ஒரு சம்பவம் ஒரு பாடம்...

வணக்கம் ...

அரச குடும்பத்தினர்கள் பிறர் பார்க்க அழக்கூடாது என்று சொல்வார்கள்..
சின்ன வயதில் இதைப்படித்துவிட்டு ஏன் என்று குழம்பினேன்.


குறிப்பாக டயானாவின் இறுதித் சடங்கின் பொழுது குமுறி அழுத அவரது இளைய மகன் அதிகம் விமர்சிக்கப் பட்டார்.

என்னடா இது கொடும, ஆத்தா செத்தாக் கூட இளவரசன் அழக் கூடாதா என்று நினைத்தேன்?

பின்னர் பல ஆண்டுகளுக்குப்பின்னர் டி.வி.எஸ். சோமு அவர்களின் தாணைத்தலைவர் குறித்தும் அவர் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரியாதவர் என்ற விமர்சனம் முன்னெடுக்கப் பட்டது.

இப்போவும் எனக்கு அது தவறாகப் படவில்லை.

பின்னர் ஒரு கணிதப் பேராசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது புதுகை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நிகழ்வை சொன்னார்.

புதுகை சமஸ்தானம் ஒரு ஆங்கில ஆதரவு சமஸ்தானம். (அன்றைய அரசியல் சூழல்களின் அழுத்தத்தில் அரசர் எடுத்த முடிவு அது. எனவே இன்று அதை விமர்சிப்பது இப்போது இந்தப் பதிவில் தேவை இல்லை. )

நாட்டுக்கு விடுதலை அளித்த பொழுது ஆங்கிலேயர்கள் மிகத் தெளிவாக புதுக்கோட்டை எந்த விதத்திலும் மிரட்டப்படக்கூடாது அதன் விருப்பதிர்கேற்ப தனிநாடகவோ அல்லது தேசியத்துடன் இணையைவோ செய்யலாம் என்கிற தனி அந்தஸ்தை தந்திருந்தனர்.

எந்த இரும்பு மனிதர்களும் உடைக்கமுடியாத கவசம் அது!

சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்து சுதேசி சமஸ்தான மன்னர்களையும் அழைத்து என்ன எப்படி வசதி என்றுகேட்டு மிரட்டி இந்தியாவில் சேர்த்து இந்த தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிக்கொண்டிருந்தார்.
 புதுகை மன்னரின் முறையும் வந்தது. அப்போது வெறும் பதினெட்டு வயது அவருக்கு.

பட்டேல் என்ன ஹைனெஸ் இந்தியாவுடன் இணைய விருப்பமா என்று கேட்க.

மன்னர் கம்பீரமாக பதிலளிக்கிறார் ...

நான் என் மக்களை கலந்து அவர்களின் விருப்பத்தை அறிந்துதான் சொல்ல வேண்டும்.

பட்டேல் தனது ஆயுதத்தை பிரோயோகித்தார்.

ஒரு முன்னூறு தந்திகளை மேசையில் கொட்டினார்.

இவையெல்லாம் புதுக்கோட்டையை இந்தியாவுடன் இணையுங்கள் என்று சொல்லி உங்கள் சமஸ்தான குடிமக்கள் அடித்த தந்திகள்தான் என்றார்.

பதினெட்டு வயது, கடந்த நொடிவரை வளைந்த முதுகேலும்புகளோடு மட்டுமே பேசியிருந்த மகாராஜாவிற்கு இது பெரும் அதிர்ச்சி.

இப்படி ஒருவர் மகாராஜாவை மரியாதைக் குறைவாக நடத்தமுடியுமா என்பதைவிட தன் குடிமக்கள் தன்னைக் கைவிட்டதாக ஒரு தவறான மாயையில் உணர்வு பிரவாகத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார்.

சரி புதுகையை எடுத்துக்கொள்ளுங்கள்,

இந்தாருங்கள்.

என்ன இது?

கஜானா சாவி.

ஆடிப்போனார் பட்டேல்.

மற்ற மன்னர்களெல்லாம் கஜானாவை சுரண்டிவிட்டு ஒப்படைக்க புதுகை மன்னர் பலகோடி செல்வக் களஞ்சியத்துடன் இந்திய அரசுக்கு தனது சமஸ்தானத்தை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வின் பின்னர் மாலை ஆறுமணிக்கு மேல் புதுகையில் அவர் தங்குவதில்லை, திருச்சிதான்.

திருமணத்தை மறுத்துவிட்டார்.

இத்தனைக்கும் அந்த முன்னூறு தந்தியளித்தவர்களைத் தாண்டி அவருக்காக கதறியழுக உயிரைக் கொடுக்க லெட்சம் பேர் தயாராக இருந்தார்கள்.

அரண்மனையில் புதுகைக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றப் பட்டபொழுது கதறி அழுதவர்கள் அதை நினைவுகூர்ந்து இன்றும் அழுகிறார்கள்.
மன்னரின் தர்பார் ராஜா ரவி வர்மா வரைந்தது
 அன்று உணர்வுகளுக்கு ஆளாகாமல் அவர் உறுதியாக வேறுமுடிவை எடுத்திருந்தால் இன்று நீங்கள் புதுகைக்குள் வர பாஸ்போர்ட்டும் விசாவும் தேவைபட்டிருக்கும்.

குறைந்த பட்சம் ஒரு யூனியன் பிரதேசமாகவாவது தொடர்ந்திருக்கும்.
ஒரு தலைவர் உணர்வுவயப்பட்டால் ..... என்ன ஆகும் ?
புதுகைக் கொடி 

(மக்களாட்சியில் மன்னர் பராமரித்த ஏரிகளும் குளங்களும் காணாமல் போய்விட்டன, மன்னர் புதுகை நகரெங்கும் தாமிரக் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கினார், அவை பிளாஸ்டிக் குழாய்களாக மாறிவிட்டன,
பெரும் குளம் ஒன்றின் நீர்ப்பிடிப்பு கரை இன்று எங்கோ பலவீடுகளில் செங்கல்களாக மாறிவிட்டது. சுதந்திரம் மக்களுக்கா திருடர்களுக்கா என்று தெரியவில்லை)
கோட் ஆப் ஆர்ம்ஸ்( அரச இலட்சினை)
இப்போது வேறு ஒரு சீனை யோசிப்போம்.

இன்றைய ஒரு லோக்கல் கவுன்சிலர் பட்டேலைச் சந்தித்து இந்த நிகழ்வை எதிர்கொண்டால் என்ன நடக்கும்.

யோவ் நீயே தந்தியை அடிச்சுகுவ அப்புறம் என்னைக் கூப்பிட்டு ....

யார்கிட்டே ?

கவர்னர் ஜெனரல்கிட்டே போகவா?

படேலுக்கு பொறி கலங்கியிருக்கும் ...

எனவே உணர்ச்சிவசப்படுபவர்கள் தலைமைக்கு வராதீர்கள் ... அல்லது உணர்ச்சிகளை மடைப்படுத்துங்கள் ...

அன்பன்
மது 

Comments

  1. வணக்கம்
    அறியமுடியாத விடயத்தை தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருக ரூபன் ...
      நன்றி

      Delete
  2. அறியாத பல தகவல்களை அறிந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தையாரே..

      Delete
  3. //எனவே உணர்ச்சிவசப்படுபவர்கள் தலைமைக்கு வராதீர்கள் ... அல்லது உணர்ச்சிகளை மடைப்படுத்துங்கள் ...//
    well said !!
    புதுகோட்டை சமஸ்தானம் பற்றிய விஷயம் எனக்கு புதிது ..பகிர்வுக்கு நன்றி .
    ...
    வெளிநாட்டினர் பொதுவாகவே நம்மைப்போல கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யமாட்டாங்க .அதனால் தானோ என்னவோ டிப்ரஷன் இனால் அதிகம் பாதிக்கப்படறாங்க .
    அரச குடும்பம்னு இல்லைங்க .இங்கே நான் சில funeral இல் பார்த்திருக்கேன் .கணவர் சவப்பெட்டி உடன் மனைவி நடந்து ஆலயயத்தின் முன்பகுதிக்கு சென்றார் ஒர் மனைவி .இறுதிகிரியைகள் எப்படிநடக்கனும்னு கூட அட்வான்ஸா முடிவு செய்பவர்கள் வெளிநாட்டினர் !

    ReplyDelete
    Replies
    1. கலாச்சார அழுத்தங்கள் கண்டத்திற்கு கண்டம் மாறும் ...
      அந்த நிலை இங்கே வரவே வராது. கிராமங்கள் இருக்கிறவரை.

      ஆனால் பல நகரங்களில் இப்போது இதுதான் நிலை.

      Delete
  4. இன்றைய சூழலில் தேவையான பதிவு !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருக ஐயா.
      வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  5. பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையில் தொடங்கி, நடுவினில் புதுக்கோட்டை மன்னரின் மாட்சிமையைத் தொட்டு விட்டு இறுதியில் இந்நாள் கவுன்சிலர் வரை வந்து சுவையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி! பாராட்டுக்கள்!

    பொதுவாகவே புதுக்கோட்டை மக்களுக்கு இன்றும் மன்னர் பெருமை பேசும் விசுவாசம் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனை இன்று உங்கள் கட்டுரையில் கண்டேன். (தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மண்ணின் மைந்தன் பெருமை என்று கொள்ளவும்)
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் வாக்கிற்கும்!

      Delete
  6. எப்படி இருந்தாலும் பட்டேல் விட்டிருக்கா மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். முரண்டு பிடித்த ஹைதராபாத் நிஜாம்கூட கடைசியில் அடிபணிய நேரிட்டது அல்லவா?
    சுவாரசியமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. //முகநூலில் ஒரு நண்பருக்கான பதில்//
      ஹைதராபாத் மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. பட்டேல் அவரை எப்படி கையாண்டார் என்பது ஒரு பெரிய காமடி. அதிகாலை நான்கு நாலரை மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மேலாடை இன்றி புயல் வேக நடைபயிற்சியின் பொழுது மன்னரிடம் பேசுவார் பட்டேல். சொகுசு மன்னருக்கு நுரை தள்ளிவிட்டது. பயல் இப்போவே இப்படி படுத்துறானே சண்டைன்னு வந்தா என்ன பாடு படுத்துவான் என்று தோன்றியிருக்க வேண்டும். சமர்த்தாய் இந்தியாவுடன் இணைந்து விட்டார். (எனது சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர் சொன்னது)

      //பட்டேல் முயற்சி செய்திருப்பார்தான் //

      Delete
  7. அருமை சகோதரரே!

    சிறப்பான பதிவும் பகிர்வும்!

    உலக அறிவியல் நடப்புகளை அறிய
    உங்கள் பதிவுகள் மிகவும் உதவுகின்றது!..

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேகத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்றேன்...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

      Delete
  8. அதனால் தனே பட்டேலை இரும்பு மனிதர்னு சொல்லறது! நல்ல பதிவு ! அம்து நண்பரே நீங்கள் புதுக் கோட்டை பற்றி சொலியிருப்பதைப் பார்த்தால், மன்னராட்சியே நல்லாருந்துருக்குமோ!

    இறுதிக் கற்பனை சூப்பர்! அப்படித்தான் நடக்கும்! இரும்பு மனிதர் கூட வளைந்து விட வேண்டி வரலாம்...

    ReplyDelete
    Replies
    1. மின்கட்டணம் செலுத்தும் பொழுது மின்சார அலுவலகத்தில் மன்னராட்சிக் காலத்தில் மின்வாரியம் துவக்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்கும் பொழுதும், நகரெங்கும் பதிக்கப்பட்ட தாமிர குழாய்கள் மாயமாகி பிளாஸ்டிக்காண பொழுதும், தண்ணீர் தரும் குளத்தை அன்னை போன்ற அதன் கரைகளை செங்கல்களாக்கி விற்ற பொழுதும் எனக்கு இப்படி தோன்றியது உண்டு...

      உண்மையில் மக்களாட்சியில் நாம் தானே மன்னர்கள்.
      நமது பணியை ஒரு குழுவாக இணைந்து செய்ய முயலாலததின் காரணமே இந்த அவலம்.

      மன்னராட்சிக்கு ஏங்குவதை விட பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட்டாலே அல்லது முயன்றாலே மாற்றங்கள் சாத்தியமே..

      Delete
  9. அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்! தலைவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாதுதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிகளே...

      Delete
  10. நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது சார், நாம் தனி நாடு அல்லது யூனியன் பிரதேசம் எப்படி இருந்திருக்கும், ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்த விசயத்தைப் பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி சார், இன்னொன்று இந்தியாவுடன் முதலில் இணைந்த சமஸ்தானம் நமது என்று படித்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கஜானவுடன் அதன் பெரும் செல்வதுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒரே சமஸ்தானம் புதுகைதான்.

      ஆனால் முதலாவது ... வாய்ப்பில்லை. இருப்பினும் தகவல் களஞ்சியம் புதுகை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்..

      Delete
  11. அறியாத தகவல்கள்... பட்டேல் முரண்டு பிடித்தாலும் மூக்கணாங்கயிறு போடுவதில் கில்லாடி என்று வரலாறு சொல்கிறது... அப்புறம் எப்படி அடிபணியாமல் போவார்கள்....

    ReplyDelete
    Replies
    1. வரலாறு சொல்லுகின்ற பல விசயங்களில் பரப்பப்படுகின்ற விசயங்கள் பொதுப்புத்தியில் உறைகின்றது.

      திரு.குமார் அதிர்ச்சி அடையவேண்டாம். காந்தியின் கொலைக்கு ஒருவாரம் முன்பே கோட்சே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டது தெரியுமா?

      Delete
  12. வணக்கம் சகோ! தாமதத்திற்கு மன்னிக்கவும். பெரிய பதிவாக இருப்பதால் சரி நாளை பார்ப்போம் என்று விட்டால் அடுத்த பதிவு தொடர்ந்து பதிவு போட நான் திக்கு முக்காடி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நேரமும் கொஞ்சம் பற்ராக் குறையாகவே இருப்பதால் வந்த வினையே இது தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
    அது சரி தலைவர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது தான். ஆனால் பாவம் இல்ல எப்படி இதனால் மன அழுத்தம் தான் வரும் இல்ல. அதனால் தான் மன்னர்களை போற்றிப் பாட புலவர்களும். ஆடல் பாடல்களும் தினமும் இருந்திருக்குமோ என்னமோ.எல்லாவறையும் மறக்கடிக்க இல்லையா சகோ ! அறியாத விடயங்கள் அறிந்தேன். மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  13. தங்களுக்குள் எழும்பிய கேள்வியே, எனக்குள்ளும் எழும்பியிருக்குறது. உண்மையில் இதுவரை அதற்கான விடை தெரியாமல் தான் இருந்து வந்தேன். இப்போது தங்களால் முழுவதுமாக புரிந்து கொண்டேன். அதற்கு முதலில் என்னுடைய நன்றி.

    தெரியாத வரலாறு. என் சொந்த ஊரின் (காரைக்குடி) பக்கத்து ஊருக்கு அவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைத்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உண்மையானவரே..

      Delete
  14. புதிய செய்தி எனக்கு...இன்னும் புதைந்து கிடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் சகோ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete

Post a Comment

வருக வருக