சிங்கக் குட்டி, சின்ன பாப்பா, புதையல் வேட்டை, ஓட்டைப் பானை ..

சிங்கக் குட்டியின் கதை

முன்னொரு காலத்தில் ஒரு அடர்ந்த வனத்தில் ஒரு சிங்கக் கூட்டம் வாழ்த்து வந்தது. அந்தக் கூட்டத்தில் அழகான சிறிய சிங்க குட்டிகளும் இருந்தன. அவற்றில் ஒரு குட்டி ரொம்பவே சேட்டை செய்யும். காண்கிற எல்லாவற்றையும் சோதிக்கும் ஆர்வம் அதன் இயல்பு. 


ஒரு நாள் அது ஒரு பட்டாம்பூச்சியை பார்த்தது. அதை பிடிக்க ஒரே தாவாகதாவியது. பட்டாம்பூச்சி பறந்துவிட்டது. விடுமா குட்டிச் சிங்கம். துரத்த ஆரம்பித்தது. இந்த முயற்சியில் அது காட்டில் வெகுதூரம் வந்துவிட்டது. கடைசிவரை பட்டாம் பூச்சியை பிடிக்கவே முடியவில்லை.

மிகவும் சோர்வாக இருந்த குட்டிசிங்கம் தனது கூட்டத்திற்கு திரும்ப முயன்றது. தான் வெகுதூரம் வந்துவிட்டதையும் வழியை மறந்துவிட்டதையும் அப்போதுதான் உணர்ந்தது. சோர்வும் ஏமாற்றமும் அதிகரிக்க அங்கேயே தூங்கிவிட்டது.



விழித்துப் பார்த்தபொழுது புதிய எதிர்பாரா நண்பர்களை அது சந்தித்தது. ஆம் அது ஆட்டு மந்தையின் நடுவே இருந்தது. மந்தையில் அழகிய ஆட்டுக்குட்டிகளும் இருந்தன. அவை சிங்கக்குட்டியுடன் விளையாடத் துவங்கின! 

நாட்கள் உருண்டன. சிங்கம் வளர்ந்தது. ஆனால் தான் ஒரு சிங்கம் என்பதை உணரமல்! ஒரு நரி ஊளையிட்டால் ஆடுகள் பதுங்க அவற்றைப் போலவே சிங்கமும் பதுங்கியது. ஆடுகள் போலவே கனைத்தது. கர்ஜனை என்றால் என்னவென்றே தெரியவில்லை! ஆடுகளை வேட்டையாடும் விலங்குகளைக் கண்டு வெருண்டு ஓடியது. 

ஒரு நாள் மந்தையின் மேய்ச்சல் பகுதிக்கு ஒரு பெரும் சிங்கம் வந்தது. இளம் சிங்கத்தைப் பார்த்த அது மரியாதையை நிமித்தம் கர்ஜனை செய்தது. இளம் சிங்கமோ ஒட்டமெடுத்தது! மெல்ல யோசித்த பெரும் சிங்கம் உண்மையை உணர்ந்தது. 

பயலை இப்படியே விட்டால் சரிவரமாட்டான் என்று துரத்திப் பிடித்தது. பயத்தில் நடுங்கிய இளம் சிங்கத்தை ஒரு குளத்திற்கு அழைத்து சென்று காட்டியது. தன்னுடைய சுயத்தை உணராமல் தன்னைப்பற்றிய ஒரு தவறான புரிதலில் இருக்கும் மனது உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயங்கும். சிங்கக் குட்டிக்கும் அப்படிதான் இருந்தது.

தனது உருவத்தை கண்ட இளம் சிங்கம் உண்மையை உணர்ந்தது.பெரும் சிங்கம்  கர்ஜிக்க பயிற்சி அளித்தது.  கனைப்பில் ஆரம்பித்து கர்ஜனையில் முடித்தது இளம் சிங்கம். உங்கள் திறமையை நீங்கள் உணர்ந்து விட்டால் உங்களுக்கு அந்த வானம் கூட எல்லையாக முடியாது.

நம்மில் சிலரும் இப்படித்தான் நம் இயல்பை உணராமல் ஆடுக்குட்டிகளுடன் வாழும் சிங்க குட்டிகளாக வாழ்த்து முடித்துவிடுகிறோம்.

  

 
 



 

 


 

 

 நம்பிக்கையின் குட்டிப் பாப்பா 

அந்த தேசத்தின் அரசர் மிக கவலையாக இருந்தார். சில ஆண்டுகளாக அவர் ராஜ்யத்தில் மழையே இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி பிரார்த்தித்தால் மழைவரும் என்று ஆலோசனை சொல்லப்பட்டது.  

இதை மக்களுக்கு அறிவித்து விட்டு தனது அரண்மனையின் வெளியே உள்ள மைதானத்தில்  அவர்களின் வருகைக்காக காத்திருந்தார் அரசர். 

மக்கள் திரள்வரத் தொடங்கியது.  தள்ளாடி வரும் முதியவர் முதல் கம்பீரமாக நடக்கும் இளைஞர் வரை ஒவ்வொருவராக வரத் துவங்கினர். அரசரின் பார்வை ஒரு குட்டிப் பாப்பாவின் மீது நிலைகுத்தி நின்றது. 

அந்த பாப்பாவின் கையில் ஒரு குடை. ஆச்யர்ப் பட்ட அரசர் அந்தப் பாப்பாவை அழைத்து ஏன் குடை என்றார். 

அரசே இத்துணைப் பேர் ஒன்றாக இறைவனிடம் கேட்டால் கடும் மழை வருமே. நான் நனையாம வீட்டுக்கு போகணும்ல அதான் என்று சொன்னால் குட்டிமா. 

அரசர் குட்டிப் பாப்பாவின் நம்பிக்கையை கண்டு அசந்து போய்விட்டார். பிரார்த்தனை துவங்கியது மழை அடித்து ஊற்றியது. தனது குடையை விரிதவாறு  தேங்கிய நீர்க்குட்டைகளை  தாவித் தாவி போகும் குட்டிப்பாவை ரசித்துப் பார்த்துகொண்டிருந்தார் அரசர்.

செய்யறத நம்பிக்கையோடு செய்யுங்கள். நலமே விளையும்.
































Comments

  1. வணக்கம்
    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தைசொல்லுகிறது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர் ..

      Delete
  2. நடத்துபவர்க்கே தெரியும் படங்கள் சொல்லும் பாடங்களும் பாடம் விளக்கும் படங்களும் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்...?

      Delete
  3. சிறப்பான கதை! சிறப்பான படக்கதைகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இது ஒன்பதாம் வகுப்பின் ஆங்கில பாடம்..

      Delete
  4. அருமையான பதிவு எத்தனையோ பாடங்களை புகட்டுகிறது.
    படங்களும் கதையும். நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி..
      நலம்தானே..

      Delete
  5. படங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை சுட்டியை படத்தின் மீது கொண்டு செல்ல வருவது போல தெரிவித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. அது நிறைய மேனகேடல் உள்ள வேலை ...
      எனவே நான் தவிர்க்கிறேன்...
      நன்றி சகோதரி உங்கள் ஆலோசனைக்கு

      Delete
  6. "//நம்மில் சிலரும் இப்படித்தான் நம் இயல்பை உணராமல் ஆடுக்குட்டிகளுடன் வாழும் சிங்க குட்டிகளாக வாழ்த்து முடித்துவிடுகிறோம்.//"

    உண்மை தான், நம்மைப் பற்றி நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்ந்து மடிந்து விடுகிறோம்.

    தன்னம்பிக்கையூட்டும் நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு சொக்கன்

      Delete
  7. நல்லதொரு பதிவு! ஒன்பதாம் வகுப்பில் இப்படி நல்ல கருத்துள்ள கதையுடன் பாடங்களா? நல்ல திட்டம்தான் நண்பரே! மாணவர்களின் கறனையையும் வளர்க்க உதவுவது போல தோன்றுகின்றது!

    அருமையான பதிவு!

    ReplyDelete
  8. நல்ல தொரு பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்

      Delete

Post a Comment

வருக வருக