வண்ணதாசன் பிறந்த நாள் தொகுப்பு


சமூக வலைதளங்களில் எல்லோராலும் எளிதாக நெருங்க முடிகிற அண்மையில் இருக்கும் பிரபலங்கள் சிலரே.


அவர்களில் வண்ணதாசன் முதன்மையானவர். 

நான் அவ்வளோ பெரிய கவிஞர் எப்படி முகநூல் பக்கமெல்லாம் வருவார் என்று ஆரம்பத்தில் குழம்பினேன் மனிதர் வந்ததில் இருந்து எனது முகநூல் அனுபவங்களே மாறிவிட்டன. 

பின்னே எந்த வெகு ஜன ஊடகமும் இல்லது நேரடியாக ஒரு படைப்பாளியின் கவிதைகளை படிக்க கிடைக்கும் வாய்ப்பு சாதரணமானதா? 

கவிஞர் கல்யாண்ஜி என்கிற வண்ணதாசனின் பிறந்தநாள் இன்று.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா. 

தமிழ் எனும் வண்ணத்தட்டில் இருந்து இன்னமும் அறியப்படாத வண்ணங்களை முகநூலில் தொடர்ந்து தீட்டுங்கள்..

 நீங்களும் தொடர https://www.facebook.com/vannadasansivasankaran.s

அய்யாவின் கவிதை ஒன்று

நீங்கள் மலை ஏறுகிறீர்கள்.
சிகரம் சிகரமாகத் தொடுகிறீர்கள்.
உங்கள் கொடிகளைப் பறக்கவிடுகிறீர்கள்.
உங்கள் கைலாயம் 
உங்களுக்கு வசப்பட்டுவிடுகிறது.
எந்த மலையிலும் நான்
ஏற நினைத்ததில்லை.
நீண்ட தூரத்தில் இருந்து 
நெடுங் காலமாக
நீலமலை பார்க்கிறேன்.
என்னைப் பார்த்துச்
சிரித்து நிற்பவனும்
ஈசனாகத்தான் இருக்கவேண்டும்.


Comments

 1. வணக்கம்...வண்ணதாசன் கவிதைகள் நான் விரும்பும் கவிதைகளில் ஒன்று...வித்தியாசமானவர் தான்..நன்றி

  ReplyDelete
 2. மாயனூரில் ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது அறிமுகமான கல்யாண்ஜி கவிதைகளையும் கலாப்பிரியா கவிதைகளையும் மாற்றிப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறேன்.
  இலக்கியத்தின் எல்லா வாசல்களையும் திறந்து பிரவேசிக்கிறீர்கள். கொணர்வதை எல்லார்க்கும் கொடுக்கிறீர்கள்!
  பொறாமையாய் இருக்கிறது.
  நன்றி!

  ReplyDelete
 3. மிக மிக அருமை சகோதரரே!
  கவிஞரைப் பற்றி இப்போது இங்கேதான் அறிந்துகொண்டேன்.

  பார்க்கின்றேன் அங்கும். பகிர்ந்த கவிதை அருமை!

  அறியத்தந்தமைக்கு உளமார்ந்த நன்றியுடன்
  வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
 4. தங்களின் அருங் குணங்களில் இதுவு மொன்றோ நல்லது நல்லது.
  கவிஞர் வண்ணதாசன் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி இதோ உடனேயே சென்று பார்க்கிறேன் சகோ. வாழ்த்துக்கள் மிக்க நன்றி !

  ReplyDelete

Post a Comment

வருக வருக