செங்கிஸ்கான், சைனா, ஒரு தாய்

நண்பர் கவிஞர் காலத்தச்சன் அவர்களின் ஒரு பதிவு உங்களின் பார்வைக்காக 

செங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்துச்சென்றான்.

குதிரைப்படைகள் நகரத்தில் பெரும்பாய்ச்சலுடன் புகுந்ததும் பெண்கள் அனைவரும் தத்தம் குழந்தைகளை அள்ளிக்கொண்டு ஓடினர்.

ஒருத்தி மூத்தக் குழந்தையை முன்னே ஓடவிட்டு இளையக்குழந்தையை இடுப்பில் சுமந்துகொண்டு ஓடினாள்.

ஒருக்கட்டத்தில் முன்னால் ஓடிய மூத்தக்குழந்தை தடுமாறி வீழ்ந்தது.போர்வீரர்கள் சூழும் தருணம். உடனே அந்த பெண் தன் இடுப்பில் இருந்த குழந்தையை இறக்கிவிட்டு,கீழே விழுந்த மூத்தக்குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு ஓடினாள்.

அதை கவனித்த செங்கிஸ்கான் அந்த பெண்ணை இழுத்துவரச்சொன்னான். போர்வீரர்கள் அவளை அவன் முன் நிறுத்தினர்.

கத்திமுனையில் செங்கிஸ்கான் கேட்டான்., “நீ விட்டுவிட்டு ஓடியது உன் பக்கத்துவீட்டுக்காரியின் குழந்தைதானே...?”

அவள் சொன்னாள் ., “இல்லை அரசே., நான் தூக்கிவந்ததுதான் பக்கத்துவீட்டுக்காரியின் குழந்தை.அவள் இறக்கும் பொழுது என் பொறுப்பில் விட்டுச்சென்றாள். அங்கு விட்டுவிட்டு வந்ததுதான் நான் பெற்றக் குழந்தை”.

அதிர்ந்த அரசனிடம் அவள் மேலும் சொன்னாள்.,
“என் குழந்தையை அளித்தது கடவுள்.,இந்த குழந்தையை அளித்தது தர்மம்., கடவுளைவிட தர்மமே உயர்ந்தது.”

செங்கிஸ்கான் சொன்னான்., “தாயே., இந்த மண்ணை என்னால் வெல்லமுடியாது . Comments

 1. ஒருவரியில் சொன்ன அற்புதமான தத்துவம் வியந்த்தேன் நண்பரே...

  ReplyDelete
 2. வார்த்தையே வரவில்லை எனக்கு! த.ம.2

  ReplyDelete
 3. வணக்கம்

  நல்ல கருத்தை இறுதியில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Post a Comment

வருக வருக