ஜே.சி.ஐ புதுகை சென்ட்ரலின் தலைவர் ஜேசி. ஏவிஎம்எஸ் கார்த்திக் திடீரென அழைத்து இன்று நான்குமணிக்கு ஒரு நிகழ்வு இருக்கிறது அவசியம் வரனும் என்று அழைத்தார்.
உறுப்பினரை போன் செய்து விழாவிற்கு அழைக்கும் அரிதான ஒரு தலைவர். அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறார்களுக்கு நலப் பொருட்கள் வழங்கும் விழா. நான் நைசாக புறப்பட்டு கிராமத்திற்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த பொழுது மீண்டும் அழைத்தார். சரி இனி போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று பட்டதால் சென்றேன்.
விழாவில் கலந்துகொள்ள வந்த வையாபுரி உள்ளே வரும் வரை நன்றாக இருந்தார் குழந்தைகளை பார்க்கும் வரைதான், பார்த்த மட்டில் கலங்கிவிட்டார். பேசவே முடியவில்லை அவரால்.
ஒருவழியாய் நலத்திட்ட உதவிகளை செய்து குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் உறுப்பினர்கள் போட்டோ செஷன்.
கொஞ்சம் நார்மலாகி இருந்தார். ஒரு குழந்தை மைக்கைப் பிடித்து அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு என்று துவங்க ஆர்வமாய்ப் பார்த்தார்.
பாட்டைக் கேட்க கேட்க ரொம்பவும் நெகிழ்ந்தார்.
பயல் 'கிழிஞ்ச சட்டைக்காரன் என்று பயலுக ஏசுறாங்க என்ற வரியைப் பாட இவர் கையை எடுத்துக்கும்பிட்டு போதும் என்று கதறாத குறை.
மிக நெகிழ்வான நிகழ்ச்சி. ஜேசி அழகப்பன் அவரது பிள்ளைப் பிராயம் ஏதும் நினைவில் ஆடியிருக்கலாம் என்று சொல்ல நான் புரிந்துகொண்டேன்.
கொசுறாய் ஒரு தகவல்
வையாபுரி இப்போது மழையில் நனைந்த தங்கம் என்று படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். விஷ்ஷஸ்.
நல்லது நண்பர்களே மீண்டும் சந்திப்போம்
அன்பன்
மது
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஜே.சி.ஐ யின் நலத்திட்ட உதவிகளுக்கு முதலில் நன்றிகள். நல்லதொரு நிகழ்ச்சிக்கு நடிகர் வையாபுரி வந்து நெகிழ்ந்த சம்பவம், நல்ல உள்ளங்கள் திரைப்படத் துறையில் இருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோதரி..
எமையும் நெகிழ வைக்கும் நிகழ்ச்சியே. வையாபுரி அவர்களுக்குத்தான் எவ்வளவு இளகிய மனது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..! தொடர வாழ்த்துக்கள்....!
நெகிழச் செய்கிறது
ReplyDeleteஜே.சி.ஐ யின் நலத்திட்ட சேவைகள் சிறக்கட்டும்...
ReplyDeleteவையாபுரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வணக்கம் நண்பரே.நானும் jci யில் பங்குகொண்ட அனுபவம் உண்டு.ஏற்காடு ஜெசிஸ் நிர்மானத் தலைவராய் இரண்டு வருடம் tதொன்றாற்றி இருந்துள்ளேன்.மேலும் சேலம் ஜேசிஸ் நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்துள்ளேன்.மகிழ்ச்சியான நாட்கள் மறக்க முடியாத நிகழ்வுகள்.தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்
ReplyDeleteநகைச்சுவையாகப் பேசுகிறவர், நடிக்கிறவர்களின் வாழ்க்கையில் சொல்லமுடியாத சோகம் அப்பிக்கிடக்கும் என்பார்கள் நானும் இதை நம்புகிறேன் (என்னிடம் பாரதிராஜா இப்படிச் சொன்னார்)
ReplyDeleteஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் - குறள்-71.
நெகிழ்ச்சியான நிகழ்வு ... வையாபுரிக்கு வாழ்த்துக்கள் ..
ReplyDeleteபடிக்கும்பொழுதே மனம் நெகிழ்கிறதே..., நேரில்...
ReplyDeleteநீங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தால், இந்த மாதிரி ஒரு அருமையான மனதை நெகிழ வைக்கக்கூடிய நிகழ்ச்சியை தவறவிட்டிருப்பீர்கள். கூடவே நாங்களும் தவற விட்டிருப்போம்.
ReplyDeleteபகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
வையாபுரிக்கு வாழ்த்துக்கள்