வெஹிகில் 19

 பால் வாக்கரின் படங்கள் என்றால் பார்ப்பது என் வழக்கம். எதார்த்தமாய் வெஹிகில் 19 என்று படம் மாட்டியது. படத்தின் ஆரம்ப காட்சியில் பதட்டமாய் ஒரு ஸ்டேசன் வாகனை செலுத்தும் மைக்கேல் வூட்ஸ் (பால் வாக்கரை) துரத்துகிறது ஒரு போலிஸ் பட்டாளம்.

திரை மெல்ல மங்க இருநாட்களுக்கு முன்னர் என்று ஆரம்பிகிறது படம். பால் பிணையில் வெளிவந்த ஒரு கைதி. சட்டப் படி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. இருந்தும் ஜோஹன்ஸ்பர்க் வருகிறார். தனது மனைவியை சந்திக்க!பாலின் மனைவி அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றுகிறார். இவரது சேட்டைகளை கண்டு மனம் வெறுத்த அவர் வெகு கறாரக இன்னும் அரைமணி நேரத்தில் வராவிட்டால் இனி எப்போதும் வர வேண்டாம் என்று சொல்ல பால் காரை விரட்டுகிறார். சந்தித்தாரா இல்லையா என்பதுதான் கதை.


எனது பார்வையில் செமையான ஒரு ஆக்சன் பாக்கேஜ் படம். காமிரா ஜோர், குறிப்பாக வெளிறிப்போன திரையில் இருந்து கொஞ்சம் உருவத்தை குவியப் படுத்தி, ஒலிப்பதிவில் பதட்டமான மூச்சினை சேர்த்து திரை மெல்ல உருவங்களை காட்டும் பொழுது,  விரையும் காரில் பதட்டமான ஹீரோவின் முகத்தை காட்டி ஆரம்பிக்கிறது படம்.

எப்படி பார்வையாளனை தயார்ப்படுத்துவது எப்படி கதையை கொஞ்சம் கொஞ்சமாக விரிப்பது என்று சொல்லியிருக்கும் திரைக்கதை அருமை.

அட்டர்னியாக வந்து பால் வாக்கரைப் படுத்தி எடுத்து கதையை செலுத்தி எதிர்பாராமல் பரமபதம் அடையும் நடிகை நெய்மா மெக்லீன்  ஜோராக நடித்திருக்கிறார்.

பால் வாக்கரின் ரசிகன் என்பதால் பிடித்தா இல்லை உண்மையிலேயே நல்ல படமா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

நேக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! நோக்கு? கொஞ்சம் நோக்கீட்டு சொல்லுங்க!

Comments

 1. படம் பற்றிய விமர்சனம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. எதோ எனக்கு தெரிந்த மாதிரி எழுதிக்கொண்டிருகிறேன்...
   உங்கள் கருத்துக்கு நன்றி முனைவரே ...

   Delete
 2. தங்களின் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது
  வாய்ப்பு கிடைப்பின் அவசியம் பார்க்கிறேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஒரு சராசரியான ஆக்சன் படம்தான் அய்யா, நீங்கள் பார்க்கவேண்டிய படங்களை கூடிய விரைவில் பட்டியலிடுகிறேன்

   Delete
 3. சகோவிற்கு வணக்கம்
  தங்கள் விமர்சனம் என்றும் தப்பாகி போவதில்லை. உண்மையில் உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது. எங்களுக்கெல்லாம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியல் கிடையாதா சகோ! சும்மா. பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. சகோ
   வணக்கம்
   தீவிரமான சொந்த அலுவல்களில் கொஞ்சம் ப்ளாக் சுனக்கமா?
   பரவயில்லை.. வாழ்வின் ஒரு பகுதிதான் ப்ளாக் ..
   இந்தப் படம் அனேகமாக இந்த வாரம் ஹச் பி ஒ ஹிட்ஸ் அல்லது டிஃபைன்இல் வரும்...

   Delete

Post a Comment

வருக வருக