கோச்சடையான்

கோச்சடையான்

தனது லேப் டாப்பில் ஒ.எஸ் அடித்து லான் டிரைவரை நிறுவிக்கொண்டிருந்த கிருஷ் நிமிர்ந்து பார்த்தான் அறைவாசலில் செந்தில் ஒரு நமட்டு சிரிப்புடன் ஆக நியூ போல்டர் வைரசை ஒருவழியாக சமாளித்துவிட்டாய் போல.

ஆமா செந்தில் உன் வழிதான் வொர்க்அவுட் ஆனது சரி இப்போ என்ன படம் பார்த்துட்டு வர.

தலைவரின் கோச்சடையான்.


டேய் செந்தில் விளையாடாதே படம் வெளியில் வந்திருச்சா?

உன்னோட சந்தேகம் சரிதான். இந்தியத் திரைவரலாற்றில் மிக நீண்ட காலம் தயாரிக்கப்பட்ட படங்களில் அனேகமாக கோச்சடையான் தனி சாதனையை வைத்திருக்கிறது கிருஷ்.

ஆமா செந்தில் வெளியில் வருமா வராதா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதனைத் தொடர்ந்த ஏமாற்றங்கள் எல்லாம் முடிந்து ஒருவழியா தியேட்டருக்கு வந்துருச்சா செந்தில்?

லேய் கிருஷ் என்னாது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களாங்கற மாதிரி கேட்டுகிட்டு இருக்க? படம் வெளியில் வந்து நூறுகோடி வசூலை வாரிகொட்டிவிட்டது.

ஆக ரஜனி பொண்ணு தானும் சூப்பர் ஸ்டாருதான்னு நிருபிச்சிட்டா போல? என்ற படியே தட்டில் அடுக்கப்பட்ட ட்ரு பிஸ்கட்டுகளை கொண்டுவந்தார் அம்மா.

ஹை ட்ரு எனக்குப் பிடிக்கும் என்றபடி செந்தில் ஒரு பிஸ்கட்டை விரல்களில் பற்றினான்.

டேய் தின்னிப் பயலே அம்மா ஒரு புது சூப்பர் ஸ்டார் பற்றி சொல்லிக்கிட்டு இருக்காங்க நீ.

அம்மா சொன்னா தப்பா இருக்குமா? உண்மைதான். புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தற்காக என்.டி.டி.வி சிறந்த இந்தியர் அவார்டே தந்தாங்களே.
மனித அசைவுகளை அப்படியே கணிப்பொறிக்கு அனுப்பி அனிமேசன் செய்வதில் இந்தியாவில் இது ஒரு முன்னோடிப் படம் என்பதால் அந்த அவார்ட் சவுந்தர்யாவிர்க்கு கிடைத்தது.

புரியற மாறி சொல்லு செந்தி இதற்க்கு முன் ஹாலிவுட் படங்கள் ஏதும் இப்படி வந்திருக்கா?

ஆமா கிருஷ், அவதாரே இப்படி வந்ததுதான், அப்புறம் ஐ ரோபாட், அயர்ன் மேன், அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் போலார் எக்ஸ்பிரஸ் என எக்கசக்க படங்கள் வந்திருக்கு.

சரி கோச்சடையான் தொழில் நுட்பம் எப்படி இருக்கு செந்தி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறைய தியேட்டர்களில் 3டி. இதற்காவே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். நம்ம படம் நம்ம சாதனை என்கிறமாதிரி செண்டிமெண்ட் பில்ட் ஆகியிருக்கு. 

அதை விடு படம் தொழில் நுட்ப ரீதியில் எப்படி இருக்கு நேர்த்தி இருக்கா செந்தி.

தொழில் நுட்ப ரீதியில் வெற்றிகரமான முதல் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல காட்சிகள் அசத்தல். சறுக்கல்களும் உண்டு.
அசத்துனது என்னன்னா சொல்லுப்பா உரிமையுடன் கேட்டார் அம்மா. 

கோச்சடையான் நடனம் சும்மா கிளாஸ். டைட்லிங் எழுத்துக்கள் திரைஅரங்கிற்குள் அலைகின்றன. அந்த அனிமேஷன் அற்புத உலகு எல்லாம் வாவ்.

நாசர் ராணா வீட்டிற்கு வருகின்ற காட்சியில் பின்னணியில் தெரிகிற கோட்டைச்சுவர் நாமளும் அந்தக் கோட்டைக்குள் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்கிற மாதிரி இருக்கு. அப்புறம் நாகேஷ் படத்தில் தூள் கிளப்பி இருக்கிறார்!

அனிமேஷனில் இறந்த நடிகரைக் கூட நடிக்க வைக்கலாமா? இதற்காவே ஒருமுறை நான் படத்தை பார்க்க போகிறேன் என்றார் அம்மா. 

அப்புறம் அம்மா நீங்க கட்டாயம் ஒரு வெள்ளை மயிலுடன் தீபிகா ஆடும் ஒயிலை ரொம்ப ரசிப்பீங்க என்றான் செந்தில்.

நல்லாப் பாருமா பாப்பா படத்த, செந்தி எனக்கு சொதப்ஸ் மட்டும் சொல்லு என்றான் கிருஷ்.

தம்பி பாப்பா படம்தான் நூறுகோடி வசூல் செஞ்சிருக்கு என்ற செந்தில் சரி உனக்காக சொதப்ஸ். முதலில் காரக்டர்கள் அனைவரும் தேவையில்லாமல் கால்களை அகட்டி நடக்கிறார்கள். அப்புறம் கதை ரஜனி படத்துக்கு அதெல்லாம் எதுக்கு என்று முடிவு எடுத்துவிட்டார்கள். சில காட்சிகளில் ப்ரோபோர்ஷன் சொதப்ஸ். திடீர் திடீர் என மனிதர்கள் எறும்பாகி விடுகிறார்கள்.  காரக்டர்களின் கண்கள் எல்லாமே பொருந்தாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன. மனிதர்கள் தரையில் கால் பாவாமல் நடப்பது என நிறைய சொதப்ஸ். இருந்தாலும் முதல் முயற்சி என்பதால் ஒக்கே.

அப்புறம் கிருஷ் இன்னும் சில விசயம் சொல்லனும்னா ஷோபனா நடனம் நல்லா காப்ச்சர் ஆகிருக்கு ஆனால் தீபிகா நடனம் கொடுமைடா சாமி.

செந்தில் உனக்கு தெரியும்தானே  ஷோபனா ஒரு கிளாசிக் டான்சர், அவர்களின் அனுபவம் பர்பெக்சன் திரையில் வருகிறதில் மேட்டர் ஒன்னும் இல்லை.

அவங்க ஒருவேளை மோசன் காப்ச்சரிங்கில் ஹோம் வொர்க் பண்ணியிருக்கலாம் அல்லது முன்னனுபவம் இருக்கலாம் கிருஷ். அப்புறம் ஒரு விஷயம் இரண்டாவது பார்ட் வர வாய்ப்பு இருக்கிறது.

கொஞ்ச நாள் மாயாவில் வொர்க் பண்ண அனுபவம் இருக்கு, நான் போய் படத்த பார்த்துட்டு வந்து மீதியைச் சொல்றேன் செந்தில் என்றான் கிருஷ்.

நீ மட்டும் போகாம வீட்டில் இருக்கும் குட்டீஸ் எல்லாத்தையும் கூட்டிக்கொண்டு போ. நல்ல விஷுவல் ட்ரீட். கட்டாயம் த்ரீடியில் பார் என்றபடி இரண்டு இரண்டாக படிகளில் குதித்து குதித்து இறங்கி சென்றான் செந்தில்.

Comments

  1. நாளை மறுநாள் ரசிக்க செல்ல வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துவிட்டு சொல்லுங்க.

      Delete
  2. வணக்கம் சகோ
    படம் பார்க்க வேண்டும் ஆவலைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள். 3டி கேப்சர் மோசனில் இந்தியாவின் முதல் படம் என்பதும் அதில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பதும் நமக்கு கூடுதல் மகிழ்ச்சி. படத்தின் சறுக்கல்களையும் குறிப்பிட்ட நடுநிலையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் புது மாப்பு..
      சாரி சகோ
      ஜோடியா பாருங்க..
      நாட்கள் நகரோதோ உங்கள் காலர் டயுன்? அப்படிதானே..

      Delete
  3. நாகேஷைப் பார்ப்பதற்காவது படம் பார்க்க வேண்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டு சொல்லுங்கள் நண்பரே..

      Delete
  4. இந்தப் படம் விரைவில் சுட்டி டி வி யில் வரப் போகிறதாமே? காத்திருக்கிறேன் அதற்காக.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா ஹா வார்த்தை விருப்பம், செம குசும்பு..
      இத்துணை நாள் உழைப்பிற்கு பிறகும் டெக்னிகலாக இன்னும் நிறைய மெனக்கெடல்கள் வேண்டும் என்று தொடருகிறது காரிகன்

      Delete
  5. வணக்கம்

    தங்களின் பார்வையில் விமர்சம் நன்றாக உள்ளதுபடத்தை பார்த்து ரசித்துவிட்டோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரரே நலமா
      நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  6. சுவையான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமி சுரேஷ்... உங்கள் முகநூல் ஐ.டி அதுதானே..

      Delete
  7. இந்த படத்தை குழந்தைகளும் பார்க்கலாம்னு சொல்றீங்க.
    பார்ப்போம். எப்ப பார்க்க முடியும்னு.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் சொக்கன்

      Delete
  8. நான் நேற்று தான் பார்த்தேன். கார்டூன் தானே என்று கொஞ்சம் ஆர்வம் இல்லாமல் தான் போனேன். ஆனால் கதையும் தொழில் நுட்பமும் என்னை கவர்ந்தது, நான் நன்றாக ரசித்தேன். சொதப்பல்கள் இருக்கலாம். அதை தேடி உற்றுப் பார்த்தாலே யொழிய தெரியாது இதுவே பெரிய விடயம் தானே முதல் திரைப்படம் அதுவும் நம் பாணியில் கதையும் நடனமும் எல்லாமே அசத்தலாகவே பட்டது பெருமிதமாகவும் இருந்தது. பார்ட் 2வும் வரும் என்றே முடிவில் போட்டிருந்தார்கள்.
    தங்களின் வித்தியாசமான முறையில் உரையாடலுடன் அமைந்த விமர்சனமும் பிடித்தது ரசித்தேன். நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. புதிய தொழில் நுட்பத்தில் புதிய பாணிக் கதைகள் தான் நன்றாக இருக்கும் ..
      தேவையில்லா பாடல்கள் (எனது மகள் எங்கே போகுதே ... என்று பாடினாலும்) திருமணக் காட்சிகள் என்று கதை ஒரு பின்னடைவு.. நீங்கள் ரெசிடென்ட் ஈவில் அனிமேஷன் பார்ட், அல்லது மாட்ரிக்ஸ் அனிமேஷன் பார்ட் பார்த்தல் இந்த தொழில் நுட்ப சாத்தியங்கள் புரியும் ..

      ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது
      உங்களால் சூப்பர் கம்ப்யூடரை
      கண்டுபிடிக்க முடியும்
      ஆனால் எங்களால் தான்
      கம்ப்யுட்டர் முனியாண்டியையும்
      வெள்ளயைம்மாவையும்
      கண்டுபிடிக்க முடியும்

      என்கிற கவிதைதான் நினைவில் வந்தது

      Delete
  9. அழகான உரையாடல் விமர்சனம்! பலரும் எழுதி விட்டார்கள் கோச்சடையான் பற்றி! தொழில் நுட்பத்தை மெச்சி! தாங்களும் அதைத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்! அதற்காகவே பார்க்க வேண்டும் எனத் தோன்றுகின்றது!

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள்.. தோழர்
      த்ரீ டி இருந்தால் பார்க்கலாம் ...
      இல்லை என்றால் தவிர்க்கவும்..

      Delete

Post a Comment

வருக வருக