கிருஷ் தனது லேப்டாப்பில் புகுந்துகொண்ட நியூ போல்டர் வைரசுடன் மல்லுக் கட்டிகொண்டிருந்த பொழுது வாசலில் அழைப்பு மணி.
அம்மா
அது யாருன்னு பார்டா என்று சொல்ல, பக்கத்துல தியேட்டரில் புது ஆங்கிலப்
படம் வந்திருக்கு அப்போ யாரா இருக்கும்? நீயே சொல்லும்மா என்றான்.
அப்படியா அப்போ அது செந்தில்தான் என்றாள் அம்மா.
அது செந்தில்தான். அம்மா நல்லா இருக்கீங்களா? எப்டீடா இருக்க கிருஷ் என்றான்?
வாடா படம் எப்படி? என்றான் கிருஷ்.
ஸ்பைடர்மேன் வரிசையில் இது சமீபத்தில் வந்த இரண்டாவது படம். எப்.எக்ஸ் ரொம்ப நல்லா கீது.
இன்னாது இரண்டாவது படமா? சமீபத்தில் வந்த ஐந்தாவது படம்ப்பா. என்றான் கிருஷ்.
சரி சரி மாப்பு அது வெறும் ஸ்பைடர்மேன் இது அமேசிங் ஸ்பைடர் மேன்.
செந்திலு ரெண்டுபேரும் ஸ்பைடர்மேன்தானே.
ஆமாம் கிருஷ் ஆனால் முதலில் வந்தவை கொஞ்சம் மெச்சூர்டா இருக்கும். அமேசிங் முழுக்க முழுக்க கார்டூன் பாதிப்பில் இருக்கும்.
ஒ. அப்ப ஏழு கழுதை வயசில ஒரு கார்டூன் படத்தைப் பார்த்துட்டு வரேன்னு சொல்ற செந்தில்.
ஒ. எனக்கு பல்பு குடுத்துட்டாராமா. இந்தப் படத்தில் ஸ்பைடர் மேன் அடிக்கிற டைவ் எல்லாம் வேறு மாதிரி ரொம்ப கிளாசா வந்திருக்கு.
டேய் ஏற்கனவே ஒரு வைரஸ் என்னைப் படுத்தீட்டு இருக்கு நீ வேற வெறியேத்தாதே.
நான் தரேன் சொலுஷன். ரிலாக்ஸ் மச்சி.
அப்ப சொல்லு என்ன கதை?
குழந்தைகளுக்கு பிடித்த ஸ்பைடர்மேன் இந்தப் படத்தில் ஒரு காதல் மன்னனாகவும் வருகிறார் மாப்ஸ்.
ஹாலிவுட் படத்தில் காதல் என்றால் ஒரு ஐந்தாறு முத்தமாவது இருக்குமே. இதை எப்படி குழந்தைகளோடு பார்க்கிறது செந்தில்.
அதை நீ தியேட்டரை ரொப்பி இருக்கும் குடும்பத்தினரிடம்தான் கேட்க வேண்டும். ஆனா ஒன்னு நம்ம தமிழ் படத்துக்கு எவ்வளோ ஸேப் கிருஷ்.
சரி மாப்பு ஏதும் புதுமையான விசயம் இருக்கா படத்தில்.
காதல்
சீகுவன்ஸ் கொஞ்சம் ட்வைலைட் பாதிப்பில் இருக்கு. ஒரு அழகான ஹீரோயின்
சூப்பர் ஹீரோவுடன் பறந்து பறந்து காதல் செய்துவிட்டு போய்ச்சேருகிறாள்.
என்னது ஹீரோயின் காலியா?
ஆமா கிருஷ் படத்தின் எதிர்பாரா முடிவு அது.
படத்தின் எலக்ட்ரோ காரக்டர் கலக்கி இருக்கிறது. ஜேமி பாக்ஸ் இந்த பாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார்.
சரி செந்தில் வேறு என்ன விசேசம் படத்தில்.
எல்லா
ஸ்படைர் மேன் வில்லன்களும் அதீத தீவிரவாதிகளாகவும் அவர்களை ஸ்பைடர்
புரட்டி எடுக்கும் பொழுது ஒரு நியாயம் இருப்பதாகவும் காட்சி அமைப்பு
இருக்கும். ஆனால் இதில் இரண்டு வில்லன்களுமே பரிதாபத்திற்கு உரியவர்கள்.
வேறு வழி இல்லமல் வில்லன் ஆனவர்கள்.
இதுதான் படத்தில் கொஞ்சம் புதுசு.
அப்போ அடுத்த பார்ட்டில் அவர்களை திருத்தப் போகிறார்கள் அப்படித்தானே.
ஆமா அப்படித்தான் தோன்றுகிறது கிருஷ்.
வெளியான நான்கு நாட்களில் 42 கோடி வசூல் செய்த படம்ன்னு கேள்விப்பட்டேன். அவ்வளோ நல்லாகீதா படம் செந்தில்?
கிராபிக்ஸ் ரோம்பவெ அருமை.அவ்வளவுதான் எனக்கு தெரிந்து. மற்றபடி நீ பார்த்துவிட்டு சொல்லு. வரட்டா.
உதைபடுவ முதல்ல எனக்கு சொலுஷன் சொல்லு.
ஒ.
நியுபோல்டர் வைரஸ், அது ஒண்ணுமில்ல மச்சி கொஞ்சம் டி.வி.டி.
வாங்கிக்கொண்டு தேவையான பைல்ஸ் எல்லாத்தையும் பாக்அப் செஞ்சுக்கோ, அப்புறம்
திரும்ப ஒ.எஸ் அடித்துவிடு.
இது எங்களுக்கு தெரியாதா என்று கிருஷ் மடியில் இருந்து குஷனை எடுத்து செந்திலை குறிவைத்து எறிந்தான்.
அம்மா நான் வரேன்மா சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே கதவை வெளியில் மூடிகொண்டான் செந்தில்.
நல்லாத்தான் கீது.. பார்த்திட வேண்டியது தான்...
ReplyDeleteஹா ஹா .. பாருங்க அண்ணா
Deleteவணக்கம் சகோ
ReplyDeleteஸ்பைடர்மேன் அமெஸிங் ஸ்பைடர்மேன் வித்தியாசம் புரிய வைத்தமைக்கு முதலில் நன்றி. மிக நுணுக்கமாக ஒரு படத்தினைப் பார்க்க முடியும் என்பதற்கு இப்பதிவு ஒரு எடுத்துக்காட்டு. அழகான விமர்சனம் அவசியம் படத்தைப் பார்க்க வேண்டுமெனும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோ.
நன்றி சகோ..
Deleteஆஹா படம் பார்க்கும் ஆசைய தூண்டிவிடுறீங்களே.சுவையான விமர்சனம்
ReplyDeleteஇன்னும் சில நாட்களில் ஹச்.பி. ஒவில் வரும் அல்லது ரோட்டில் சிடீக்களாக இறைந்து கிடக்கும் ...
Deleteமுடிந்தால் பாருங்கள் சகோதரி..
அவசியம் பார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி ..
Deleteதம 3
ReplyDeleteவாக்காள பெருமக்களே, உங்கள் ஆதரவுக்கு நன்றி..
Deleteஅன்பரே! பட விமர்சனமே படம் பார்த்த ஒரு உணர்வைத் தருகிறது..படம் பார்த்தால் நாம் குழந்தையாக மாறிவிடுவோம் போலிருக்கிறதே...! நன்றி! நன்றி!
ReplyDeleteஆகா அண்ணா நீங்கள் படிக்கும் வகையில் எழுதியிருகிறேனா?
Deleteநன்றி..