டெல்லி சம்பவம்


வழக்கமாக மனித மிருகங்கள் செய்கிற குற்றத்திற்காக மக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்த டெல்லி (கற்பழிப்பு), முதன் முறையாக மிருகம் செய்த செயலுக்காய் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய வழக்கமாக 'கல்தா' வார்த்தையை பயன்படுத்தும் செய்தித்தாளில், இறந்தவர் 12 ஆம் வகுப்பு மாணவர் என அவசரமாக அச்சேற்றி விற்பனையாக்கியிருக்கிறார்கள்.



இன்னொரு புறம், 'செத்துப் போனதை செல்லில் எடுத்த காட்சியை' ஷேர் செய்ய,அதைக் கண்டு லைக்கும்,கமென்டும் போட்டு கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர் முக நூலியர்கள்.

இருக்கட்டும்...

இறுதியாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்,
1.அவருக்கு வயது 20.மன நிலை பாதிக்கப்பட்டவர். திருமணமாகி குழந்தையுமிருக்கிறது. ஆனால் மனைவி பிரிந்து
சென்றுவிட்டார்.பெற்றோரோடும்,சகோதரனோடும் வசித்து வருகிறார்.

2. சுற்றுச் சுவரின் மீது (சுவரென அழைக்கப்படும் சிமென்டு கட்டை) இருமுறை ஏறிய போதும் காப்பாளர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
அதையும் மீறி உள்ளே குதித்திருக்கிறார்.

3. சுமார் 15 நிமிட நேரம் புலி அவரைக் கொல்லாமல் வேடிக்கை பார்த்திருக்கிறது. பொதுமக்களும் வேடிக்கை மட்டும் பார்த்திருந்திருக்கலாம் போல.
காப்பாற்றுவதாக நினைத்து, கல்லெறிந்திருகிறார்கள்.

4. காப்பாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் எதிர்ப்புறம் நின்று தங்களது தடிகளால் தட்டி புலியை திசை திருப்பிப் பார்த்திருக்கிறார்கள்.
என் கேள்வி:

புகழ்பெற்ற,தினமும் 5 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்லக் கூடிய ஒரு மிருகக் காட்சி சாலையில் மேற்புற சுவர், சிறிதாக இருக்கிறதெனக் கேட்டால், விதிமுறைகளில் உள்ள அளவின் படியே இருக்கிறது என்கிறீர்கள் சரி.இருந்துவிட்டுப் போகட்டும்.

மயக்கமருந்து என்று ஒன்றை ஊசி மூலமாக துப்பாக்கியால் செலுத்துவார்களே? (tranquilizer guns), அது எங்கே எனக் கேட்டால், மருத்துவமனையிலிருக்கிறது என்கிறீர்கள்.

மருத்துவமனை எங்கே எனக் கேட்டால், அரை கி.மீ. தூரத்தில் இருக்கிறது என்றும், அந்த மருந்து வந்தாலும் லோடு செய்ய நேரமும் பிடிக்கும் என்கிறீர்கள்.

என்ன பதிலிது?

"இதில், அவன் செய்த தவறிற்கு, மிருகக் காட்சி சாலையில் பணியாற்றுவோர் என்ன செய்வார்கள்?

அவர்கள் மீது தவறென்ன இருக்கிறது ?"
-என சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது,
இன்னும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

யாருக்கு மன நிலை சரியில்லை எனத் தெரியவில்லை.
குழந்தையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றுதான்.
பாம்பைக் கண்டதும், குழந்தை பயந்து ஓடாது.

அதை பிடிக்கத்தான் சிரித்துக் கொண்டே ஓடும்.
குழந்தை உங்களுடையது என்றால் என்ன செய்வீர்கள்?
-பதிலை உங்கள் மனசாட்சியிடம் சொல்லிக் கொள்ளுங்கள்.

ஜெயப் பிரபு

----
உண்மைகளை நிதானமாக அலசிய பக்குவப்பட்ட பதிர்க்கைப்பார்வை இருந்ததால் அனுமதி பெற்று பகிர்ந்தேன் ...
நன்றி ஜெயப்ரபு

அன்பன்

மது

Comments


  1. பிரச்சனை என்று வரும் போது அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பயிற்சி அந்த பணியாளர்களுக்கு சொல்லி தரப்படவில்லை அதுதான் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம்

    ReplyDelete
  2. பகிர்தலுக்கு நன்றி நட்பே!

    ReplyDelete
  3. வணக்கம் சகோ!
    அலட்சியம் எல்லாவற்றிற்கும் அடிப்படை. உயிர்காக்கும் மருத்துவமனைகளில் கூட மருத்துவர் இல்லை என்று உயிருக்கு போராடும் நபரைக் காத்திருக்க வைப்பது எல்லாம் அரங்கேறுகிறது. டெல்லி சம்பவம் எம்மாத்திரம்? சக மனிதனின் கோபம் இப்பதிவில் தெரிகிறது. நண்பருக்கு பாராட்டுகள். பகிர்ந்த என் சகோவிற்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. உண்மைதான் சார், வேறு முறைகளில் முயற்சிக்காவிட்டாலும் , மயக்க மருந்து கொடுத்தாவது காப்பாற்றியிருக்கலாம்... அவ்வளவும் அஜாக்கிரதை தான், பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  5. நல்ல பதிவுப் பகிர்வு நண்பரே! அவரது கேள்விகள் அத்தனையும் மிகச் சரியே அதுவும் இறுதியாகக் கேட்டிருப்பது...மன நிலை சரியில்லாதவரும், குழந்தையும் ஒன்றே....மிக மிக மிகச் சரியே!

    ReplyDelete
  6. முகநூலில் எல்லாப் பதிவுகளுக்கும் லைக் மட்டும்தான் அதில் சிந்தனையோ, ஆராய்ச்சியோ இல்லை. வருத்தமான செய்தியாக இருந்தாலும்...லைக்குதான்...

    மனிதன் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றான்? இது மிகப் பெரிய கேள்வி.....

    ReplyDelete
  7. "குழந்தையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றுதான்."

    மிகச்சரி. ஆனால் குழந்தையைப் பார்த்தவுடன் அது குழந்தை என்று தெரியும். பொது இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண முடியும்? அவர்களை தனியாக வெளியே நடமாடவிட்ட அந்தந்த குடும்பத்தார்கள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வரும் இடத்தில் இத்தகைய மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிங்கத்தின் பகுதிக்குள் குதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மிருகக் காட்சிசாலை ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி வார்டு அல்லவே.

    ReplyDelete
  8. ஜெயப்ரபு அவர்களின் கேள்விகள் நியாயமனது. இந்த நிகழ்வுக்கு பிறகாவது, மிருக காட்சி சாலையின் நிர்வாகத்தினர் முழித்துக்கொள்வார்களா?

    ReplyDelete
  9. மனித மிருகங்களின் அலசியதால் இவர் தேசிய விலங்கால் கொல்லப்பட்டுள்ளார்...

    ReplyDelete
  10. முறையான பாதுகாப்பு இன்மையே விபத்திற்கு காரணம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. யாருக்கு மன நிலை சரியில்லை எனத் தெரியவில்லை.
    குழந்தையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றுதான்.
    பாம்பைக் கண்டதும், குழந்தை பயந்து ஓடாது.

    அதை பிடிக்கத்தான் சிரித்துக் கொண்டே ஓடும்.
    குழந்தை உங்களுடையது என்றால் என்ன செய்வீர்கள்?
    -பதிலை உங்கள் மனசாட்சியிடம் சொல்லிக் கொள்ளுங்கள். மிகச் சரியே நல்ல பதிவு இதனை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு பாராட்டுக்கள். மிக வேதனை தரும் பதிவு. எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் அவர்கள் தந்த பதிலும் எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. நன்றி வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete

Post a Comment

வருக வருக