முருக பாரதி என்றோர் ரோல் மாடல்.

நசீர் தலைமை உரை

பீகாக் வரிசைப் பயிற்சிகளில் லீடர் ஷிப் 360 டிகிரி என்கிற பயிற்சி மண்டலப் பயிற்சியாளர்ஜே.சி. முருகபாரதிவசம்.

முன்னாள் தலைவர் ஜெசி. நசீர்  அவர்கள்சிறப்பு விருந்தினாராக  கலந்துகொண்ட பயிற்சி.


பாரதி பயிற்சி அளிப்பதில்  பத்தாயிரம் மணி நேரத்தை கடந்தவர். பயிற்சி எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. சமீபத்தில் குரலுக்கான ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் கொஞ்சம் மென்மையாக பேசுவார் என்று பார்த்தேன்.

மனிதர் கொடுத்த சவுண்டில் சுவரின் காரை பெயர்ந்து விட்டது. அதுதான் பாரதி.

தன்னைத் தலைவன் என்று நினைக்கும் அனைவருமே தலைவர்கள்தான். தலைவர்கள் பிறப்பதில்லை. அவர்கள் தங்களை தாங்களே உருவாக்கி கொள்பவர்கள். 

தலைவர்கள் தங்கள் பலங்களை முன்னிலைப் படுத்துபவர்கள். தங்கள் குறைகளைக் குறித்தே கவலை கொண்டிருந்தால் அவர்களால் தலைவர்களாக ஜொலிக்க முடியாது. 

ஒரு மக்கள் குழுத் ஒருவனைத் தலைவனாக ஏற்றுக் கொள்கிறது என்றால் அவன் தனது பிம்பத்தை அவர்களிடம் அப்படி பதியவைத்திருக்கிறான் என்பதே உண்ணமை. தங்களின் பலங்களை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டி தங்களின் பலவீனங்களை வெளிக்காட்டாததே அவர்களின் வெற்றிக்கு காரணம்.

லீட் அப், லீட் அக்ராஸ் மற்றும் லீட் டவுன் என்கிற விஷயங்களைத் தெளிவாக உதாரணங்களுடன் விளக்கினார்.

தலைமைப் பண்பின் ஐந்து நிலைகள் 

ஒன்று - பதவி இதில் கிடைக்கும் உரிமைகளின் காரணமாக மற்றவர்கள் தலைவனைத் தொடரும் கீழ்படியும் நிலை.

இரண்டு -சுமூக உறவு - கீழே இருப்பவர்களோடு சமூக உறவைப் பேணுவதால் அவர்கள் விரும்பி தலைவனுக்கா உழைக்கும் நிலை. மிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலை இது. (அசந்தால் தலயில் மிளகாய் அரைத்துவிடும் அபாயம் இருப்பதால்).

மூன்று - உற்பத்தி - நிறுவனத்திற்காக தலைவன் கொடுக்கும் உழைப்பினால் விளையும் நல்ல பலன்கள். இது குழு உணர்வைத் தூண்டும். 

நான்கு - அடுத்தவரை வளர்த்தல் - இன்றய அரசியல் சூழ்நிலையில் முற்றிலும் இல்லாத பண்பு இது. ஆனால் நல்ல தலைவனுக்கு இது அவசியம். 

ஐந்து - நலப்பண்புகளை வெளிகாட்டுதல். நீங்கள் யார் என்று உங்கள் நலப்பன்புகளை மட்டும் வெளிப்படுத்தல்.


லீடர்ஷிப் குறித்த நல்ல தகவல்களை பகிர்ந்துகொண்ட அவர் சொன்ன ரோல் மாடல் அனுபவம் நெகிழ்வு.

ராகவேந்திரன் என்கிற எட்டாம் வகுப்பு மாணவன் இவரது ரோல் மாடல்! ஏன்? ராகவ் ஒருமுறை ஜாலியாக சைக்கில் ஒட்டிக்கொண்டிருந்த போழுது நடந்த  சாலை விபத்தில் ஒரு லாரி அவனது ஒரு காலில் ஏறி விட்டது. 

பிதுங்கிய சதையை எடுத்து திணித்துக் கொண்டு நொண்டி நொண்டிவீட்டிற்கு போய் அப்பா வாங்க ஆஸ்பத்திரிக்கு. என்மேல் லாரி ஏறிவிட்டது என்று சொல்லி மருத்துவமனை சென்று மீண்டிருகிறான். 

உடல் முழுதும் கம்பிகளோடு கிடந்த அவனிடம் ரொம்ப வலிக்குதா என்றபொழுது இல்லை அடுத்த மாதம் எனக்கு இன்னொரு ஆப்பரேசன் அதில் இந்தக் கம்பியெல்லாம் எடுத்துடுவாங்க நா திரும்ப சைக்கில் ஓட்டுவேன் என்று சொல்லியிருக்கிறான். 

ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் இத்துணைத் தன்னம்பிக்கையோடு இருக்கும் செய்தியைக் கேட்ட பாரதி தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கிறார். 

ஏன் என்றால் முழுக்க முழுக்க குரலை சார்ந்த பயிற்சி துறையைத் சேர்ந்த பாரதி மருத்துவர்களால் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.  இவரை  ராகவின் அந்த பதில்  மீட்டு மீண்டும் மேடைகளுக்கு வரவழைத்து விட்டது ! 

என்ன நீங்கள் ரோல் மாடல்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?

அன்பன்
மது

Comments

 1. மிகவும் அருமையான ஒரு பதிவு நண்பரே! அதை எழுதிய விதமும் அருமை! தலைமைப் பண்பின் ஐந்து நிலைகள் குறித்து Personnel management ல் படித்திருக்கின்றோம் என்றாலும் அதைத் தமிழில் வாசிக்கும் போது இன்னும் பல தெரிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்!

  பாரதியின் ரோல் மாடல் அந்த எட்டாம் வகுப்பு மாணவன் ராகவேந்திரன் அவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான்! திரு முருகபாரதியின் பயிற்சி வகுப்புகள்மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்! .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா

   Delete
 2. மிகச்சிறப்பான தன்னம்பிக்கை பதிவு! ராகவ், மற்றும் பாரதி இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.சுரேஷ்

   Delete
 3. வணக்கம்
  நல்ல கருத்துக்கள் நிறந்த பதிவுநன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.ரூபன்

   Delete
 4. மிக மிக சிறப்பான ஒரு பகிர்வு. பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு சொக்கன்

   Delete
 5. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete

Post a Comment

வருக வருக