மதுரை பதிவர் மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதி செய்த விசயங்களில் ஒன்று சகோதரி கீதா அவர்களின் ஒரு கோப்பை மனிதம்.
திடீரென மகிழ்நிறையை அழைத்து ஒரு முன்னுரை தருக எனக்கேட்க நான்தான் நல்லா மாட்டிக்கிட்டேன். எதையும் பொறுப்போடு செய்யும் அம்மணி மகிழ்நிறை. லாப்பில் முழுத்தொகுப்பினையும் மின்வடிவத்தில் படித்து ஒரு உரையைத் தயார் செய்துவிட்டார்கள்.
என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. அதை நான்தான் தட்ட வேண்டும் என்று சொல்லி தட்டச் செய்தார்கள். (இல்லாவிட்டால் நான் தட்டப் படும் அபாயம் இருந்ததால் வேறு வழி?) உரை நன்றாகவே இருந்தது ஆனால் நான் நூல் வெளியீட்டிற்கு பின்னர்தான் நூலைப் படித்தேன்.
கவிஞர் வைகறையின் மதிப்புரையும், கவிஞர் இனியா அவர்களின் அணிந்துரையும் அருமை. கவிஞர் இனியா இப்படி விரிவாக எழுதுவார் என்பது அவரது கவிதைகளை அவரது தளத்தில் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு பெரும் ஆச்சர்யம்.
கவிதைகள் முகநூலில் பலமுறை படித்தவைதான் எனினும் புத்தக வடிவில் பார்க்கும் பொழுது ரொம்ப புதுசா தெரிந்தன கவிதைகள். புத்தகம் என்பதின் முழு அனுபவத்தையும் எனக்கு உணர்த்தியது அந்த நிமிடம்.
அட்டைப்பட வடிவமைப்பே அசத்தலாக இருந்தது. கேட்டபொழுது நானே வடிவமைத்தேன் என்று ஆச்சர்யப்படுத்தினார் கவிஞர் கீதா. அழகான கவிதைகளை தந்தவருக்கு அட்டைப்படத்தை பாங்காய் வடிவமைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லைதானே?
இன்னொரு விசயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அது அய்.எஸ்.பி.என்!
(978-93-83812-09-7, International Standard Book Number). பொதுவாய்ச் சொன்னால் இந்த எண் சர்வதேச அளவில் ஒரு புத்தகத்தை அடையாளப்படுத்தும்.
ஒரு கவிதை நூலில் இதைப் பார்ப்பது அரிது!
புரட்டியவுடன் நம்மை நனைக்கும் மழைக் கவிதை!
மழையோடு
மழைக்கால
சன்னலோர பயணத்தில்
சாரல் முகம் தடவ
சில்லென்ற தென்றலில்
சிலிர்த்த உடல் பூவென மலர
மகிழ்ந்த மழை வேகமாய்
உள்நுழைந்தது நனைத்திடவே!
தடுக்க எண்ணி சன்னல் சாத்த
மேற்கூறைவழி கள்ளனாய்
மேல்நனைக்க
மழைக்கு உதவியது
அரசு பேருந்து...!
விட்டிறங்கி கலந்தேன்
மழையோடு மழையாய்....
மகிழ்வாய்..
மழையும் காதலும் எத்துனை முறை பாடப்பட்டாலும் நமது விழிகளை ஈர்க்காமல் போகாது என்பதை நான் உணர்ந்தேன்.
பட்டாசாய் வெடித்து நம்மை அதிரவைக்கும் பட்டாசு கனவில் கவிதை மனதைப் பிசைகிறது.
பருவத்தின் வாசலில் கவிதையில் சிறகுகள் வெட்டுப்பட்ட பட்டாம்பூச்சிக்கு நாம் இரங்குகிறோம்.
ஆ கேட்கும் கேள்வியும் அதன் கவிதைப் பாணியும் தனியொரு வாசித்தல் அனுபவத்தைத் தருகின்றன.
இன்னொரு இடத்தில்
தோட்டிச்சிப் பாட்டிக்கு சோப்பு
வாங்க யார் கொடுப்பா காசு ?
என்கிற கேள்வி எனது கள்ள மௌனத்தின் மீது கல்லெறிந்து கேலிசெய்கிறது.
பதம் பார்க்கும் பதங்கள் என்கிற கவிதை "ம் ம் ம்" ... தான்!
காதலில் "ம்" ன் வலிமை
கற்பனைக்கெட்டாதது
என்று கவிஞர் ஜகா வாங்கியிருப்பது கவித்துவம்.
என்னால் மறக்கவே முடியாத ஒரு கவிதை "வருடல்"
அடிக்கடி கை தடவுகிறது
மகனைச் சுமந்த வயிற்றை
முதியோர் இல்ல மூதாட்டி
ரயில் பிரயாண நிறுத்தங்களை
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
கருதரிப்பும், பிரசவமும்
கணக்கின்றி
என்று கவிஞர் சொல்கிற பொழுது வியப்பூட்டும் ஒரு பார்வைக் கோணத்தை அறிந்தேன்.
கானல் நீராய் சொல்லும் உள்மனத்தாபங்கள் ஒரு கவிச்சோகம் என்றாலும் அழுத்தமான கவிதை அது. ஏகத்துக்கும் மனசை அழுத்தும் கவிதை அது.
இன்னும் என்னை அசத்தி ஆச்சர்யப்படுத்திய கவிதைகள் ஏராளம் இருந்தன புத்தகத்தில்.
அவ்வளவையும் சொல்லு என்போருக்கு. இஸ்க் இஸ்க். வாங்கிப் படிங்கப்பா.
மிக முக்கியமாக விடம் என்கிற கவிதை. எங்கள் ஊர் கந்துவட்டி சோகம் அது. விடமருந்தி மாண்டுபோன தோழி குறித்து மிகத் தைரியமாக எழுதியவர் கவிஞர் கீதா.
இப்படி ஒரு படைப்பாளியையும் அவரது சூழலையும் அருகே இருந்து பார்ப்பதே ஒரு அலாதி அனுபவம். சூழலில் எழும் உணர்வுகள் கவிதையில் வடிகின்றபோழுது அவை பெரும் வீச்சைப் பெறுகின்றன.
சகோதரியின் தொகுப்பும் அந்த வீச்சைப் பெறும். உங்களின் ஆதரவோடு.
நன்றி
அன்பன்
மது
ஆஹா அழகான விமர்சனம் எனது நூலா இப்படி என வியக்கும் வகையில்.உடனே படித்து எழுதியமைக்கு நன்றி சகோ...மறக்க முடியாத பயணம்...அனைவரோடும் சென்றது..
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteஇதுதான் படைப்புக்கு கிடைக்கும் வெற்றி...
பல கவிதைகள்
என் நினைவோடு தேங்கி இருக்கும்
வருடல் அவற்றில் ஒன்று
மதுரை பதிவர் மாநாட்டில்'ஒரு கோப்பை மனிதம் 'நூலை அறிமுகம் செய்த விதம் ,நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது .இனிமேல்தான் படிக்க வேண்டும் !
ReplyDeleteமதுரை பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி !
த ம 2
நன்றி...
Deleteஉங்களைச் சந்தித்தது ஒரு பெரிய ஆச்சர்யம்..
விரைவில் பதிவிடுகிறேன்.
அய்.எஸ்.பி.என் - அரிய தகவல்...!
ReplyDeleteரசனையை ரசித்தேன்...
நன்றி அண்ணா..
Deleteவிமர்சனம் அருமை அண்ணா. கவிதைகளை வலைத்தளத்திலும் முகநூலிலும் படித்திருக்கிறேன்..நூல் வாங்கியிருக்கிறேன், ஓரிரு வாரங்கள் கழித்து அதைப்பற்றி எழுதுவேன்.
ReplyDeleteநல்லபடி பயணம் செய்து செட்டில் ஆகி பின்னர் எழுதவும்.
Deleteஇவ்வளவு வேகமாப் படிச்சு இத்தனை அழகா விமர்சனமும் செய்கிற உங்களை வியக்கிறேன் மது. அசத்தலான கவிதைகள் படைத்திருக்கிற கீதாவுக்கு மனம் நிறைய நல்வாழ்த்துகள். விரைவில் படிச்சுட்டு நானும் எழுதறேன்.
ReplyDeleteவாருங்கள் வாத்தியார்.
Deleteஎல்லாம் உங்கள் பாதிப்புதான்
நூல் விமர்சனம் அருமை.
ReplyDeleteபடிக்க தூண்டுகிறது.
வருக உணமையானவரே..
Deleteநன்றி
ஒரு வித்தியாசமான தருணத்தில் உங்களுடன் நிகழ்ந்த அறிமுகம் மறக்க முடியாத ஒன்று சார்...
ReplyDeleteஎல்லாம் சரி, ஆனாலும் நீங்க தட்டினா மட்டும் உங்களைத் தட்டாமலா இருக்கப் போறாங்க ;-)
நல்லா எழுதுறீங்க சீனு தொடர்க
Deleteவருகைக்கு நன்றி
:-)
KANINI ILLAMAL ENADU KAIKAL KATTI POTAPPATTU IRUKKIRATU....
ReplyDeleteஅருமையான விமர்சனம்..... கீதா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
ReplyDeleteபுத்தகம் எங்கே கிடைக்கும் என்ற விவரமும் சொன்னால் நல்லது. அஞ்சல் வழி பெற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்....
அழகிய விமர்சனம் சகோ பாராட்டுக்கள் ...! அதிலும் என் பெயர் குறிப்பிட்டு ம்..ம்..ம்..மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். நானும் நினைக்கவேயில்லை குறுகிய காலத்தில்தோழி கீதா எழுதும்படி கேட்க எனக்கு ஒரே திகைப்பு தான்.இருந்தும் எழுதியது எனக்கும் ஆசார்யம் தான் சகோ. கீதாவுக்கும் என் பாராட்டுக்கள்.
ReplyDeleteகுறுகிய காலத்தில் எழுதியதா?
Deleteஅவ்வளோ அழகு...
வாழ்த்துக்கள் சகோதரி
ரயில் பிரயாண நிறுத்தங்களை
ReplyDeleteஒவ்வொரு நிறுத்தத்திலும்
கருதரிப்பும், பிரசவமும்
கணக்கின்றி//
என்ன ஒரு அருமையான வித்தியாசமான யாருமே சிந்தித்துப் பார்த்திராத கோணத்தில் வரிகள்! அருமை அருமை!
அருமையான விமர்சனம் நண்பரே! வாழ்த்துக்கள் சகோதரி!
நன்றி தோழர் நிறுத்தி நிதானமாக படித்துக் கருத்திட்டமைக்கு ..
Deleteசிறப்பான நிறைவான விமர்சனம் ஐயா...
ReplyDeleteவிமர்சனம் நன்றாக இருக்கிறது, சொல்லும் மிகத் தோழமையாக இருக்கிறது.
ReplyDelete