காப்டன் அமரிக்கா - வின்டர்ஸ் சோல்ஜர்


காப்டன் அமெரிக்கா உண்மையில் தொண்ணூற்று ஐந்து வயதான ஒரு வேகம் மிக்க இளைஞர். சில ஆய்வுகளின் விளைவாக இவர் சில சிறப்பு திறன்களை அடைகிறார்.



இந்தப் பார்ட்டில் அய்யா அதகளம் பண்ணியிருக்கிறார். இந்தப் படம்  வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலீப் என்ற வகையைச் சார்ந்தது. எனவே லாஜிக்கை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு பார்க்கவேண்டும்.

பாப்பா கதை என்றாலும் அதற்கான மெனக்கெடல் நிச்சயமாக பாரட்டுக்கு உரியது.

அவன்ஜரின் அத்துணை படங்களிலும் ஷீல்ட் அமைப்பின் தலைவராக வந்த சாமுவேல் எல் ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்சன் போர்சனில் பட்டாசு கொளுத்தியிருக்கிறார்!

நான்கு கார்கள் தனது முரட்டு செவர்லேவை நாற்புறமும் மோதி நிறுத்தியபின்னர் எடுக்கிறார் பாருங்கள் ஒரு ஆக்சன் அவதாரம் அடி தூள். படத்தில் நான் வெகுவாக ரசித்து பார்த்த ஆக்சன் போர்சன் இது.

படத்தின் கதை இதுதான் உலகை சர்வதிகாரம் செய்ய ஹைட்ரா அமைப்பு தனது எதிரி அமைப்பான ஷீல்டை ஊடுருவி அதனையே தனது கருவியாக பயன்படுத்துகிறது.

உலகை அடிமைப்படுத்தியாள நினைக்கும் ஹைட்ரா வெற்றிபெற்றதா என்பதே கதை.

தனக்காக உயிர்கொடுத்து இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தனது நண்பனை மீண்டும் உயிருடன் சந்திக்கும் காப்டன் அமெரிக்கா எப்படி அந்த அதிர்ச்சியை எதிர்கொள்கிறார் என்பது ஒரு ட்விஸ்ட்.

பால்கன் காரெக்டரில் நடித்திருக்கும் அந்தோணி மாக்கீ தமிழ் நடிகர் போலவே செட்டகிவிட்டார். டப்பிங் வாழ்க! இது ஒரு வாவ் விசயம்! படம் வெற்றி பெற்றால் அதற்கு அந்த டப்பிங் கலைஞர்தான்  காரணம். நிச்சயம் விருதுக்கு உரியவர். வசனம் எழுதியவரையும் சேர்த்துத்தான்.

காப்டன் அமெரிக்கா, ப்ளாக் விடோ, நிக் ஜே. பியுரி என்ற கதாபாத்திரங்கள் மீண்டும் ஒரு முறை உங்கள் நேரத்தை உங்கள் அனுமதியுடன் திருட வந்திருக்கும் படம் இது. மகிழ்வுடன் அனுமதிக்கலாம்.

கிரிஸ் எவான்ஸ் காப்டன் அமெரிக்காவாக வருகிறார். அதி பராக்கிரம வில்லன் செபாஸ்டின் ஸ்டான்.

கடைசியாக ஒரு விசயம்

மார்வல் காமிக்ஸ் நிறுவனம் தனது கதாபாத்திரங்களை லாபமோ நட்டமோ கருதாது தொடர்ந்து சில திரைப்படங்களின் மூலம் உலகிற்கு தந்துகொண்டே இருக்கிறது.

தோர்(இரண்டு பாகங்கள்), அயர்ன் மேன்(மூன்று பாகங்கள்), ஹல்க்(2 பாகங்கள்) அப்புறம் காப்டன் அமேரிக்கா (இரண்டு பாகங்கள்). பின்னர் இந்தக் கதா பாத்திரங்கள் எல்லாம் இணைந்து கலக்கும் அவன்ஜெர்ஸ் என்று ஒரு படம். தனது படைப்பிற்கு ஒரு விரிவான தளத்தை லாப நாட்ட நோக்கில்லாமால் உருவாக்குவதை நான் கவனித்தேன். பிராண்ட் கிரியேசன் மற்றும் எக்ஸ்பான்சன்?

இதில் இருந்து தமிழ்த் திரை படிப்பதற்கு நிறைவே இருக்கிறது.

ஒரு பிராண்டை உருவாக்கி அதை வணிகப் படுத்தும் கலையை நம்ம ஆட்கள்  இன்னும் சிந்திக்கவே இல்லை. (ஒரு படம் எடுக்கவே உன்னைப் புடி என்னைப் புடின்னு சிரமப்படுவதால் இருக்கலாம்!)

அன்பன்
மது

Comments

  1. நீங்கள் கூறிய விதம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகின்றது

    ReplyDelete
    Replies
    1. தாரளமாக பார்க்கலாம்.
      ..
      காமிக் புக் படித்தவர்களுக்கு இது பிடிக்கும் ...
      இலக்கிய நாவல்களை படித்தவர்களுக்கு எரிச்சலூட்டலாம்...

      Delete
    2. கீதா கண்டிப்பா பாருங்க..பிடிக்கும் :)

      Delete
  2. அருமையான விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் ...

      Delete
  3. விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா பார்க்கல...
      வருகைக்கு நன்றி திரு.குமார்.

      Delete
  4. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா...
      சில காரணங்களுக்காக நான் சித்திரை ஒன்று அன்று வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை

      Delete
  5. வணக்கம் சகோ
    தங்களின் விமர்சனம் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. கடைசியாக ஒரு விசயம் உங்களின் ஹாலிவுட் படம் சார்ந்த அறிவை விளக்குகிறது அத்தோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டு விதம் மிகவும் சிறப்பு. இந்த ஒப்பீடு நம்மவர்களுக்கு இருந்தால் தமிழ் சினிமா சிகரம் தொடும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் ஹாலிவுட் படம் சார்ந்த அறிவை விளக்குகிறது//
      சகோ நல்லா உசுப்பேத்திறீங்க ...
      உடம்பெல்லாம் ரணமாகும் வரை விடமாட்டீங்க அப்படித்தானே

      Delete
  6. பார்க்கவேண்டும்! தங்கள் விமர்சனம் அதைத்தான் சொல்லுகின்றது!

    எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலீப் வகை
      சரியான ஃபாண்டசி....
      போய்ப் பார்த்துவிட்டு என்னை மொத்த வேண்டாம்...
      காமிக்ஸ் ரசித்து படித்தவர்களுக்கு மட்டும் புரியும் ... பிடிக்கும்..

      Delete
  7. போகணும்..எங்க வீட்டு கேப்டன் அமெரிக்கா( சின்னவன்) படம் வரப் போகிறது என்று தெரிந்ததிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். :)

    ReplyDelete
    Replies
    1. அழைத்து செல்லலாம் ... அவர்களுக்கான படம்தான் இது ...
      எனது நண்பனின் மகள் எனக்கு பிடிக்காது .. என்று சொல்லிவிட்டாள் !
      ஜுராசிக் பார்க் மாதிரி இருந்தால் பார்க்கலாம் என்கிறாள் ... ரசனையில் எத்துனை வேறுபாடு... (ஆண்குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும்)

      Delete
    2. ஆமாம்...என் பையன்களுடன் சேர்த்து என் ரசனையும் மாறிவிட்டது. ஒருவழியாக இன்று படத்திற்கு சென்று வந்துவிட்டோம்.

      Delete
  8. ஹாலிவுட் படத்திற்கு விமர்சனம் எழுதுகிறவர்களே கம்மி, அதிலும் இப்படி அருமையாக விமர்சனம் எழுதுவது ரொம்பவே கம்மி.. சொல்லிட்டீங்கள்ள போயுறுவோம்.. விமர்சன‌ம் நன்று..!



    http://pudhukaiseelan.blogspot.in/

    ReplyDelete

Post a Comment

வருக வருக