நேர நிர்வாகம் 1

எழுபதுகளில் இருந்த ஒரு தலைமை ஆசிரியர் குறித்து அவரிடம் பணியாற்றிய ஒரு காவல் பணியாளர் அவருடைய  விசித்திரமான செய்கை ஒன்றைச் சொன்னார்.


தேர்வு துவங்க வேண்டிய நேரம் வரை அவர் பள்ளிக்கு வரமாட்டார். நான் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றால் அவர் கேணிமேட்டில் சொகுசாக குளித்துக் கொண்டு இருப்பார்.

என்ன கருப்பையா?

தேர்வு துவங்கணும். நேரம் ஆச்சு.

நீ போய் கடிகாரத்தை ஒரு அரைமணி நேரம் மெதுவாக வை. நான் வருகிறேன்.

நேர நிர்வாகம் என்பது நம்மில் பெரும்பாலோனாரால் இப்படித்தான் புரிந்துகொள்ளப்படுகிறது!

நேர நிர்வாகம் என்பது உண்மையில் ஒரு காணல் பதம். நேரத்தை நிர்வாகம் செய்தல் என்பது இயலுமா என்ன?

உண்மையில் நாம் நம்மை நிர்வாகம் செய்வதைத்தான் நேரநிர்வாகம் என்கிற பதத்தில் பயன்படுத்துகிறேம்.

ஒரு நாளின் 86400 வினாடிகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

கடிகார நேரம் மற்றும் நிகழ்வு நேரம் 

நேரம் என்பது நிகழ்வு என்று பொருள்தரும். நிகழ்வுகள் ஏதும் இல்லை என்றால் நேரமும் இல்லை என்றே பொருள். 

கடிகாரக் கணக்கில் நாம் நேரத்தை அணுக முடிந்தால் வெற்றியே. ஏன் என்றால் நமது அனுபவத்தில் மகிழ்வான தருணங்கள் எல்லாம் சில வினாடிகளாகவும் மொக்கை தருணங்கள் ஒரு யுகமாகவும் இருப்பதை உணர்திருகிறோம். சிலர் இதை ரிலேடிவ் டைம் என்றும் சொல்வார்கள். 

கடிகார நேரமும் நமது அனுபவ நேரமும் நேர் எதிரானவை. 

உங்களுக்கு பொன்னியின் செல்வன் வாசிக்கப் பிடித்தால் பல மணிநேரங்கள் கூட சில மணித்துளியாக தெரியும். வாசிப்பு உங்களுக்கு பிடிபட வில்லை என்றால் ஒரு பக்கத்தை புரட்டுவதற்குள் ஒரு வருடம் உருண்டோடியது போல இருக்கும்.   

இப்படி கடிகார நேரம் நிகழ்வு நேரம் என்று இருவகை நேரங்கள் இருக்கின்றன. ஒன்று ஒரு இயந்திரத்தின் பற்சக்கரங்களால் நிர்ணயிக்கப்படுவது.எல்லோர்க்கும் சமமானது இது. நீட்சியோ விரைவோ இருக்காது.

இன்னொன்றோ உங்கள் அனுபவத்தையும் ஆர்வத்தையும் பொருத்து நீளும் அல்லது சுருங்கும். 

இந்த இரண்டையும் சமனில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி உறுதி.

இன்னும் நீளும்


ஒரு முகநூல் கவிதை 

'அ'
'கனவு தேசம்'
ஒரு ஆசிரியன் எழுதுவதுபோல் ஒரு கவிதை;
தீவிரவாதத்தை தீவிர - வாதம் செய்து
எதிர்த்து விரட்டுவோம்.
பலதரக் கலவர கருவழிப்போம்.
இனங்களை மலடாக்குவோம்.
மனித இனம் ஒன்றெனச் செய்வோம்.
மலையென பொன் குவிந்து கிடந்தாலும்
மலைத்தேனது போதுமென
சொல்லவைப்போம்.
ஊழலில்லா அரசியலை உருவாக்குவோம்.
ஆனிரைக் கள்ளனையும்
ஆலிலைக் கண்ணனாக்குவோம்.
உன்னது, என்னது என்ற பொருள்
இலாது பொதுவுடமை
தத்துவத்தை பரப்புவோம்
பொன்னது, போனது போகட்டும்,
இனி ஆவதைப் பார்ப்போம்,
இனியாவது சேர்ப்போம்.
தாய்மடி பிள்ளை பரிபூரணமாய்
தவழ்வது போல
அரசு கருவூலம் நிறைப்போம்.
சொற்பதமே திவ்யமாம்,
சொல்லச் சொல்ல புனிதமாம்,
'கற்பு' என்னும் அந்தச் சொல் ஆனது ,
நாட்டின் பொக்கிஷமாம்,
பெண்ணது கற்பது பேணிக் காப்பது
எப்படி என்று கற்பது ஆணது
கல்வித் திட்டத்தில் ஒன்றாய்
கட்டாயமாக்குவோம்.
இன்றைய இளைஞிகளுக்கு
எடுத்துரைப்போம் அதன் மகத்துவம்,
இளைஞர்களை கடிந்துரைப்போம்
காக்கவேண்டி அதன் அகத்தத்துவம்
கண்ணது கடமை எனக் கூறி
கண்ணியத்தை ஐம்புலனுக்கும் ஊட்டுவொம்.
எண்ணியதை சாதிப்போம்.
பெண்ணியம் காப்பதே
முதன்மை எண்ணமெனக் கொள்வோம்.
தனிமனித ஒழுக்கம் தழைக்கச் செய்வோம்.
வல்லரசு ஆகும்முன்
நல்லரசும் நன்மக்களும்
வேண்டுமென வேண்டுவோம்.
இந்தக் கனவு தேசத்தை
நம்மால் உருவாக்க முடியாது போயினும்
நம் நண்பர்களின் சந்ததிகள்
உருவாக்குவார்கள் என்று நம்புவோம்,
முகநூல் நட்பை முன்நிறுத்தி..

ஆக்கம்
https://www.facebook.com/natrajan71?fref=nf


Comments

 1. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Replies
  1. ஏற்கனவே படித்த மாதிரி இருக்கு இருப்பினும் இன்னொருமுறை படிக்கிறேன் ..

   Delete
 3. அன்புத் தோழ!
  86400 களைப் பொற்காசுகளாக்கி அவை நீங்கள் செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் தீர்ந்து போய்விடும் என்ற நிலையில் என்ன செய்வீர்கள் என்ற ஆகப் புளித்துப்போன கேள்வியையே மாணவரிடத்து எழுப்பிப் போனதன்றிக் கூடுதலாய் இது குறித்து வேறறியேன் என்பதால் கருத்திடத் தயங்கினேன். ஆனாலும் நொடிகள் யுகமாதலையும் யுகங்கள் நொடியாதலையும் நான் அனுபவித்திருப்பதால் எழுதத் தோன்றியது.
  காலப்பாழில் யாதுமறியாமல் தொலைந்து கொண்டிருக்கும் யாவர்க்கும்
  “இரண்டையும் சமனில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி உறுதி“ என்பது இனி வருங்காலங்களையேனும் மீட்டெடுக்க, கட்டுக்குள் வைக்க உதவுமென நம்புகிறேன்.
  பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழின் முன்னணிப் பதிவருக்கு (இன்னும் சில மாதங்களில் )
   நன்றி

   Delete
 4. அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அருமை, கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் இணைப்போம்..
  கவிதை அருமை..இனி ஆவதைப் பார்ப்போம் - மிக அருமை..
  http://thaenmaduratamil.blogspot.com/2013/02/perumpeyalpinnaal.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 6. காலம் பொன் போன்றது...

  ReplyDelete
  Replies
  1. பொன்னை விற்றால் வாங்கிவிடலாம்..

   நன்றி

   Delete
 7. நாம் நேர நிர்வாகத்தோடு வாழ்ந்தாலும் சில பிளேடு புள்ளிகளிடமிருந்து தப்பிப்பதற்குள் அப்பப்பா..........
  ஆசிரியரின் ஆத்திச்சூடி நல்லாருக்கு.....

  ReplyDelete
  Replies
  1. யாரந்த புண்ணியவான்
   நன்றி

   Delete
 8. வணக்கம் சகோ
  மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கடிகார நேரமும் அனுபவ நேரமும் வேறு அது இரண்டும் சமமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி. கவிதையும் நன்று சகோ. நண்பருக்கு பாராட்டுகள்.
  ----------
  காதலியின் அருகில் இருக்கும் போது யுகங்கள் நிமிடங்களாகும், அவளைப் பிரிந்திருக்கும் போது நிமிடங்கள் யுகங்களாகும் என்று சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லியிருப்பது அழகாக இருக்கு ... ஐன்ஸ்டைன் சொன்ன மாதிரி
   நன்றி பாண்டியன்

   Delete
  2. முதலில் வேகமாகக் கடந்து போன எனக்குப் பின்னூட்டத்தில தொடர்புள்ளிகளில் மறைந்திருந்தது கண்படவில்லை. மீண்டும் பார்க்கும்போது, ஐன்ஸ்டினிடம் செய்தியாளர் அவருடைய சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) எளிமையாகவிளக்கும்படிக் கேட்டதும் அதற்கு ஐன்ஸ்டின், “ஒருவன் ஓர் அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறான் என்று வைத்துக்கொள்! அவனுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகமாகத் தோன்றும். ஒருவன் தன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு ஒரு நாள் ஒரு நிமிடமாகத் தோன்றும். சோதனைக்கு வேண்டுமானால் முன்னதை நீ செய்து பார். பின்னதை நான் செய்கிறேன்” என்றதும் நினைவு வரச் சிரித்துவிட்டேன். என்னைப் போல் ‘வளவள‘வென்றில்லாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது நல்லதுதான். அதுக்காக இப்படி அநியாயத்துக்குச் சுருக்கினிங்கன்னா, என்ன மாதிரி ஆளுக எல்லாம் என்ன பண்றது தோழர்? இனிமே உங்க பின்னூட்டத்தக்கூட வேகமா வாசிச்சிட்டு முடியாது போல இருக்கே!
   கொஞ்சம் விளக்கமாச் சொன்னிங்கன்னா உதவியா இருக்கும்.
   நன்றி.

   Delete
  3. தோழர் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் என்பதால் சுருங்க சொன்னேன்..

   இனி கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்கிறேன்..
   நன்றி

   Delete
 9. அசத்திவிட்டீர்களே சகோ ! அது என்ன ஆசிரியர் போல ஆசிரியர் தானே மறந்து விட்டீர்களா ஒரு நிமிடம்.ம் ..ம்... நன்றி நன்றி அருமையான பொன் மொழிகள் ! அத்தனையும் நிறைவேறக் கடவது என்று சாபம் கொடுத்தால் நல்லது சகோ ! எனக்கு அந்த சக்தி இல்லையே. இருந்தாலும் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
 10. நேர நிவாகத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள் சகோ.

  ReplyDelete
 11. நிஜம் தான் நீங்கள் சொல்வது!

  ReplyDelete
 12. நேர நிர்வாகத்துடன் தொடங்கி மிக அருமையான கவிதையுடன் முடித்துளீர்கள். மிக நல்ல பதிவு.

  " நம்மால் உருவாக்க முடியாது போயினும் ... "

  கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் ஆக்கபூர்வமாய் இணைத்தால் நம் காலத்திலேயே கைகூடும் நண்பர்களே !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...
  http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்களை எண்ணங்கµளை பதியுங்கள். நன்றி.

  ReplyDelete
 13. வணக்கம்

  நல்ல கருத்து நிறைந்த விளக்கவுரை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. Quantitiy time, Quality time பற்றிய அருமையான ஒரு பதிவு! நண்பரே! அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

  முகநூல் கவிதையும் அருமை!

  நல்ல நல்ல பதிவுகளைத் தருகின்றீர்கள்! நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று!

  ReplyDelete

Post a Comment

வருக வருக