல் தனபாலன் அய்யா மூலம் மேம்படுத்தி வலையுலகில் சில அலைகளை எழுப்பி வரும் என் இளவல் பாண்டியனை சந்தித்தேன். அது ஒரு குத்தமா? அதையும் ஒரு பதிவில் எழுதியிருக்கிறார் பாண்டியன். 

Comments

 1. "//பொங்கல் அன்னைக்கு க்ளோபல் வார்மிங்கையோ, சர்வதேச பொருளாதாரத்தையோ பற்றி பார்ப்போமா என்ன ? //" - சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் விசேட நாட்களில் எல்லாம் "வெள்ளித்திரையும் சின்னத்திரையும் தானே நமக்கு முக்கியம். உலகமோ,நாடோ எப்படி போனா நமக்கென்ன???

  ReplyDelete
  Replies
  1. சுடும் நிஜம் ...

   Delete
 2. சகோவிற்கு வணக்கம்
  வீரம், ஜில்லா விமர்சனங்கள் நிறைய பேர் எழுதியிருந்தாலும் ”எத்தனை பேர் எழுதியிருக்காங்கிறது முக்கியமல்ல யாரு எழுதுறாங்க றது தான் முக்கியம்”னு சொல்லாம சொல்லி தங்களது பாணியில் ஒரு விமர்சனம் ரசிக்க வைக்கிறது.
  -------
  அத்தோடு நட்பு எனும் மூன்றெழுத்தால் அரும்பி உறவு எனும் மூன்றெழுத்தாக மலர்ந்துள்ள நமது அன்பின் காரணமாக எழுந்த எனது பதிவையும் இணைத்த விதம் அருமை. தொடருங்கள் சகோ. நன்றி..

  ReplyDelete
 3. இரண்டு படங்களுமே நல்லா இருக்கு என்று விமர்சன பதிவர்கள் சொல்கிறார்கள்... ம்...

  பாண்டியன் அவர்களுக்கும், அதை பதிவில் இணைப்பு கொடுத்தமைக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 4. பதிவு - மூன்றெழுத்து;
  அருமை - மூன்றெழுத்து;
  :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி - மூன்றெழுத்து!

   வருகைக்கு நன்றி

   Delete

Post a Comment

வருக வருக