எக்ஸ்பென்டபில்ஸ் 3


எண்பதுகளில் நீங்கள் காமிக்ஸ் படித்தவர் என்றால் இந்தப் படம் உங்களுக்கே உங்களுக்கானது. காமிக்ஸ் ஆக்சன் அப்படியே செல்லுலாய்டில். 
மிலிடரி தனது ரகசிய திட்டங்களுக்காக சில வீரர்களை அனுப்பும். பிரச்னை என்னவென்றால் இவர்கள் தங்களது திறமையை மட்டும் நம்பி உயிரைப் பணயம் வைத்து செயலில் இறங்க வேண்டும். மாட்டிக்கொண்டால் அனுப்பிய மிலிடரி கண்டுகொள்ளாது. மாட்டின இடத்தில் சங்குதான். 
இவர்கள்தான் எக்ஸ்பென்டபில்ஸ்! 

குடித்துவிட்டு காலில் போட்டு நசுக்கும் கோக் கேன்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்யாசம் கிடையாது மிலிடரியில். நேரடியான போரில் செய்ய முடியாததை இவர்கள் மூலம் செய்யும் மிலிடரி. 

ஸ்டாலோன் எப்படி இந்த ஐடியாவை பிடித்தார் என்று தெரியவில்லை. மனுஷன் இத்துணை மெகாஸ்டார்களை ஒன்றிணைத்து ஒரு படத்தை கொடுப்பதென்றால்? 

பார்னே தனது எக்ஸ்பெண்டபில் ஒருவனை மீட்பதில் ஆரம்பிக்கிறது அதகளம். வெஸ்லி ஸ்னைப். ரொம்ப நாள் ஆச்சே என்று நினைத்தால் ஆக்சன் சீக்குவென்சில் பின்னி பெடல் எடுக்கிறார். 

அந்த ரயில் காட்சிகளில் ஆரம்பிக்கும் பரபரப்பு படம் முழுதும் தொடர்கிறது. அடுத்து ஒரு பாம் மீட்பு பணிக்கு செல்லும் பார்னே தனது பரம எதிரியை சந்திக்கிறான். 

ஸ்டோன்பாங்க்ஸ் (மெல் கிப்சன்), தலையைப் பார்த்த அடுத்த கணத்தில் தனது நண்பர்களைக் கழட்டிவிட்டு புதுக் குழுவை அமைக்கிறார்.  இந்த இடம் கொஞ்சம் டாக்கு ஸ்டைலில் வந்துவிடுகிறது. 

பின்னர் வரும் ஆக்சன் பிளாக்ஸ் பரபர என்று இருந்தாலும் ஆள் சேர்ப்பு வைபவம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. 

பல்கேரியாவிலும், ரோமானியாவிலும் எடுக்கப்பட்ட படம். லோக்கேசன்ஸ் ரொம்பவே கூல். 

படம் எனது பரிந்துரையில் ஆக்சன் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. 

மூன்றாவது பாகத்தில் முதல் முறையாக ஒரு பெண் நட்சத்திரம். ரோண்டா ரவ்சி, கொடுக்கிற ரவுசு அதிகம்.

படபிடிப்பின் பொழுது ஏன்மா டென்சனா இருக்க? நீதான் குத்துசண்டை வீராங்கனையாச்சே போட்டிகளுக்கு முன்னே என்ன செய்வ அத இப்ப செய்யலாமே என்று இயக்குனர் பாட்ரிக் ஹூஜ் கேட்க ஒரு குத்து விழுந்திருக்கிறது பாட்ரிக்குக்கு. மன்சன் ஆஸ்பத்திரியில் தான் விழித்திருக்கிறார் உடைந்த விலா எலும்போடு!

ரொம்ப நாட்களுக்கு பின்னர் வெஸ்லி ஸ்னைப்ஸ், ஆண்டனியோ பண்டாரஸ் இவர்களைப் பார்க்கவே இன்னொருமுறை போகலாம் என்று தோன்றியது. பண்டாரஸ் மன அழுத்தத்தில் தனியே யப்பா எனக்கு வேலை கொடுங்கோ, வெறும் தண்ணி மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்று புலம்புவது சரியான நகைச்சுவை. (தமிழ்த் திருநாட்டில் தண்ணி என்றால் குவாட்டர் என்று புரிந்துகொள்வார்கள்  என்று வாட்டர் என்ற வார்த்தை டப் ஆகியிருக்கிறது!)

பண்ட்ராஸ் பேசிக் கொண்டே இருக்கும் காரக்ட்டர் கோல்கே. மனிதன் வாயைத்திறந்தால் தியேட்டரில் வெடிச்சிரிப்பு அள்ளுகிறது. 

படத்தின் வில்லன் மெல் கிப்சன்! எப்படி ஒரு ஆக்சன் ஹீரோ இப்படி வரலாம் என்றெல்லாம் கோபப் படக்கூடாது. நான் அவரை வில்லனாக பார்த்த இரண்டாவது படம் இது. சொல்லப் போனால் படம் நன்றாக வந்திப்பதில் இவரது காரக்டரின் பங்குதான் அதிகம். 

தங்கள் ஆக்சன் ஹீரோக்களை ஒருமுறை பார்க்க விரும்பினால் தாராளமாக ஒரு முறை தியேட்டருக்கு போய்வரலாம்.

Comments

  1. nalla vimarsanam..Saw this movie with family and disturbed my husband with questions...what to do? My knowledge is like that. .He was saying he should see the movie in peace later :) And yeah, was shocked to see Mel Gibson as villain, .but his role was fantastic. Too much violence to watch with kids though, my resistance went vain.

    ReplyDelete
  2. இத்துனை மகா நடிகர்களை ஒன்றிணைத்ததே ஸ்டலோனின் மிகப் பெரிய சாதனைதான்
    படம் பார்த்தேன் ரசித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. ஸ்டோலனின் ராம்போ சீரிஸ்களே கிட்டத்தட்ட இதே பாணியில் தான் இருக்கும் அண்ணா ! அந்த படங்களில் தனியாளாய் ராணுவத்தை முடித்துத்தள்ளுவார் , இந்த படங்களில் வயசானதால் கூட பல ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களை அள்ளிக்கொண்டு மெகாஹிட் அடித்துவிட்டார் .

    ஆனாலும் மனுசனுக்கு வயசானது முகத்துல இருக்க சுருக்கத்துல தான் தெரியுது . உடம்பைலாம் பார்த்தா 'யம்மாடியோவ்' தான் .

    ReplyDelete

Post a Comment

வருக வருக