நெய்க்காரப்பட்டி ஜமீனும் வள்ளலார் மாணவர் இல்லமும்


மருத்துவர்.ராமதாஸ் மற்றும் காத்தமுத்து சாமிகளோடு திரு.வினோத்

புதுகையின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று மாத்தூர் முருகன் கோவில். இந்தக் கோவிலின் பின் சுவற்றின் முடிவில் ஒரு சேவை நிறுவனம் ஒன்று சிறப்புற இயங்கி வருகிறது. இக்கோவில் வருவதற்கு முன்னேரே இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனத்தை இன்று கோவிலை வைத்து அடையாளம் சொல்கிற நிலை!



பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கும், ஏழ்மை சூழலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உணவிட்டு, உறையுள் தந்து அவர்களின் வாழ்வில் ஒரு நம்பிக்கை தீபத்தை ஏற்றும் பணியை ஆரவாரமின்றி செய்துவரும் வள்ளார் மாணவர் இல்லம் சிறப்புற செயல்பட்டு வருவது இங்குதான்.

மருத்துவர். இராமதாஸ் இதன் நிர்வாகிகளில் ஒருவர். இவரது ஏற்பாட்டில் ஒரு நிகழ்விற்கு சென்றபொழுது தற்போதைய பொறுப்பாளர் காத்தமுத்து சாமிகள் ஒரு அருமையான கதையை சொன்னார்.
நெய்க்காரன்பட்டி ஜமீன் தனது தோப்பில் குலை தள்ளிய முதல் வாழைத்தாரை பழனி முருகனுக்கு சமர்பிக்க எண்ணி தனது பண்ணையாள் குப்பனிடம் கொடுத்து பழனிக்கு அனுப்பினார்.

நெடுந்தூரம் பயணித்த குப்பன் ஒரு மரநிழலில் ஓய்வெடுத்து செல்கிறான். வெயில் வாட்ட பசியால் துடித்த அவன் அய்யா பழனி முருகா என்னை மன்னித்துவிடு என்றவாறே நான்கு பழங்களை எடுத்து சாப்பிட்டு விடுகிறான்.

ஒருவழியாய் பழனியில் இருந்து திரும்பியவன் ஜமீனை அடைந்ததும் அதிர்கிறான். ஜமீன்தாரின் கனவில் வந்த முருகன் விசயத்தை சொல்லிவிட்டார் என்று சக வேலைக்காரர்கள் சொல்ல உயிர்ப்பயத்தோடு நடுங்கியவாறே நிற்கிறான்.

 ஜமீன் நடந்தை சொல் என்கிறார். அய்யா மன்னிச்சிருங்க நான் பசி தாங்காம நாலே நாலு பழத்தை சாப்பிட்டு விட்டேன். என்று  குப்பன் சொல்ல அவனைக் கையெடுத்து கும்பிட்டு முருகா என்று வானைப் பார்த்து கண்ணீர்மல்க கதறியிருக்கிறார்.

குப்பன் ஒன்னும் புரியாது விழிக்க ஜமீந்தார் சொல்லியிருக்கிறார் கனவில் வந்த முருகன் சொன்னார் நீ எனக்கு அனுப்பிய நான்கு பழங்கள் கிடைத்தது என்று. பசித்திருக்கும் நீ சாப்பிட்டதை இறைவன் தான் சாப்பிட்டதாக சொன்னது எனக்கு புரியாத எல்லாவற்றையும் புரியவைத்து விட்டது குப்பா என்று சொல்லி அணைத்துக்கொண்டார் குப்பனை.

கிருபானந்த வாரியார் சொன்னதாக சொன்ன இந்தக் கதையை காத்தமுத்து சாமிகள் சொன்னபொழுது கேட்ட உள்ளங்களில் ஈரம் சுரந்தது.

இந்த மாதிரிக் கதைகள் சமூகத்தை நல்வழிப்படுத்தும் என்பதால் எனக்கு உடன்பாடு இல்லாத பொழுதும் இதை இங்கே பகிர்ந்தேன். இத்தகு மத குருமார்கள் இந்துமதத்தின் உடனடித் தேவை. இதை விட்டுவிட்டு மனிதர்களை வர்ணத்தின் அடிப்படையில் பிரிப்பதுவும், புரியாத மொழியில் கடவுளை வணங்குவதையும் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் கூடாரம் காலியாகிவிடும். போதாக் குறைக்கு அதை இதை சொல்லி அடுத்த மதத்தின் வழிபாட்டு தளங்களை கைபற்றுவதையும் நிறுத்தினால் செழிக்கும் மனிதமும் மதமும்.

அன்பன்
மது.

Comments

  1. வணக்கம் சகோ !
    கண்கள் கலங்கத்தான்செய்கின்றன.

    அருமையான கதை ஆண்டவனின் கருணையே கருணை பாரபட்சம் இல்லாதவர் தான். ஏழைகளுக்கு கொடுப்பதே அவருக்கு கொடுப்பதற்கு சரி என்பர். ஆனால் தான் பசி தீர்த்தாலும். ஆதுவும் ஆண்டவனுக்கே எனும் போது. எவ்வளவு அன்பானவன். இல்லையா மது .
    வழிபடுதலும் முறையும் அவருக்கு வேண்டியதில்லை. மனிதாபிமானமும் கடவுள் நம்பிக்கையும் மட்டுமே அவருக்கு போதும். மனமுவந்த பதிவு !
    நன்றி ! மேலும் தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. மதங்கள் அரசியலாக்கப்பட்டு விட்டன.

    ReplyDelete
  3. நல்ல கதை! நானும் வாசித்து இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.சுரேஷ்..

      Delete
  4. கிருபானந்த வாரியார் சொன்ன கதை எக்காலத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  5. அருமையான ஒரு கதையை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.சொக்கன் ...

      Delete
  6. கதையை புனைந்தவர் நல்ல மனிதாபிமானமிக்கவர் . நன்றி -புனைந்தவருக்கும் , பதிந்தவருக்கும் .

    ReplyDelete
  7. நல்ல கதை சார்.வாரியார் பிடிக்கும் எனக்கு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக