கதை திரைக்கதை வசனம் இயக்கம் - ஜெய பிரபுவின் விமர்சனம்

ஒரு புதுப்படத்தின் விமர்சனம் நண்பர் ஜெயப் பிரபுவின் பதிவில் இருந்து ..புதிய பாதை படம் வந்ததுமே ஓடிடல...
மக்கள் தியேட்டருக்கு போயிட்டு வந்து சொல்ல, சொல்ல,

ஒரு வாரம்,பத்து நாளைக்கு அப்பறமா ப்ளாக்ல டிக்கெட்ஸ் சக்க போடு போட்டிச்சு...இந்த படத்தால ஒரு 'புது ட்ரென்ட்' சினிமாவுக்கு இவரால கெடச்சது.
பளிச்,பளிச் சிந்திக்க வைக்கும் வசனங்கள், மனசை குத்திக் குடையும் நியாயமான சமூக அக்கறையுள்ள கேள்விகள்,கதை,கேமரா-என சொல்லிக் கொண்டே போகலாம்...

எத்தனை முறை திரையரங்கிற்குச் சென்றேன் என சொல்லத் தெரியவில்லை. அத்தனை வசனங்களும்,காட்சி அமைப்புகளும் அப்படியே மனப்பாடமாயிற்று.
அதன் பிறகு அவரது எழுத்தினை ரசிக்க ஆரம்பித்தேன். துளித்துளியாய் அவரது திரைப்படங்களில் விரசம் எட்டிப்பார்க்க ஆரம்பித்ததும் (உள்ளே,வெளியே) என்னை அறியாமல் விலக ஆரம்பித்தேன்.

என்னவோ இன்று இப்படம் பார்க்கத் தோன்றியது. பேராச்சர்யமாக, அருகில் ஓடிய அஞ்சானை விட, இப்படம் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது.

கதையே இல்லாமல் ஒரு படம் என ஸ்டில்ஸில் கண்டது போல, "கதையைத் தேடுவதே கதை".

ஒரு புதிய இயக்குனர், தன் சகாக்களோடு அமர்ந்து கதை(கள்) விவாதம் நடத்துகிறார்.

ஒவ்வொரு படமாக போட்டுப் பார்ப்பதும், அது குறித்து விவாதிப்பதும், எந்தக் கதையை தேர்ந்தெடுப்பது என்பதும் தான் முதல் பாதி.

படம் ஆரம்பித்து 15 நிமிடம் கழித்து மெல்ல நம்மை உள்ளிழுத்துச் செல்வது, டைமிங் நகைச்சுவைகள்.

தம்பி ராமையாவின் நடிப்புத் திறனை, "மைனா, கும்கி" திரைப்படங்களை வைத்து எடை போட்டது தவறு என உணரவைக்கும் பட்டையைக் கிளப்பும் நடிப்பு.

ஃப்ரேமுக்கு, ஃப்ரேம் இவரது வசனங்களும்,முக பாவனைகளும், நடையும்...

காட்சிக்குக் காட்சி, 'நான் ரெண்டு பொண்டாட்டிக்காரன்' -எனப் பம்முவதும் அழகு.

கண்களில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு முதல் பாதி முழுக்க, ஒரு படம் எடுக்க, என்னென்ன மொள்ளமாரித்தனங்கள் நடக்கின்றன என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

தம்பிராமையா, பாரில், உளுந்த வடைதான் வேணும் என அடம் பிடிக்க, மசால் வடையை கீழே போட்டு எடுத்துக் கொடுத்து, இப்ப இது உழுந்த வடதான் சாப்புடு என ஒருவர் மிரட்டுவதும்,

இன்னொரு காட்சியில்
சிடியை, ஓட்டை வடை என்பதும்,காரணம் சிடியிலும் நடுவில் ஓட்டை என்பதும், ஹாலிவுட் படங்களையெல்லாம் அடுக்கிப் பேசுவதும் செம்ம...

தமிழ்த் திரைப்படங்களில் இது ஒரு புது முயற்சிதான்.
ஆடியன்ஸ அடிக்கடி பார்த்து பேசறாங்க...

பார்த்திபன்,அப்ப அப்ப குறுக்க வந்து பேசறாரு..

ஆனா அவரு கேரக்டர் இல்ல.

முதல் பாதி முழுக்க ரசிகர்கள் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டி பார்த்தாங்க..

செகன்ட் ஆஃப் கொஞ்சம் இழுக்க ஆரம்பிச்சிட்டு...
எப்ப முடியும்ன்னு யோசிக்க வச்சிட்டு..

ஆனா, தம்பிராமையா, மற்ற புதுமுகங்கள் எல்லாமே அற்புதமா பண்ணிருந்தாங்க..

ஒரு தற்கொலை ஏன் நடந்ததுன்னு கடைசி வரை சொல்லல..

"சினிமாத்துறைக்கு வராதீங்கப்பா யாரும்..
என் கிட்ட தெறம இருக்கு, ஆனா 'லக்' வேணுமாமே? அது எங்க கெடைக்கும்? பொண்ணுக்கு 28 வயசாயியும் கல்யாணம் பன்ண முடியலன்னு"- அவரு கதறி அழுதப்ப, திரைத்துறையின் இன்னொரு பக்கம் தெரியுது...

தம்பி ராமையா, ஒரு அற்புதமான நடிகர்.அவரை திரையுலகம் இன்னும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாட்டு ஒண்ணே ஒண்ணு கொஞ்சம் வருது... இன்னொரு சாங் படம் முடிஞ்சதும் போடுறாங்க..ஆனா அது சூப்பரா இருக்கு..

பார்த்திபன் சார்! உங்கள் புது முயற்சியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இது உண்மையிலேயே திரைத்துறைக்கு புதிய பாதைதான்.

ஆனால் எல்லா ரசிகர்களும், இதற்குத் தயாராகிவிட்டார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியாது. சென்னை,மதுரை,கோவை,திருச்சி - என பெரும் நகர மக்களுக்கும், நன்றாக படித்த மக்களுக்கும் (A சென்டரா?) இது அற்புதமான படைப்பு..

காட்சிகள்,வசனங்களில் பார்த்திபனின் 'டச்' உச்சமாயிருக்கிறது.

வேறெதுவும் சொல்லவில்லை.

பார்த்திபன் ஒரு சிறந்த இயக்குனர் என மீண்டும் நிரூபித்துள்ளார். எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல், கதையை பற்றிக் கவலை இல்லாமல், சினிமாத் துறையை கலாய்ப்பதை சிரிக்க சிரிக்க காண நினைப்போர் அவசியம் பார்க்க வேண்டும். மற்றபடி செகன்ட் ஆஃப் சரி பன்ணிருக்கலாம்.

நண்பர் ஜெயப்பிரபு 

முகநூல் முகவரி https://www.facebook.com/pugalj

Comments

 1. நல்ல விமர்சனம்... படம் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 2. விமர்சனம் அருமை
  நண்பர் ஜெயபிரபுவுக்குப் பாராட்டுக்கள் நண்பரே
  தம 2

  ReplyDelete
 3. அப்போ பார்த்திட வேண்டியது தான். என்ன படம் பார்ப்பது என்று யோசிக்கத் தேவை இல்லை இனி . நன்றி சகோ வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 4. நல்ல அழகான வித்தியாசமான விமர்சனம்...பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மது. நண்பர் ஜெயப்பிரபுவுக்கு வாழ்த்துக்கள், அழகான விமர்சன நடைக்கு.

  பார்த்திபன் நிஜமாவே ஒரு நல்ல இயக்குனர். அவரது வசனங்கள் எப்போதுமே மிகவும் நச், நறுக்கென்று இருக்கும். உண்மை உள்ளே வெளியே விரசம் கூடுதல்....
  வித்தியாசமாகச் சிந்திக்கும் ஒரு இயக்குனர்....அவரது நகைச்சுவை கூட அப்படித்தான் இருக்கும்.....இந்தப்படம் பார்க்கவேண்டும்

  ReplyDelete
 5. ம்.. விமர்சனங்கள் பார்த்தே நெட்டில் தேடிப் படம் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.
  ஆக நண்பரின் விமர்சனம் நெட்டில் இப்படம் வரும்வரை காத்திருந்து பார்க்க வைக்கிறது.

  நானும் உங்கள் ரசனை ஒத்தவள்தான். பார்த்திபனின் சில படங்கள் மனதை அப்படியே அள்ளிச் சென்றவையாயும் இருக்கிறதே!. தேடிப் பார்ப்பேன் நல்லவைகளை மட்டும்!...:)

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete

Post a Comment

வருக வருக