முகநூல் நிலைத் தகவல்கள்..

https://www.facebook.com/kasthurirengan74

அம்பேத்கர் 

திரையிடல் நிகழ்வு ஒன்றுக்கு அண்ணன் ராசி பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்திருந்தார் ..
பாதிப் படம் முடியும் தருவாயில் சென்றேன்..
பல விசயங்கள் ஆச்சர்யம் படத்தில் அம்பேத்கர் எழுப்பும் கேள்விகள் இன்னும் அப்படியே இருப்பது இந்தியாவின் சாபம்...உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் தருகிறேன் எங்களை உங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அது என்றும் நடக்காது என்று உணர்ந்து புத்த மதத்திற்கு மாறுவது ... 
குழந்தைகளை ஒன்றொன்றாய் பறிகொடுப்பது ... 

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் காந்தி சட்ட அமைச்சாராய் அம்பேத்காரை பரிந்துரைப்பது இன்னும் எத்தனையோ நல்ல விசயங்கள் ...

எனக்கு தோன்றியது இது தான் அறுபது வருடமாய் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒன்றும் செய்யவில்லை சமத்துவ பகுத்தறிவு பெற்ற சமூதாயத்தினை சமைக்க ...

ஒருவேளை செலபசில் இல்லை என்பதாலோ?

இன்னொன்றும் எனக்கு தோன்றியது கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு எப்படி அவனது சமூகத்தின் ஆயிரம் ஆண்டு அடிமை விலங்கை தகர்க்கும் என்பதும் ..

இன்னும் பல அம்பேத்கார்கள்வர வேண்டும்...
பல பெரியார்கள் வரவேண்டும் ...
அது ஆசிரியப் பேரினத்தின் கையில்தான் இருக்கிறது...
(அம்பேத்கர் ஒரு பிராமன ஆசிரியரின் பெயர் அண்ணலின் உண்மையான பெயர் பீமாராவ்)


---

சமயங்களில் நந்தன் ஸ்ரீதரன் எழுத்துக்களை பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்
தமிழ் ஒரு அற்புதமான மொழி என்பதை நாம் உணர 

அற்புதமான கவிதைகள் வேண்டும்
அவற்றை நந்தன் தருகிறார்...
அவரையும் அவரது கவிப் பட்டாளத்தையும் தந்த 

முகநூலுக்கு ஒரு நன்றி ...
காலத்தச்சன், ராசு ஆகா கவிப் போராளிகள் ...

----

குழலும் யாழும்
இசைந்த
குரலில்
அப்பா இங்க வாங்களேன்
இங்க பாருங்க

அவளுடைய உணவுக் கூடை
விளக்குற பாத்திரக் குவியலில்
வியந்து போனாள் குட்டி மகி

அவளுக்கு அது அற்புதம்
எனக்கு அவள் அற்புதம்
இப்படியாக விடிந்திருக்கிறது இன்றைய பொழுது
...
(சத்தியமாக இது கவிதை இல்லை )
காலை வணக்கம் நண்பர்களே..


அன்பன் 
மது 
  

Comments

 1. கவிதை நல்லா இருக்குங்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //ஒருவேளை செலபசில் இல்லை என்பதாலோ? //நச்!

  அருமையான பகிர்வு அம்பேத்கார் பற்றியது!

  ReplyDelete
 3. எத்தனை அம்பேத்கர், எத்தனை பெரியார், எத்தனை காமராஜர் வேண்டுமோ நம் நாட்டுக்கு!!!!
  பொழுது அழகாக விடிந்துள்ளது..கவிதை நன்று! :)
  //அவளுக்கு அது அற்புதம்
  எனக்கு அவள் அற்புதம் // எனக்கு இவ்வரிகள் அற்புதம்!

  ReplyDelete
 4. //அவளுக்கு அது அற்புதம்
  எனக்கு அவள் அற்புதம்
  இப்படியாக விடிந்திருக்கிறது இன்றைய பொழுது //
  இதை விட வேறு எது கவிதை ஆக முடியும்

  ReplyDelete
 5. வணக்கம் சகோ
  அழகான நிகழ்வோடு கவிதையும் பகிர்ந்தது ரசிக்கும்படி உள்ளது. ஆசிரியர்களின் கழுத்தை சாதி வெறி பிடித்த கைகள் பிடித்து விடுமோ என்ற அச்சம் தான் என்னவோ சாதியக்கொடுமைகளைக் களைய மாணவர்களை உருவாக்க வெகுவாக மற(று)க்கிறார்களோ என்பது எனது ஐயம். அனைத்தும் மாற வேண்டும். பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete

Post a Comment

வருக வருக