ஜேசி பயிற்சிகள் இரண்டு


அமெரிக்காவின் வெற்றிக்கு அடித்தளம் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளே. இந்தப் பயிற்சிகளின் வல்லமை புரிந்து ஜப்பானும் அவற்றை பின்பற்ற இன்று அண்ணன் அமெரிக்காவின் தோள்களில் இருக்கிறது ஜப்பான்.

அந்த வகையில் பயிற்சிகள் வெகு முக்கியமானவை. ஒரு நல்ல பயிற்சியாளர் ஒருமணி நேரம் செலவிட்டாலே ஒரு முப்பது மனங்களை தன்னம்பிக்கையால் நிரப்பலாம்.

பயிற்சிகள் குறித்தோ பயிற்சியாளர் ஆவது குறித்தே நம் சமூகத்தில் இன்னும் ஒரு விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இந்த வகையில் ஜே.சி. இயக்கம் (நல்ல தலைவர்களைக் கொண்ட கிளையியக்கங்கள் மட்டும்)  தொடர்ந்து தனது உறுப்பினர்களுக்கு பயிற்சிகளைத் தருவதோடு அவர்களில் பலரை பயிற்சியாளராகவும் மாற்றி இருக்கிறது.


கடந்த வாரம் மண்டலப் பயிற்சியாளர் ஜே.சி. ஐ.எம். முத்துக் குமார் அவர்கள் திறன்மிகு முடிவெடுத்தல் என்கிற பயிற்சியைத் தந்தார்.  குளிரூட்டப் பட்ட அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது பயிற்சி.

ஒரு குழுவாக ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் பொழுது ஆறு தொப்பிகளை பயன்படுத்தலாம் என்ற போனோ வழிமுறையை சொன்னார்.

வெள்ளைத் தொப்பி


பிரச்னை குறித்த அணைத்து விவரங்களையும் திரட்டும் நிலையில் குழு வெண் தொப்பி நிலையில் இருக்கிறது. தகவல் திரட்டுவதே இந்த நிலையின் ஒரே பணி.

மஞ்சள் தொப்பி
   
இது நேர்மறைச் சிந்தனைக்கான வேளை. இந்த தொப்பி நிலையில் குழு நேர்மறையாக சிந்தித்து தீர்வுகளை காண முற்படும் நிலை.

கரும்தொப்பி


மிக முக்கியமான நிலை. எடுத்த தீர்வுகள் குறித்து முழுதாக விவாதிக்கும் ஈவு இரக்கமின்றி கடந்த நிலையில் எடுத்த தீர்வினை ஆராயும் நிலை.

செந்தொப்பி

சிவப்பு தொப்பி நிலையில் குழுவினர் அவர்களது சந்தேகங்கள், பயன்கள் குறித்து விவாதிக்கலாம்.

பச்சைத் தொப்பி

புதிய ஆலோசனைகளுக்கும், படைபாற்றலுக்கும், மாற்று வழிகளுக்குமான நிலை. குழு இவை குறித்து விவாதிக்கலாம்.

ஊதாத் தொப்பி

ஆறு தொப்பி நிலைகளும் அவற்றின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இருக்கிறதா என்று ஆராயும் நிலை.
இந்த வாரம் மண்டலப் பயிற்சியாளர் ஜே.சி. சொக்கலிங்கம் அவர்கள் மனித உறவுகள் மேம்பாடு குறித்து ஒரு அருமையான பயிற்சியைத் தந்தார். ஒரு பல்தொழில் நுட்பக் கல்லூரியின் தாளாளராக இருந்தாலும் தனது பணிகளுக்கிடையே இப்படி ஒரு அருமையான பயிற்சியைத் தந்தார்.

பணத்தை குவிப்பது மட்டுமே நம்மை வெற்றியாளராக்காது மனிதர்களை சேமிப்பது தான் அவசியம் என்று துவங்கி அவர் கார்வியு என்கிற சொற்சுருக்கத்தை அறிமுகம் செய்தார்.

சி. கேர்

அடுத்தவர் குறித்த அக்கறை நமக்கான உண்மையான அக்கறை உள்ள உறவுகளை சம்பாதித்து தரும்.

ஏ. அக்செப்டன்ஸ்

அடுத்தவரின் குறைகளை பெரிது படுத்தாமல் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது நம்மையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கும்.

ஆர். ரெஸ்பெக்ட்

கொடுத்தா வருது. அனைவரிடமும் மரியாதையாக பழகுதல்.

வி. வால்யு

மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் பின்பற்றுதல்.

ஈ. எவாலுவேசன்

நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோம் என்பதை அவ்வப் பொழுது சுய மதிப்பீடு செய்து நம் உறவு பேணும் விதத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

யு. அண்டர்ஸ்டாண்டிங்

அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்

என விரிவான வழிமுறைகளை உறுப்பினர்களுக்கு எளிமையாக சொன்னார்.

Comments

 1. மனிதவளம் மிகுந்துள்ள நம் நாட்டில் அதன் முக்கியத்துவமோ, மெருகூட்ட வேண்டியதன் அவசியமோ இன்னும் அறியப்படாமல் தான் இருக்கிறது. அதிகாரம் படைத்தோர் தமக்குக் கீழுள்ளோரை அடிமையாய் நினைக்கும் மனப்பாங்கிற்கு நாம் வெகுவியல்பாய்ப் பழகியிருக்கிறோம்.
  சுமுகமான, தன்னார்வத்தோடு பணிபுரிய இத்தகு வழிமுறைகளைக் கையாளுதல் நல்ல பலனைத் தரும் என வழிநடத்துவோர் உணர்ந்தால் நாடுநலம் பெறுமெனக் கருதுகிறேன்.
  பயனுள்ள கட்டுரையாய் அமைந்தது. வாய்ப்புக் கிடைத்தால் காலைக் கூட்டத்தில் மாணவர்க்குச் சொல்லுவது போல மற்றவர் காதிலும் போட்டுவைக்கக் CARVEU உதவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பெருமகிழ்வு சகோ ஜோ,
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  நல்ல விழிப்புணர்வுகளை அளிக்கும்போது எமது சமுகத்தின் வாழ்வில் விடியல் மலரும் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அளிப்போம் ரூபன்,
   நன்றி..

   Delete
 3. நல்லதொரு பயிற்சி! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 4. வணக்கம் சகோ. நல்லதொரு நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நர்ணி. தொப்பிக்குள் இவ்வளவு விஷயங்களா!!!

  "//பணத்தை குவிப்பது மட்டுமே நம்மை வெற்றியாளராக்காது மனிதர்களை சேமிப்பது தான் அவசியம் //" - எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய வாக்கியம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.சொக்கன்..

   Delete
 5. பயனுள்ள பதிவு
  நன்றி நண்பரே
  தம 2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாக்குக்கும் வருகைக்கும் நன்றிகள் அண்ணா

   Delete
 6. வணக்கம் சகோ!
  நல்லதோர் பயிற்சி அவசியமும் கூட அனைத்தும்
  எவ்வளவு அருமையான உண்மையான விடயங்கள். இதை அனைவரும் உணர்ந்து நடந்தால். வாழ்வு சொர்க்கம் தான். நன்றி ! வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி..

   Delete
 7. பயிற்சியில் மனோதத்துவம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தனிமனித மேம்பாட்டிற்கு பயிற்சிகள் எனும்பொழுது மனோதத்துவம் இல்லாமலா?

   Delete
 8. வணக்கம் சகோ
  இரு பயிற்சிகளும் பயனுள்ள தகவல்களைத் தந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அனைத்திற்கும் அடிப்படை மனிதவளம் தானே! மனிதவளம் செம்மைப்படுத்தப்பட்டு விட்டால் நாடு முன்னேறும். அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் ஜே.சி குழுவினருக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 9. இது போன்ற மனித வளப் பயிற்சிகள் தற்போது ஐடி நிறுவனங்களில் கொடுக்கப்பட்டாலும், தாங்கள் சொல்லியிருப்பது போல நம் நாட்டில் மேலை நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் குறைவுதான். ஏன் ஹையர் செகண்டரியிலேயே இது போன்ற பயிற்சிகளைத் தொடங்கக் கூடாது? இல்லையென்றால் கல்லூரி முதல் வருடத்திலிருந்தே இதைத் தொடங்கலாமே இன்னும் சீராக இருக்கும் இல்லையா? நண்பரே! சரிதான் இல்லையா?

  மிக நல்ல ஒரு பகிர்வு. மிக்க நன்றி! நண்பரே! ஜே சி குழுவினர்க்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாரட்டுக்கள் நன்றியோடு பெறப்பட்டன ..

   Delete
 10. பயிற்சிகள் குறித்து சரியான புரிதல் இல்லை என்பது. உண்மை. இது போன்ற பயிற்சிகள் மன வலிமையையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete

Post a Comment

வருக வருக