விஜய் டி.வி என்றோர் வெற்றி இயந்திரம்

ஒருகாலத்தில் தூர்தர்சன் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த இந்தியாவில் திடீர் வெடிப்பாக ஸ்டார், சி.என்.என். என சர்வதேச பே சானல்கள் வர நம்ம லாடுவீட்டு கோலாபுட்டுகள் ஒருவழியாக சொந்தமாய்ச் சானல்களை ஆரம்பித்தனர்.

இந்த தலைமுறைக்கு தூர் தர்சன் என்றால் என்ன என்றாவது தெரியுமா என்பது ஒரு நகைப்பை வரவழைக்கும் கேள்வி.


இந்த வகையில் தமிழில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நடத்தப்படும் சானல்கள் சிலவே.

அவ்வகையில் முதலில் கோல்டன் ஈகிள் என்றும் பின்னர் விஜயாக அவதாரம் எடுத்து தற்போது ஸ்டார் விஜய் என்று ஒளிபரப்பாகி வரும் சானல் இளம் தலைமுறையால் கொண்டாடப்பட்டுவருகிறது.  

இந்த சரித்திரம் எல்லாம் இப்போ எதுக்கு என்கிறீர்களா? 

ஸ்டார் விஜயின் சில செயல்பாடுகள் குறித்து ஒரு சிறிய அலசலுக்கே இந்த பதிவு.

முதலில் நண்டு ஜெகன்.

இவரது கலருக்கும் குரலுக்கும் இவருக்கு மற்ற சானல்கள் வாய்ப்பு தந்திருக்குமா என்பதே சந்தேகம். ஆனால் விஜயில் இவரது திரை விமர்சனம் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே இவருக்கு ஏற்படுத்தி தந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இவர் இப்போது வெள்ளித் திரையில் மின்னிக்கொண்டிருக்கிறார். 

இவரது தனம்பிக்கையும், படைப்பாற்றளும் ஓர் காரணம் என்றாலும் விஜய் இவரை உருவாக்கியது என்பதே எனது கருத்து. 

அவ்ளோபெரிய அப்பா டக்கர்?

இந்த விதத்தில் விஜயினால் வாழ்வை அமைத்துக்கொண்டவர்களில் சந்தானம் குறிப்பிடத்தக்கவர். இன்று ஒரு வல்லவனாக புல்லையும் ஆயுதமாகி ஒரு கதாநாயகனாக உயர்ந்திருப்பது விஜய் தந்த ஆதரவும் ஊக்கமுமின்றி சாத்தியமாகியிருக்குமா?

இளம் பெண்களின் புதிய இதயத்துடிப்பு 

நான் எனது மாணவர் ஒருவரோடு சிவகார்த்திகேயன்  குறித்து  பேசிகொண்டிருந்த பொழுது அவனை எனக்கு சுத்தமாக பிடிக்காது என்றார். 

நான் ரகசியமாக சிரித்துக்கொண்டேன். அவன் வயதில் அப்படித்தானே பேசவேண்டும். பின்னே ஊரில் உள்ள இளம் பெண்களில் சரிபாதி சிவா சிவா என்று பினாத்தினால் பையன்களுக்கு எப்படிப் பிடிக்கும்?  சும்மா காதிலே புகை வராது?  

எந்த சினிமாப் பின்புலமும் இல்லாத ஒருவர் இன்று படத்துக்கு கோடிகளைக் கேட்கும் அளவிற்கு வளந்திருக்கிறார் என்றால் விஜய் என்கிற மந்திரம் செய்த மாயமல்லாமால் வேறென்ன? 

 கோபிநாத் 

நீயா நானா என்று அகிலமெங்கும் புகழ் பரப்பும் அறந்தை கோபியை உலகறியச் செய்தது விஜய் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இருக்க முடியுமா?
மிக நீண்ட நாட்களாக பத்திரிக்கை துறையில் இருந்தவர் கோபி. ஆனால் அன்று அவரை சிலருக்கே தெரியும். இன்று?

தற்போது வந்திருக்கும் மா.கே.பா குறித்து கவனமாக இருங்கள் இன்னொரு திரை நட்சத்திரம் தயாராகிக் கொண்டிருப்பதாகவேபடுகிறது. இவர் ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக ரேடியோ மிர்சியில் ஆர்.ஜே வாக கொடிகட்டிப் பறந்தது பெருநகர வாசிகளுக்கு மட்டுமே தெரியும். இன்று அவர் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 


இப்படி ஒரு சானல் இதுவரை நாம் சந்திக்காதது.  பல சானல்களில் இருந்து பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் விலகினால் அவர்கள் அத்தோடு பொதுவெளிகளில் இருந்து தொலைந்து போவதையே பார்த்துகொண்டிருந்த எனக்கு விஜய் ஒரு மாபெரும் புரட்சியை நடத்துவதாகவேபடுகிறது.

எனக்கு ஒரு ஏக்கம் உண்டு இன்னும் ஒரு பத்தாண்டுகள் முன்னே வந்திருந்தால் புதுகையில் எனது நண்பர்களில் சிலரும் நட்சத்திரங்களாகியிருப்பார்கள்.  குறிப்பாக ஜெகதீஸ்வரன் உலகத் தரம் வாய்ந்த ஒரு நடனக்காரன். இன்று அவன் நல்ல நிலையில் இருந்தாலும் எனக்குள் எப்போதும் அவன் குறித்த ஒரு சோகம் உண்டு.

புதிய திறமைகளை அடயாளம் கண்டு புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஒரு ஆரோக்கியமான சமூக நல இயக்கம் விஜய். நான் சொல்வது சரிதானே ?

Comments

 1. நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை தான். இவர்கள் மட்டும் இல்லை, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இன்று நிறைய நாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்காக செல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..
   நீங்கள் ஒரு சுதந்திர தின விழா,
   குடியரசு தின விழா என்றாலும் விஜய் தரும் நிகழ்சிகள் அனைத்தும் அருபுதமாக இருப்பதை கவனிதிருக்கிரீர்களா?

   Delete
 2. வணக்கம் சகோ
  விஜய் தொலைக்காட்சி உருவாக்கிய நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் திறமைசாலிகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவனை வளர்த்து விடுவதில் விஜய் டிவிக்கு இணை அதுவே. ம.க.பா வல்லவராயன் வானவராயன் படத்தில் நடத்திருக்கிறார் சகோ விரைவில் வெளிவரும். நிகழ்ச்சிகள் ஒலிபரப்பும் விதத்தில் விஜய் டிவி நிறைய மாற வேண்டும் அது ஒரு பக்கம் இருக்கட்டும் இருப்பினும் மற்ற தொலைகாட்சிகளிலிருந்து வேறுபட்டிருப்பது அதன் சிறப்பு தான். அழகான பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. புதுமாப்பிள்ளைக்கு நன்றிகள்...
   இவ்வளவு பணியிலும் எப்படி இப்படி ...
   உங்கள் வென்றயின் ரகசியம் புரிகிறது..

   Delete
 3. உண்மைதான் விஜய் டீ.வி பல நட்சத்திரங்களை உருவாக்கி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.சுரேஷ்..

   Delete
 4. podhigai; information; education; entertaiment; ' nam virundiner; 'yoga nalmuden vazha';; pon vilayam boomi; nam- andaiveli- suttrerather;

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   பொதிகை நன்றாக இருக்கிறது என்று சொல்லவருகிறீர்களா?
   உண்மை..
   ஆனால் இன்னும் நன்றாக இருக்கலாமே?

   Delete
 5. சரியாச்சொன்னீங்கசார் விஜய் தொ. கா யில் கால் பதித்தவர் கைவிடப்படார். என்பதுபோல அவர்களுக்கு வாய்ப்பளித்து
  தனக்கும் வருமானம். மேலும் நிகழ்சிகளையும் நாம் எதிர் பார்க்கும்படியும் சுவாரஸ்யமாகவும் கொண்டுசெல்லும்,
  அதுபோல அங்கு வளர்ந்தவர்களை வாழ்த்தத் தெரிந்தவர்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக