ஏன் பல அரசுப் பள்ளிகள் நூறுசதவிகித தேர்ச்சி விகிதம் தருவதில்லை ?

ஒருவழியாக தேர்வுமுடிவுகள் வந்துவிட்டன. எமது பள்ளியில்  90% சதம் தேர்ச்சி. 

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 

உங்களுக்கு இது பல கேள்விகளைத்தரலாம் வரேன் ஒவ்வொன்றாக பார்ப்போம். 

 

முதலில் அரசுப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மாணவர் சேர்க்கைக்காக ஒரு அரசு பள்ளிக்கு ஒரு குழு சென்றிருக்கிறது. பிளஸ் டூவிற்கு அப்புறம் என்னப்பா படிக்க போறீங்க என்ற கேள்விக்கு பேந்த பேந்த விழித்திருகிரார்கள். நூறு பேர் கொண்ட குழுவில் இரண்டேபேர்தான் கையை உயர்த்தி இஞ்சினீரிங் சேர விருப்பம் என்று சொல்லியிருக்கிரர்கள். 

இதைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் அந்த பொறியியல் கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர். 

குரலில் ஒரு நூறு டன் அதிர்ச்சியுடன் சார் இவங்களுக்கு ப்ளஸ் டூவிற்கு அப்புறம் என்ன செய்யலாம் என்கிற விவரமே இல்லை சார் என்றார். 

நான் பதில் ஏதும் சொல்லவில்லை.ஒரு மாணவனின் மனதில்  உயர் கல்வி குறித்து விழிப்புணர்வையும் இலக்கையும் விதைப்பதில் அவனது பெற்றோரின் பொருளாதார சூழல் பெரும் பங்குவகிக்கிறது.

வெகு சிலரே மேலே மேலே படிடா என்று ஊக்குவிக்கிறார்கள். பல மாணவர்கள் தனது பெற்றோரின் பொருளாதார சூழலை மனதில் உள்வாங்கிவிடுவதால் தங்கள் கல்விக் கனவுகளை சூம்பிப்போக வைத்துவிடுகிறார்கள். 

இது அவர்களின் கற்றல் ஈடுபாட்டையும் நேரிடையாக பாதிக்கிறது.

கடும் வீட்டு வேலைகள்

எப்போதும் கல்வியாண்டின் முதல் நாளில் மாணவர்களை ஒரு பெருவட்டமாக அமரவைத்து அவரது கல்வி இலக்குகள் குறித்தும் அவர்கள் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்தும் பேசுவது எனது வழக்கம். 

ஒரு படிவத்தையும் தயாரிக்க சொல்வது வழக்கம். அதில் அவர்கள் எழுகின்ற நேரம் முதல் குறிக்க வேண்டும்.

ஒரு பெண் அவள் எழுகின்ற நேரம் அதிகாலை இரண்டு மணி என்று எழுதியிருக்க, தவறாக இருக்கும் என அவளை கேட்டேன். 

உண்மையிலே இரண்டுமணிக்கு எழுத்து பால்மாடுகளை குளிப்பட்டுவது எனது வேலை சார் என்றாள் அவள்.

அன்றுதான் நானும் அவளது சக மாணவ மாணவியரும் அவளின் வினோதமான தூக்கப் பழக்கத்திற்கு விடையைக் கண்டுபிடித்தோம். ஆமா நைட் இரண்டு மணிக்கு எழுத்து ஆறுமணிவரை மாடுகளை கவனித்துவிட்டு பள்ளியில் எப்படி பாடம் கவனிப்பாள். தூக்கம்தான். 

கீழ்வகுப்புகளில் எப்படியோ தப்பி பிழைது வந்துவிட்ட அவள் ஒன்பதாம் வகுப்பின் பாதியில் பள்ளியை விட்டு நின்றுவிட்டாள். 

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டிய பெண் அவள்.

இரத்தம் வற்றி வெளிறிப்போன அவள் எதோ ஒரு வயல்வரப்பில் தனது மாடுகளைப் பார்த்துக்கொண்டு இருப்பாள். இந்த மனச் சித்திரமே எனக்கு பெரும் வேதனையாக இருக்கிறது. 

(தற்போதைய  அரசு இப்போது மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகளைத் தருவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவளைப் போன்ற பல கிராமத்து மாணவிகளின் உடல்நலம் மேம்பட்டு வருவதை இங்கே நன்றியோடு பதிவு செய்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டம் வந்திருந்தால் அவளும் பயன் பெற்றிருப்பாள் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.)

கற்றல் குறைபாடுகள் 

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள் இருந்தாலும் கிராமத்து பெற்றோர்கள் அங்கெல்லாம் போவதில்லை. என் பிள்ளை இங்க தான் படிக்கணும் சார் என்பார்கள். 

பக்கத்தில் உள்ள திருச்சி ஞானாலயாவிலோ அல்லது தஞ்சை பள்ளிக்கோ செல்லமாட்டார்கள். 

முதலில் தினம்தோறும் குழந்தைகளைப் பார்க்க முடியாது. அடுத்தது அவர்களைப் பார்க்க செலவழிக்கும் நேரத்தில் வயல் கத்திரிக்காய் காய்ந்து போய்விடும். 

முழுக்க முழுக்க உழைப்பைச் சார்ந்திருக்கும் கிராமத்தில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை சிறப்பு பள்ளிக்கு அனுப்புவது   என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

அவர்களின் ஒரே புகலிடம் அரசுப் பள்ளிகள்தான். 

சில பள்ளிகள் விவரமாய் இவர்களை தவிர்க்கும். ஆச்யர்மாய்த் சில தலைமையாசிரியர்கள் இந்த மாதிரி மாணவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அரசுத் தேர்வு எழுத அனுமதிப்பதும் மிக மிக ஆச்யர்மாக சிலமுறை இம்மாதிரி மாணவர்களும் தேர்ச்சியுறுவதும் நாம் அறிந்ததே.  

சில பள்ளிகளில் அதீத எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பும், சில இடங்களில் மிகக் குறைவாக மாணவர் இருப்பதும் வெவ்வேறுவிதமான பரிணாமங்களில் பிரச்சனைக்கு உரியவையே.

.இந்த ஆண்டு நாங்கள் அரசுத் தேர்வுக்கு அனுப்பிய 79 பேரில் இருவர் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். மேலும் ஒருவர் பெரும் குடிகாரத் தந்தையால் பாதிக்கப்பட்டவர். இவர்கள் மூவருமே தேர்ச்சியுறவில்லை. எங்களது தேர்ச்சி சதவிகிதத்தை சேதப்படுத்துவார்கள் என்று தெரிந்தே அனுப்பினோம்.

இதில் எங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லை.

நேற்று தோல்வியுற்ற ஒரு பெண் போனில் அழைத்தாள். சார் நான் இன்ஸ்டன்ட் எழுதணும் என்ன செய்யணும் சொல்லுங்க என்றாள் உரிமையுடன். 

தனது தோல்வி குறித்து எந்த சங்கடமும் இல்லாமல், சூம்பிப் போய்விடாமல், லூசுத்தனமான முடிவுகளுக்கு போகாமல் அதுவும் என்னிடம் தொலைபேசிய அந்த நிகழ்வு சொன்னது நாங்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என!

நண்பர்களே அரசுப் பள்ளிகளை விமர்சிப்பதர்க்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்து பார்த்து பேசுங்கள். 

நூறுசதம் ஒரு மாயை. என்னைப் பொறுத்தவரை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உழைக்கும் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளி, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை (எம். ஆர் என்று சொல்லவது சரியல்ல இருந்தாலும் உங்களுக்காக)  விலக்காது அவர்களை தீரத்துடன் அரசுத் தேர்வுக்கு அனுப்பும் பள்ளிகளுக்கு என்றும் நூறு சதம்தான். 

அதை தேர்வுத் துறைதான் கொடுக்க வேண்டுமா என்ன?

அன்பன் 
மது

பி.கு.
இது உழைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குரலே ஒழிய, உழைக்காமல் தேர்வு விகிதத்தில் சொதப்பிய ஆசிரியர்களுக்கான சப்பைக்கட்டு அல்ல.  மாணவர்களை நேசிக்காத, அவர்களைப் புரிந்துகொள்ளமால் படுத்துகிற வெகு எளிதாக கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவர்களை வெளியில் அனுப்பும் போக்கும்  தீவிரவாதமே என்பது என் நிலைப்பாடு

Comments

 1. உரிமையுடன் (+ மன உறுதியுடன்) தொடர்பு கொண்ட பெண்ணிற்கு பாராட்டுக்கள்...

  பி.கு. தீவிரவாதம் - உண்மை...

  ReplyDelete
  Replies
  1. வருக வருக அண்ணா..
   நன்றி...

   Delete
 2. I am also a teacher. I 100 % agree with your thoughts.congratulations.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி... வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 3. வணக்கம் சகோ
  இது தான் நடைமுறை உண்மை. மிக விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் 11.30 மணிக்கு தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு வருகிறாள். முதல் மதிப்பெண் நீ தான் என்றவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. மீண்டும் நானா என்று கேட்கிறாள். 10 மணிக்கு தேர்வு முடிவு என்றால் அப்பவே வர வேண்டாமா என்று நான் கேட்கும் போது வீட்டு வேலை செய்து விட்டு வர தாமதம் என்ற போது தான் கேட்டிருக்க வேண்டாமோ என்று உறுத்தியது எனக்கு. கிராமப்புற மாணவர்கள் பலரும் வீட்டிற்கு சென்றதும் வேலைக்கு சென்றுள்ள பெற்றோர்கள் வருவதற்குள் தண்ணீர் எடுத்து சமைத்து வைக்க வேண்டும். 5 பெண் பிள்ளைகளுக்கு அப்புறம் பிறந்த தன் தம்பியைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இப்படி எவ்வளவோ சூழல். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த அளவிற்கு தேர்ச்சியும் தங்கள் மாணவி போல் மன உறுதியோடு இருப்பது தான் நூறு சதவீத வெற்றி. இது தான் எதார்த்தம் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். பின்குறிப்பு ஒரு நேர்மை இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பள்ளியின் முதல்வி ஒரு சத்துணவு ஊழியரின் மகள்.

   இன்னும் நிறைய இருக்கிறது சகோ அப்புறம் எழுதலாம் என்று வைத்திருக்கிறேன்..

   Delete
 4. "//நண்பர்களே அரசுப் பள்ளிகளை விமர்சிப்பதர்க்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்து பார்த்து பேசுங்கள். //" - உண்மையான வார்த்தை. ஒன்றுக்குள் இறங்கிப் பார்த்தால் தான் அதன் குறை நிறைகள் எல்லாம் தெரியும்.
  அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல், அந்தப் பக்கமே போகாமல், அந்த பள்ளிகளைப் பற்றி குறை கூறுபவர்களுக்கு அந்த தகுதி கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் திரு சொக்கன்...

   Delete
 5. தேர்ச்சி சதவிகிதம் என்பதே ஒரு மாயை.
  தேர்வில் வெற்றி பெற்றுப் பயனென்ன
  வாழ்வில் அல்லவா வெற்றி பெற வேண்டும்
  இன்றைய கல்வி, மாணவன் எதிர்காலத்தில எதிர் கொள்கிற பிரச்சினைகளில் இருந்து வெளிவர, தன்னம்பிக்கையை, புத்திசாலிதனத்தைக் கொடுக்கிறதா என்ன?
  நம்மால் இயன்ற வரை உழைப்போம்
  மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுப்போம்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 6. Replies
  1. நன்றி தோழரே... பஞ்சர் மாயாவிடம் பேசினேன். நன்றி..

   Delete
 7. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் நன்றாக கடுமையாகவே உழைக்கிறார்கள். ஓடாத குதிரையை ஓட வைக்கிறார்கள்; பாடாத வீணையைப் பாட வைக்கிறார்கள். ஆனாலும் பல மாணவர்களின் குடும்ப சூழல் எவ்வாறு படிப்பிற்கு தடைக்கல்லாக இருக்கிறது என்பதையும் ஆதங்கத்தோடு சொன்னீர்கள். இதுவே உண்மை. இன்னும் கிராமத்தில் படிக்காமல் அப்படியே இருக்கும் மக்கள் நினைவுக்கு வந்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் அப்படியே இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.

   ஆனால் அவர்களின் மனப்பாங்கு இதற்கு பெரும் தடையாக இருக்கிறது..
   நன்றி ஐயா

   Delete
 8. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள்..! "ரத்தம் வற்றி வெளிறிப்போன அந்த மாணவி "......நெஞ்சை ஏதோ செய்கிறது......எல்லா அரசுப்பள்ளிகளிலும் அது போன்ற குழைந்தைகளுக்கு நம் கற்பிப்பதே .....நாம் செய்த தவம் ....மற்றபடி தேர்ச்சி சதவிகிதம் எல்லாம் ....சும்மா ....!
  நெகிழ்வான பதிவு!.....நன்றி !.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.

   தங்கள் வருகை ரொம்பவும் மகிழ்ச்சியைத் தந்தது.

   தொடர்க..

   பாட்டு மன்றங்களையும், பட்டிமன்றங்களையும் அலங்கரித்த நீங்கள் வலைப்பூவிலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

   Delete
 9. பல மாணவர்களின் வீட்டுச்சூல்நிலை வேலைக்கு போய் வந்துதான் வீட்டுப்பாடம் படிக்கிறார்கள் அதிலும் மனதடமுடன் படிக்கின்றவர்களும் இருக்கிறார்கள்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 10. பல மாணவர்களின் வீட்டுச்சூல்நிலை வேலைக்கு போய் வந்துதான் வீட்டுப்பாடம் படிக்கிறார்கள் அதிலும் மனதடமுடன் படிக்கின்றவர்களும் இருக்கிறார்கள்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வருக கில்லர்... கருத்துக்கு நன்றிகள்..

   Delete
 11. வணக்கம்
  பதிவின் வழி சொல்லிய காரணங்களுக்கு தீர்வு காணப்படுமாயின் விடுபட முடியும்
  மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆறுதலான செய்தி என்னவென்றால் தீர்வுகள் நோக்கி நகர்கிறோம் ...
   கொஞ்சம் வேகமாக நடந்தால் நல்லது...
   தற்போது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கல்வி மனநல ஆலோசகர் நியமிக்கப் பட்டுள்ளார்.

   Delete
 12. மனதுக்கு கஷ்டமாக வே உள்ளது.வறுமையின் கொடுமையில் படிப்பிற்கு ஏங்குபவர்க்கு தொடரமுடியாதநிலமை. நிலைமை யுள்ளவர்க்கு கல்வியில் அக்கறை இல்லை. சத்துணவுத் திட்டம் கொஞ்சம் ஆவது உதவும் வறியவர் கற்க. அரச பாடசாலையில் ஆசிரியர்கள் சரியில்லை எனற குழப்பங்கள். தங்களைப் போன்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வளர வளர மாற்றம் நிச்சயம் காணும் தங்கள் முயற்சி கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சகோ !தங்களை பார்த்து ஏனைய ஆசிரியர்களும் திருந்த வாய்ப்புண்டு அல்லவா.
  நன்றி ! சகோ வாழ்க வளமுடன் ....!

  ReplyDelete
  Replies
  1. முதலில் விரிவான கமெண்ட்டுக்கு நன்றி..

   என்னை பார்த்து திருந்த வேண்டும் என்று சொல்லியிருக்கிரீர்ள்.. தங்கள் மதிப்பீட்டுக்கு நன்றிகள்..
   ஆனால் நான் என் முன்னோடிகள் பலரை பார்த்து என் பாதையை அமைத்துகொண்டிருகிறேன்..
   எங்கள் பள்ளியிலேயே பணியைப் பிரார்த்தனையாக செய்யும் பல ஆசிரியர்கள் உண்டு.. திரு ஸ்ரீனிவாச நாராயணன் அவர்களில் ஒருவர்...

   Delete
 13. ஐயா,
  உங்கள் பெயரைக் கொண்டு தேடி தாமதமாகத் தான் உங்கள் பக்கத்தில் வருகிறேன். படைப்பின் வெற்றி பிரமி்க்க வைப்பதிலல்ல! எனக்குள்ள உணர்வுகளை நீங்கள் படைத்துக் காட்டும் போது, நான் நினைப்பதை உங்களால் நான் நினைப்பதை விட அழகாகக் காட்ட முடியும் போது, ஏதாவது ஒரு புள்ளியில் என் உணர்வும் உங்கள் படைப்பும் ஒன்றிணையும் போது நிகழ்கிறது. தேர்வு முடிந்த அன்று எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியாத எம் பள்ளி மாணவன் தூக்கில் தொங்கிப் போனான். பந்தயத்தில் தோற்ற குதிரையைச் சுட்டுக் கொல்லும் இந்தச் சமூகத்தில் அந்தச் சூழலை அவர்க்குக் கொடுக்காமல் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டான். புத்தகங்களை அன்றி வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்காத கல்வி என்ன கல்வி? மனனப் படிப்பை அடித்தூட்டுவதன்றி மனவுறுதியைத் தராத பள்ளி என்ன பள்ளி?
  ஏதேதோ தோன்றுகிறது....
  நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. மதிப்பிற்கும் பிரியத்திற்கும் உரிய ஜோ

   சமயங்களில் இப்படி நிகழ்ந்துவிடுவது உண்டு உங்கள் பின்னூட்டம் என் கன்னங்களை நனைத்துவிட்டது.

   ஒருவனின் திறன்களை வெளிக்கொண்டுவருவதற்கு பதில் அவனை தாழ்வு மனப்பான்மையில் அமிழ்தும் ஒரு சிஸ்டம் நம்ம சிஸ்டம் ...
   விரைவில் மாறும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
   இந்த மாதிரி நிகழ்வுகள் தவிர்க்கப் படவேண்டும்..

   குதிரைகளுக்கு பளு க்ராஸ் இருக்கு.. குழந்தைகளுக்கு?
   *******
   நியாய குணம் வருகிற வயதுதான் எனக்கு இருந்தாலும் நீங்கள் அய்யா என்கிற அளவிற்கு நான் இல்லை ...
   பையாதான்.

   உங்களை ஜனவரி ஒன்று அன்று பார்த்துவிட்டு உங்களைப் பற்றி இன்னொரு நிறைகுடம் எழுதியிருந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.

   உங்களை மாதிரி ஆழமான ஆட்கள் இணையத்தில் உள்ளே வலைப்பூவில் வருவது மட்டற்ற மகிழ்ச்சி..

   Delete
 14. யதார்த்தமான கருத்துகள்! கிராமப்புற பள்ளியில் படித்து முன்னேறியவன் என்ற முறையில் 100% உடன்பாடு எனக்கு உண்டு. வறுமையான சூழலில் படிப்பைக் கைவிடும் மாணவர்களுன் உண்டு. வறுமையிலும் படிப்பில் கவனம் செலுத்து வெற்றிபெற்றவர்களும் உணடு! நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி!

  ReplyDelete

Post a Comment

வருக வருக